ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பொதுமக்களின் கேள்விகளுக்கு உடனடி பதில் போட்டு டிவிட்டரில் அசத்தும் முதல்வர் EPS

பொதுமக்களின் கேள்விகளுக்கு உடனடி பதில் போட்டு டிவிட்டரில் அசத்தும் முதல்வர் EPS

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டிவிட்டர் அரசியல்.   கமல்ஹாசன் அரசியல் கட்சி அறிவிப்பு செய்த நேரத்தில் தனது கருத்துக்களை டிவிட்டர் என அழைக்கப்படும் சமூக வலைதள பக்கத்தில்தான் பதிவிடுவார். அதனால் அவரை டிவிட்டர் அரசியல்வாதி என்றே விமர்சனங்கள் செய்தார்கள். பின்னர் கமல் பதிவுகள் குறைந்துவிட்டது. இப்ப கொரானா காலம்... இப்ப டிவிட்டர் பதிவுகளில் பட்டையை கிளப்பி அதிரடி அரசியல் செய்து வருவது தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான். அதிலும், கொரானா தடுப்பு நடவடிக்கைகள் ஒரு பக்கம் எதிர்க் கட்சிகளின் விமர்சனங்கள் இன்னொரு பக்கம் தன் கட்சியிலேயே ஏற்படும் இடர்கள் என பலவகையான பணிகளில் பரபரப்பாக பணியாற்றி வருகிறார். இத்தனை பணிகளுக்கு மத்தியில் அவரது டிவிட்டர் பக்கத்தில் பொது மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் பதில் அளித்து அசத்தி வருகிறார் முதல்வர்...
தமிழகத்துக்கு வந்த கொரானா ரேபிட் கிட் கருவிகளை வழிமறித்து பறித்து கொண்ட மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!

தமிழகத்துக்கு வந்த கொரானா ரேபிட் கிட் கருவிகளை வழிமறித்து பறித்து கொண்ட மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தமிழகத்துக்கு வந்த கொரானா ரேபிட் கிட் கருவிகளை வழிமறித்து பறித்து கொண்ட மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்! இது குறித்து சீமான் வெளியிட்ட அறிக்கை: கொரானா நோய்த் தொற்று பரவலால் இந்தியாவிலேயே அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிற மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்திலிருக்கிற இவ்வேளையில், நோய்த் தொற்று குறித்து சோதனை செய்ய சீனாவிலிருந்து தமிழக அரசு இறக்குமதி செய்த 4 இலட்சம் வெகுவிரைவுக் கருவிகளை (RAPID TESTING KIT) மத்திய அரசு இடைமறித்து தன்வசப்படுத்தியிருப்பது எதனாலும் சகிக்கமுடியாத தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். பாஜக அரசு பதவியேற்றது முதல் தொடர்ச்சியாக தமிழின விரோத நடவடிக்கைகளை, தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் பணிகளை திட்டமிட்டு செய்துவருகிறது. துயர் சூழ்ந்த இந்த பேரிடர் காலத்தில் கூட மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்க...
அரசின் வழிகாட்டுதல்படி தன்னார்வலர்கள் கொரானா நிவாரண உதவிகள் செய்யலாம் – கமிஷனர் விஸ்வநாதன் விளக்கம்

அரசின் வழிகாட்டுதல்படி தன்னார்வலர்கள் கொரானா நிவாரண உதவிகள் செய்யலாம் – கமிஷனர் விஸ்வநாதன் விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனா நிவாரணம் : தன்னார்வகளின் சேவைக்கு தடையில்லை. அரசுடன் இணைந்து செயல்படும் வகையில் விதிமுறை வகுக்கப்பட்ள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. கே. விசுவநாதன் விளக்கம்! கொரோனா வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றும் தன்னார்வ அமைப்புகளின் தொண்டு வரவேற்பு க்கும் பாராட்டுதலுக்கும் உரியதாகும். தன்னார்வ அமைப்புகள் சேவையாற்ற எந்த தடையும் விதிக்க வில்லை. ஊரடங்கு காலம் என்பதால் அந்த விதிமுறைகளை பின்பற்றிடவும், தொற்று நோயினால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பான முறையில் சேவையாற்றும் விதிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளது. தன்னார்வ அமைப்புகள் தாங்கள் சேவையாற்ற விரும்பும் பகுதிகளிலுள்ள காவல்துறை _வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து பாதுகாப்பான முறையில் சேவையாற்றலாம். தன்னார்வ அமைப்புகள் சேவையாற்ற தடை என சொல்ல வில்லை. பாதுகாப்பாக சேவையாற்றுமசேவையாற்றவே வலியுறுத்தி உ...
கொரானா பீதியால் மூடப்பட்ட தியேட்டர்களை சூறையாடும் எலிகள்… தொடரும் அதிர்ச்சி!

கொரானா பீதியால் மூடப்பட்ட தியேட்டர்களை சூறையாடும் எலிகள்… தொடரும் அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    கொரானா பீதியால் மூடப்பட்ட தியேட்டர்களை சூறையாடும் எலிகள்... தொடரும் அதிர்ச்சி! கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது. ஊரடங்குக்கு முன்பே பாதுகாப்பு கருதி தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் மூடி விட்டார்கள். இதனால் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பே கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு மேலாகவே திரையரங்குகளும் மூடப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் சென்னையின் மையப்பகுதியில் உள்ள பிரலமான ஷாப்பிங் மால் ஒன்றில் உள்ள திரையரங்குகள் இரண்டு வாரங்களுக்கும் மேல் மூடப்பட்டுள்ளதால் திரையரங்குகளை பராமரிக்க அரசின் அனுமதியை பெற்று சமீபத்த...
அரசும் எதிர்க்கட்சியும் அரசியல் விளையாட்டை நிறுத்தி விட்டு மக்களை காப்பாற்றும் பணியில் கவனம் செலுத்துங்கள் – டிடிவி தினகரன் அறிக்கை

அரசும் எதிர்க்கட்சியும் அரசியல் விளையாட்டை நிறுத்தி விட்டு மக்களை காப்பாற்றும் பணியில் கவனம் செலுத்துங்கள் – டிடிவி தினகரன் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அரசும் எதிர்க்கட்சியும் அரசியல் விளையாட்டை நிறுத்தி விட்டு மக்களை காப்பாற்றும் பணியில் கவனம் செலுத்துங்கள் - டிடிவி தினகரன் அறிக்கை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரானா பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் அரசியல்கட்சிகளும், தன்னார்வ சேவை அமைப்புகளும் அரசுக்கு எல்லாவகையிலும் பக்கபலமாகவே இருந்து வருகின்றன. ஆனால் 20 நாட்களாக ஊரடங்கு தொடர்வதால் பல இடங்களில் அன்றாட வருமானத்தை நம்பியிருந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை,எளிய மக்கள் பலரும் உணவுக்காகவும், உணவுப் பொருட்களுக்காகவும் தத்தளித்து வரும் செய்திகள் வந்தபடியே இருக்கின்றன. அதனால்தான் அவர்களுக்கு உதவ மற்றவர்கள் முன்வருகிறார்கள். ஒடிசா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் செய்வதைப் போன்று அரசே சமுதாய உணவகங்களை ஏற்படுத்தி பசித்த வயிறுகளுக்கு உணவிட்டிருந்தால், மற்றவர்க...
நிவாரண உதவி என்ற பெயரில் மூத்த கலைஞர்களை அவமானப்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ளுகிறதா எழுத்தாளர் சங்கம்!

நிவாரண உதவி என்ற பெயரில் மூத்த கலைஞர்களை அவமானப்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ளுகிறதா எழுத்தாளர் சங்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நிவாரண உதவி என்ற பெயரில் மூத்த கலைஞர்களை அவமானப்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ளுகிறதா எழுத்தாளர் சங்கம்! கொரானா கொடூரத்தால் முடங்கி உள்ள திரைத்துறையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய திரைப்பிரபலங்கள் பெப்சிக்கு நிவாரண பொருட்களையும், நிதி உதவியையும் அளித்தனர். இந்த உதவிகளை பெற்றுக் கொண்ட பெப்சி அதை தனது கூட்டமைப்பில் உள்ள சங்கங்களுக்கு பிரித்து கொடுத்தது. வந்த எல்லா உதவிகளும் முறையாக பிரித்து கொடுத்ததா எனற கேள்விக்கு பின்னர் வருவோம். அப்படி வழங்கப்பட்ட நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட சங்கங்களில் ஒரு சில சங்கங்களைத் தவிர மற்றவர்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு சத்தமில்லாமல் கொடுத்து வருகிறது. அதில் குறிப்பாக திரைத்துறையில் படைப்புகளை உருவாக்கி சாதனை படைத்த மூத்த உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் எழுத்தாளர்கள் சங்கத்திலும் இந்த நிவாரண பொருட்களை வழங்கும் செயலை ஒரு வ...
தன்னார்வலர்கள் உதவி செய்ய கூடாது என்று தடுப்பது அதிமுகவின் சர்வாதிகாரத்தனம். கருணையில்லா ஆட்சி – திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்

தன்னார்வலர்கள் உதவி செய்ய கூடாது என்று தடுப்பது அதிமுகவின் சர்வாதிகாரத்தனம். கருணையில்லா ஆட்சி – திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தன்னார்வலர்கள் உதவி செய்ய கூடாது என்று தடுப்பது அதிமுகவின் சர்வாதிகாரத்தனம். கருணையில்லா ஆட்சி - திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம் கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருட்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிவாரணப் பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது என்றும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில்,  தன்னர்வலர்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக உதவி அளிக்கக்கூடாது என அரசு உத்தரவிடுவது சர்வாதிகாரத்தனம் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில்...
நிவாரண உதவிகள் வழங்க எதிர்க்கட்சிகள், தன்னார்வலர்களுக்கு கடிவாளம் போட்ட தமிழக அரசு!

நிவாரண உதவிகள் வழங்க எதிர்க்கட்சிகள், தன்னார்வலர்களுக்கு கடிவாளம் போட்ட தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நிவாரண உதவிகள் வழங்க எதிர்க்கட்சிகள், தன்னார்வலர்களுக்கு கடிவாளம் போட்ட தமிழக அரசு! கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பித்து இருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலருக்கும் நிவாரண உதவிகளை பலரும் வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் ஊரடங்கு நீடிக்கப்படும் என்ற நிலை நீடிப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பலரும் களம் இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவும் என கூறப்பட்டதால் தன்னார்வலர்கள் செய்யும் நிவாரண உதவிகளை தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு, ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருட்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதோடு, “நிவாரண நிதியாக இருந்தால் முதல்வர் நிவாரண நிதிக்கும், நிவாரண பொருளாக இருந்தால் சென்னை மாநகராட்சி ஆணையரிடமும் தரலாம். அ...
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் மாநிலங்கள்… மத்திய அரசின் ஊரடங்கு திட்டம்!?

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் மாநிலங்கள்… மத்திய அரசின் ஊரடங்கு திட்டம்!?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் மாநிலங்கள்... மத்திய அரசின் ஊரடங்கு திட்டம்!? கொரானா பரவலை தடுக்க நாடு முழுதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் ஒட்டுமொத்த தொழிலும் முடங்கிப் போய் பலகோடி மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள். எப்படியும் இன்னும் சில நாட்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு கொரானா வைரஸ் பரவல் தொடர்ந்து பரவி வருவதால் பல மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீடித்து அம்மாநில அரசுகள் அறிவித்து விட்டது. அதே நேரம் தொடர் ஊரடங்கால் ஒட்டுமொத்த தொழில்களும் முடங்கிப் போனதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடுத்த வேலை உணவுக்கே வழி இல்லாமல் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்தார்கள். அதே போல பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண நிதி உதவி அளிக்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் க...
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு பா.சிதம்பரம் வேண்டுகோள்

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு பா.சிதம்பரம் வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு பா.சிதம்பரம் வேண்டுகோள் உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரானா இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக அதிக அளவில் பரவி வருவதை அடுத்து மத்திய மாநில அரசுகள் மிக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பரவலை தடுக்க நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 14ஆம் தேதி முடிகிறது. அதே நேரம் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பல மாநில முதல்வர்கள் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. சில மாநில முதல்வர்கள் அறிவித்து விட்டார்கள். இருப்பினும் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்க...