நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு!
நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு!
உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி பல லட்சம் மக்களை தாக்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி மிக வேகமாக பரவி வரும் கொரானா பரவல் தமிழகத்திலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது.
வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் ஊர் திரும்பிய அனைவரும் தங்களை தாங்களே தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது.
காரணம் அவர்கள் மூலமாகவே கொரானா தொற்று அதிக அளவில் பரவும் வாய்ப்புகள் இருப்பதால் இந்த நடைமுறைகள் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் தமிழகம் திரும்பிய திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களை தாங்களே தனிமை படுத்தி கொண்டுள்ளனர்.
இயக்குனர் மணிரத்னம் மகன் நந்தனும் சமீபத்தில் லண்டனில் இருந்து சென்னை திரும்பியதால் வீட்டில் தனிமைபடுத்திக் கொ...









