ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் !
தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் மையங்கள்- 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் !
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கூறியதாவது,
தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது.
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் பன்மடங்கு கொரோனா தொற்று உயர்ந்துள்ளது. கர்நாடகா, டெல்லி, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் ஏறுமுகமாகவே உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மகாராஷ்டிரா மாதிரி பன்மடங்கு உயராமல் படிப்படியாகத்தான் உயருகிறது. கொரோனா பன் மடங்கு உயராமல் தடுக்க பொதுமக்கள் இந்த காலகட்டத்தில்தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
முககவசம் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொள்ளு...









