ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

மாஸ்க், தெர்மல் ஸ்கேனர் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

மாஸ்க், தெர்மல் ஸ்கேனர் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முக கவசம், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர். அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முக கவசம், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும். தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்....
ஹாலிவுட் நடிகையும், நடிகரையும் கொரானா வைரஸ் தாக்கியது!

ஹாலிவுட் நடிகையும், நடிகரையும் கொரானா வைரஸ் தாக்கியது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  உலகம் முழுதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கத்துக்கு ஹாலிவுட் நடிகையும், நடிகர் ஒருவரும் தப்பவில்லை. குவாண்டம் ஆப் சோலஸ், டாம் குரூஸ் நடித்த ஒபிலிவியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஓல்கா குரிலென்கோ. இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதே போல் சூப்பர் ஹீரோ படங்களான ‘தோர்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் இர்டிட்ரிஸ் எல்பா தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கான மருத்துவ சிகிச்சைகள் எடுத்து வருவதாகவும் கூறியிக்கிறார்கள். இதையடுத்து ஹாலிவுட் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது. கண்ணுக்கு தெரிந்த எதிரியை எப்படியும் சமாளித்து விடலாம் கண்ணுக்குத் தெரியாத இது போன்ற வைரஸ் தாக்கத்தை எப்பட...
கொரானா பீதியால் பார்லிமெண்ட் கூட்டத்தொடருக்கு முககவசம் அணிந்து வந்த பா.சிதம்பரம்!

கொரானா பீதியால் பார்லிமெண்ட் கூட்டத்தொடருக்கு முககவசம் அணிந்து வந்த பா.சிதம்பரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பீதியால் பார்லிமெண்ட் கூட்டத்தொடருக்கு முககவசம் அணிந்து வந்த பா.சிதம்பரம்! கொரோனா வைரஸ் நோய் பீதிக்கு மத்தியிலும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மாநிலங்களவைக்கு நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் முக கவசம் அணிந்து வந்து சபை நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முக கவசம் அணிந்து வந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் முக கவசம் அணிந்து வந்தனர். ஆனால் அவர்கள் முக கவசத்தை உடனே அகற்றும்படி சபைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். ஆனால் சபைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ப.சிதம்பரம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதாவது, பாதிக்கப்படக்கூடிய தன்மையைப் பொறுத்து, முக கவசம் பயன்படுத்துவது பற்றி உறுப்பினர்கள் முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதை சபை...
தமிழகத்தில் காலியாகும் மேல்சபை எம்.பி.தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட 6 பேரும் வெற்றி!

தமிழகத்தில் காலியாகும் மேல்சபை எம்.பி.தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட 6 பேரும் வெற்றி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் காலியாகும் மேல்சபை எம்.பி.தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட 6 பேரும் வெற்றி! பாராளுமன்ற மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.), மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.), முத்துக்கருப்பன் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது. இதற்கிடையே, மாநிலங்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் மற்றும் தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் போட்டியிட்டனர், இந்நிலையில், மாநி...
கொரானா வைரஸ் பீதி எதிரொலி வங்கிகளில் கயிறு கட்டி வாடிக்கையாளர்களை தூர தள்ளி நிறுத்திய அவலம்!

கொரானா வைரஸ் பீதி எதிரொலி வங்கிகளில் கயிறு கட்டி வாடிக்கையாளர்களை தூர தள்ளி நிறுத்திய அவலம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உலகம் முழுதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரானா படுத்தும் பாடு சொல்லி மாளமுடியவில்லை. இந்தியாவில் சுமார் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியிலும் பெரும் அச்சம் நிலவுகிறது. திரையரங்குகள், வணிகவளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சேவை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. குறிப்பாக வங்கிகள் மக்களின் சேவையில் முக்கிய பங்காற்றுபவை. வங்கிகளில் பொதுமக்கள் அதிகம் வந்து சொல்வார்கள். அதே போல், வங்கி ஊழியரின் முகத்திற்கு நேரே, அருகிலேயே நிற்பார்கள். இதனால் கொரோனா ஆபத்து ஏற்படலாம் என்று அச்சமடைந்த வங்கி நிர்வாகம் வாடிக்கை யாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே கயிறுகளை கட்டியுள்ளன. மூன்று கயிறுகள் இடைவெளிவிட்டு கட்டப்பட்டுள்ளன. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருது....
கொரானா பீதி வரலாற்றில் முதல் முறையாக ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது!

கொரானா பீதி வரலாற்றில் முதல் முறையாக ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரானா பீதி வரலாற்றில் முதல் முறையாக ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது! சீனாவின் ஹூகான் நகரில் இருந்து உலகம் முழுவதும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மாலை மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் மூடப்பட்டது. உஸ்மனாபாத்தில் உள்ள துலிஜா பவானி கோவிலும் மூடப்பட்டது. இந்த நிலையில் உலக பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் நேற்று மாலை 3 மணி அளவில் மூடப்பட்டது. இங்கு தினமும் உள்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரானா வைரஸ் பீதி உலகம் முழுதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் மக்கள்...
பீதி வேண்டாம்… கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு!

பீதி வேண்டாம்… கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பீதி வேண்டாம்... கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு! முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அளித்த விளக்கம் வருமாறு:- கொரோனா வைரஸ் பற்றி இங்கே சொன்னார்கள். நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) தான், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கொரோனா வைரஸ் பற்றி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து மாலையிலேயே, கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கமாக அதை தெரிவித்தார். அதனுள் செல்ல விரும்பவில்லை. எதிர்க்கட்சி தலைவரும் இதைப் பற்றி தெரிவித்தார். அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையிலே அரசு முழு மூச்சோடு ஈடுபட்டு வருகிறது. ஆகவே, என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அத்தனை தடுப்பு நடவடிக்க...
விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடித்து காட்டச்சொல்லி போலீசார் துன்புறுத்துகிறார்கள் – கோர்ட்டுக்கு போன கமல்

விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடித்து காட்டச்சொல்லி போலீசார் துன்புறுத்துகிறார்கள் – கோர்ட்டுக்கு போன கமல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடித்து காட்டச்சொல்லி போலீசார் துன்புறுத்துகிறார்கள் - கோர்ட்டுக்கு போன கமல் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நடைபெற்ற படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். படப்பிடிப்பில் நடந்த இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு பாதியில் நிற்கிறது. இந்த விபத்து காரணமாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. ‌ஷங்கர், கமல்ஹாசன் இருவரையும் விசாரித்தது பரபரப்பானது. இவர்கள் தவிர விபத்து நடந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறையினர் தொடர்ந்து துன்புறுத்துவதாக நடிக...
வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – முதல்வர் பழனிச்சாமி எச்சரிக்கை

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – முதல்வர் பழனிச்சாமி எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மாலை தலைமைச் செயலகத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அரசு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக அம்மாவின் அரசு, “வருமுன் காப்போம்” என்ற முதுமொழிக்கு ஏற்ப, எடுத்துள்ள பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், எடுக்க வேண்டிய மு...
சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து!

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 18 விமானங்கள் ரத்து! கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்து நடவடிக்கைகள் எத்தனை நாட்கள் நீடிக்கும் என தெரியவில்லை. ஏற்கனவே கொரானா பீதியால் உலகம் முழுதும் பெறும் அச்சத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது....