சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி!

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வந்தது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனை கருத்தில் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ஏப்ரல் 10-ந் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்நிலையில், பிப்ரவரி 16-ம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற முழக்கத்தோடு காணொலி காட்சி மூலமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 6-ந்தேதி காணொலி காட்சி மூலம் கோவையில் பிரசாரத்தை தொடங்கிய அவர், சேலம், கடலூர், தூத்துக்குடி, ஈரோடு, குமரி ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இந்தநிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி மற்றும் உடுமலை, தாராபுரம், திருமுருகன...
பாகிஸ்தானில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை: இம்ரான்கான்!

பாகிஸ்தானில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை: இம்ரான்கான்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இம்ரான்கான் பிரதமராக இருந்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்தது முதல் அந்த நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் 4 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருக்கும் இம்ரான்கான் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் வாக்குறுதி அளித்தபடி நாட்டில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வருவதில் தனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தொடக்கத்தில் புரட்சிகர நடவடிக்கைகளின் மூலம் உடனடியாக மாற்றத்தை கொண்டு வர நாங்கள் விரும்பினோம், ஆனால் பின்னர் நமது நாட்டின் அமைப்பு அதிர்ச்சியை உள்வாங்க இயலாது என்பதை உணர்ந்தோம்” என கூறினார். மேலும் அவர் “எனது அரசு மற்றும் அமைச்சகங்கள் விரும்பிய முடிவுக...
சசிகலா, இளவரசி 11-ந்தேதி ஆஜராகுமாறு சம்மன்!

சசிகலா, இளவரசி 11-ந்தேதி ஆஜராகுமாறு சம்மன்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு! கடந்த 1991-96-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு அவர்கள் தண்டனை காலம் முடிந்து கடந்த ஆண்டு விடுதலையாகினர். இந்நிலையில், சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா, இளவரசி சிக்கினர். இந்த வி‌ஷயத்தை அப்போது சிறை அதிகாரியாக இருந்த ரூபா அதிரடியாக வெளிக்கொண்டு வந்ததுடன் சசிகலா மீதும் மற்ற சிறை அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார். பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு தனி சமையலற...
தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்- கமல்ஹாசன்!

தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்- கமல்ஹாசன்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களிடம் இருந்து 105 நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த படகுகள் ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த படகுகள் ஏலம் விடும் பணி கடந்த 7-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது:- இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் ஏலம் விடப்பட்ட படகுகளை மீட்கக் கோரியும், இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராடி வருகிறார்கள். தமிழக மீனவர்களின் நியாயமான  கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.  ...
22 ஆண்டுகால விசுவாச ஊழியருக்கு பென்ஸ் காரை பரிசளித்த தொழிலதிபர்!

22 ஆண்டுகால விசுவாச ஊழியருக்கு பென்ஸ் காரை பரிசளித்த தொழிலதிபர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தொழிலதிபர் ஒருவர் தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரை பரிசளித்து அசத்தியுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏ.கே.ஷாஜி என்பவர் மைஜி என்ற மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சுமார் 22 ஆண்டாக பணியாற்றி வரும் அனிஷ் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், அனிஷின் 22 ஆண்டுகால விசுவாசத்திற்கு பரிசாக 1 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதுதொடர்பாக ஷாஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கடந்த 22 ஆண்டாக எனக்கு ஒரு வலுவான தூணாக இருக்கிறீர்கள். தற்போது புதிய பயணக் கூட்டாளியை நீங்கள் நேசிப்பீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், அனீஷ் குடும்பத்துக்கு அளித்த காருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, ஷாஜி கடந்த இரு ஆண்டுக...
ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை!

ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  வெளிநாடுகளில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே ட்ரோன்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த தடை பிறக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ராணுவ பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்வதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ட்ரோன்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது....
லிபியா பிரதமரை கொல்ல முயற்சி: காரில் சென்றபோது துப்பாக்கிச்சூடு!

லிபியா பிரதமரை கொல்ல முயற்சி: காரில் சென்றபோது துப்பாக்கிச்சூடு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
லிபியா நாட்டின் பிரதமராக அப்துல் ஹமீத் அல் திபய்பா (வயது 62) உள்ளார். இவர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். இந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு அரசியல் குழப்பமும் நிலவுகிறது....
கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதன் பின்னர் 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. இங்கு கிடைத்த தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகின்றன.. இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கீழடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பணிகளை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இன்று(வெள்ளிக்கிழமை) காலையில் தொடங்கி வைக்கிறார். இதற்காக கீழடியில் அலங்காரப் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அகழாய்...
அவினாசி பகுதியில் வைக்கப்பட்டுள்ள லஞ்ச பேனரால் பரபரப்பு!

அவினாசி பகுதியில் வைக்கப்பட்டுள்ள லஞ்ச பேனரால் பரபரப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு கிராம நிர்வாக அதிகாரியிடம் சான்று பெற்ற பின்பே விண்ணப்பிக்க முடியும். இதனால் தினந்தோறும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சான்றிதழ் தொடர்பாக பொதுமக்கள் செல்கிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் பகுதியில் அறிவிப்பு பேனர் ஒன்றை யாரோ வைத்துள்ளனர். அதுவும் முக்கிய அறிவிப்பு என்று அந்த பேனரின் தலைப்பில் பெரிய எழுத்துகளில் அச்சிட்டு, அதற்கு கீழ் மணியக்கார அம்மாவிடம்சென்று யாரும் வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஒவ்வொரு சான்றுக்கும் எவ்வளவு லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று தொகை விவரம் அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த தொகையை கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும். மீறி ஏதாவது கேட்டால் உங்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்படும் என்றும் அந்த பேனரில் எழுதப்பட்டுள்ள...