பட்ஜெட் கூட்டத்தொடர் - பாராளுமன்ற முதல் அமர்வு இன்று கூடுகிறது!
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட கூட்டத்தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும். அடுத்தகட்ட கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்று கூடுகிறது.
முதல் நாள் பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்உரையாற்றுகிறார்.
அப்போது அவர் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய விவரங்களை அறிவிப்பார்.
பாராளுமன்றத்தில் 2022- 2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்வார்.
இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் வரிச்சலுகைகள் அதிகளவில...
வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது டி20 போட்டி பார்படாசில் நடைபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. பொல்லார்டு 41 ரன்னும், பாவெல் 35 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேம்ஸ் வின்ஸ் 55 ரன்னிலும், சாம் பில்லிங்ஸ் 41 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்டர் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என டி20 தொடரை கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், ஹொசைன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்நிலையில், டி20 போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய நான்காவது வீரர் ஜேசன் ஹோல்டர் ஆவார்.
இவருக்கு முன்னதாக, அயர்லாந்தின் காம்பெர், இலங்கையின் லசித் மலிங்கா மற்றும் ஆப்கா...
அரசியலை தனக்கு அணுக்கமான துறையாக விஜய் கருதுகிறார்.
தன் படங்களிலிருந்தே அரசியலுக்கான விதைகளை தூவி வரும் விஜய்,
அண்மையில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கத்தை' களமிறக்கி அரசியல் ஆழம் பார்த்தார்.
அதில் விஜய்க்கு நல்ல பலனும் கிடைத்தது.
இத்தனைக்கும் அந்த தேர்தலில் விஜய்யின் புகைப்படமோ,
விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி கொடியோ பயன்படுத்த கூடாது என்ற அறிவிப்பு இருந்தபோதிலும் 169 இடங்களில் களமிறங்கி 121 இடங்களை தட்டி தூக்கினர்.
இதில் அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையேயும் கவனம் ஈர்த்தது.
இந்த தேர்தல் வெற்றி விஜய்க்கு உற்சாகத்தை அளித்திருக்க கூடும்.
அடுத்தடுத்த தேர்தல்களில் களம் காண இந்த தேர்தல் பலமான கடைக்கால் அமைத்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து விஜய் வாழ்த்தியதாக ச...
கர்நாடக மாநிலத்தில் கார் வாங்கும் ஆர்வத்துடன் ஷோ ரூமுக்கு சென்ற விவசாயி ஒருவரை அங்கு பணியிலிருந்து விற்பனை பிரதிநிதிகள் அவரை பார்த்து உருவக் கேலி செய்துள்ளனர்.
இந்த செய்தி தேசிய அளவில் பரவியது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கார் நிறுவனமான மஹேந்திரா நிறுவனம் இதற்கு அவரிடம் கடிதம் மூலம் வருத்தத்தை தெரிவித்துள்ளது.
அதோடு அவருக்கு பொலேரோ காரையும் டெலிவரி செய்துள்ளது.
தும்கூர் மாவட்டத்தில் உள்ள ராமன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கெம்ப கவுடா. விவசாயியான இவர் கார் வாங்கும் நோக்கத்தில் அங்குள்ள மஹேந்திரா கார் விற்பனை ஷோ ரூமுக்கு சென்றுள்ளார். அவர் தனக்கு பிடித்தமான காரின் விலையையும் கேட்டுள்ளார்.
ஆனால் அந்த ஷோ ரூமிலிருந்து பிரதிநிதிகள், ‘இந்த கார் விலை 10 லட்சம் ரூபாய்; உன் பாக்கெட்டில் 10 ரூபாய் இருக்குமா?’ என ஏளனமாக பேசி அவரை கேலி செய்துள்ளனர்.
&nb...
மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்த கவர்னர் ஆர்.என்.ரவி சென்றபொழுது, அங்கு ‘வாழ்க திராவிடம், திராவிட நாடு வாழ்க’ என்ற பாடல் பாடப்பட்டது.
மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள காந்தி திருவுருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப் படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மரியாதை செலுத்தியிருந்தார்.
இதற்காக நிகழ்விடத்திற்கு அவர் காரிலிருந்து இறங்கி சென்ற பொழுது, “வாழ்க வாழ்க திராவிடர்; வாழ்க திராவிட நாடு; வாழ்க!” என்ற பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலை சர்வதேச இசை சங்கம் குழுவினர் மற்றும் பள்ளி மாணவிகள் பாடலைப் பாடினர்
முதலமைச்சர் ஸ்டாலின் வரும்பொழுது `மகாத்மா காந்தி வாழ்க; பாரத நாடு வாழ்க’ என்ற பாடல் ஒலிபரப்பானது. ஆளுநர் வருகை தரும் போது திராவிட நாடு பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
&nb...
பிப்ரவரி 1 முதல் கடற்கரைக்கு செல்ல அனுமதி- சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
சென்னையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை தமிழக அரசு அமல்படுத்தியது.
அதேபோன்று வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், தேவாலயங்களுக்கு மக்கள் செல்லவும், அனைத்து நாட்களும் கடற்கரைகளுக்கு செல்லவும் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை தமிழக அரசு ரத்து செய்தது. இதை தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதேசமயம் கடற்கரைகளுக்கு கூட்டமாக மக்கள் ச...
மிக நீண்ட பாரம்பரியம் மிக்க தேசிய கட்சியான காங்கிரசுக்கும், பலம் வாய்ந்த ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜனதாவுக்கும் தமிழகத்தில் மாநில கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் நேரங்களில் தண்ணீர் காட்டி வருகின்றன.
இதனால் காங்கிரசும், பா.ஜனதாவும் விழிபிதுங்கி தவிக்கின்றன.
பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் அப்படி என்றால் இப்போது உள்ளாட்சி தேர்தலிலும் படாதபாடு படுகின்றன.
2011-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் காங்கிரசுக்கு தி.மு.க. 14 இடங்களை கொடுத்தது.
அப்போது மொத்த வார்டுகள் 155 தான். இப்போது வார்டு எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால் காங்கிரசுக்கு ‘அந்த 14’ மட்டும்தான். வேண்டுமானால் மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 இடங்கள் தரலாம் என்று கூறுவதாக கூறப்படுகிறது.
ஆனால் காங்கிரஸ் தரப்பில் சட்டமன்ற தொகுதிக்கு 2 வீதம் 21 சட்டமன்றத்துக்கும் 42 தொகுத...
அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. மனு தாக்கல் முடிவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன.
ஆனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்கள் தொடர்பாக மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.
அப்போது அந்தந்த மாவட்டங்களில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் பேசி முடிவு செய்யும்படி கூறியுள்ளார். இதையடுத்து மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் காங்கிரசுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலே இடங்கள் ஒதுக்குவதால் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி நிலவுக...