ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தைப்பூச திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தைப்பூச திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தைப்பூச திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத்திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் ...
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தேதிகள் முடிவு!

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தேதிகள் முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தேதிகள் முடிவு! மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் ஆய்வு செய்தார். காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்கள், பார்வையாளர்கள் கேலரி, மாடுபிடி வீரர்களுக்கு  மருத்துவ பரிசோதனை செய்யும் இடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார். இதனிடையே மதுரை ஆட்சியர் அன்பழகன் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும்  14ம் தேதி அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் தலைவர்கள் படம் இருக்கக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு

பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் தலைவர்கள் படம் இருக்கக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் தலைவர்கள் படம் இருக்கக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று டிசம்பர் 19ஆம் தேதி சேலத்தில் தொடங்கிய முதல் நாள் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் முதல்வர் பரிசுத்தொகை அறிவித்ததற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது. பரிசுத் தொகைக்காக வழங்கப்படும் டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதாக திமுக தொடர்ந்த வழக்கில், அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டது  ...
கொலம்பியா டோரோ மெக்கோய்உணவகத்தில் 24 கேரட் தங்கத்தில் பர்கர்!

கொலம்பியா டோரோ மெக்கோய்உணவகத்தில் 24 கேரட் தங்கத்தில் பர்கர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
உலகில் நாள்தோறும் புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை அத்தியாவசியமானதாக, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக உள்ளன. அந்த வகையில் மேல்நாட்டு உணவு வகையான பர்கர் தயாரிப்பில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வழக்கமாக ரொட்டி, கட்லெட், சாஸ், சீஸ் ஆகியவற்றின் கலவையாகத் தான் பர்கரைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கு தங்கத்தில் பர்கர் செய்துள்ளனர். கொலம்பியாவில் உள்ள டோரோ மெக்கோய் என்ற உணவகம் மிகவும் பிரபலம். இங்கு ஓரோ மெக்கோய் என்ற பெயரில் 24 கேரட் தங்கத்தில் பேகான், டபுள் மீட், டபுள் சீஸ் பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவலறிந்த உள்ளூர் மக்கள் ஏராளமானோர் உணவகத்திற்கு படையெடுத்து வந்துள்ளனர்.தங்கத்தில் செய்யப்பட்ட உயர்தர பர்கரின் விலை 59 டாலர். இந்திய மதிப்பில் 4,330 ரூபாய் ஆகும். அதுவே சாதாரண பர்கரின் விலை 11 டாலர். இந்திய மதிப்பில் 807 ரூபாய் ஆகும். வாடிக்கையாளர...
உருக்கமான மெசேஜ்… திரட்டிய நிதி ஒரு கோடியே 2லட்சம்… தீ விபத்தில் உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு தலா 51 லட்சம் வழங்கிய டிஜிபி ஜாபர்சேட்!

உருக்கமான மெசேஜ்… திரட்டிய நிதி ஒரு கோடியே 2லட்சம்… தீ விபத்தில் உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு தலா 51 லட்சம் வழங்கிய டிஜிபி ஜாபர்சேட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உருக்கமான மெசேஜ்... திரட்டிய நிதி ஒரு கோடியே 2லட்சம்... தீ விபத்தில் உயிரிழந்த வீரர்கள் இருவரது குடும்பத்தினருக்கு தலா 51 லட்சம் வழங்கிய டிஜிபி ஜாபர்சேட்! மதுரை மாவட்டம் மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் கடந்த மாதம் நள்ளிரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.காற்றின் வேகத்தில் தீ அதிகமாக பரவியதால் தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சக்திராஜா ஆகிய 2 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். மற்றும் சில வீரர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் இருவர் மரணமடைந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார் டிஜிபி ஜாபர்சேட். அத்தோடு நின்றுவிடாமல் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்ந்த அலுவலர்கள் அ...
ரஜினி அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து  ஆர்ப்பட்டம்? ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை!

ரஜினி அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து  ஆர்ப்பட்டம்? ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினி அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து  ஆர்ப்பட்டம்? ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை! ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்த நிலையில் வருகின்ற 10ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அறவழியில் போராட்டம் நடத்த ராமதாஸ் என்பவர் தலைமையில் ரஜினி ரசிகர்கள் சிலர் அனுமதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினரும், ரசிகர்களும் கலந்து கொள்ள வேண்டாம் என்று வடசென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சந்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளார் இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற சென்னை மாவட்ட செயலாளர் சந்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முக்கிய அறிவிப்பு… நம் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் 10.01.21 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் தெரியவருகிறது. அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தை சார்ந்த மாவட்ட, பகுதி, வட்ட, பிற அணி மற்றும் நம் மக்கள் தலைவரின் உண்மையான கா...
தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குஷ்பு நன்றி!

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குஷ்பு நன்றி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
முன்னணி நடிகர்களான விஜய், சிம்பு கோரிக்கை விடுத்ததையடுத்து தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படம் திரையிட அனுமதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் மிக்க நன்றி. அதிக அளவு பொருளாதாரத்தை உருவாக்கும் துறையான திரைத்துறை நன்றாக செழிக்கும். பொழுதுபோக்கை மீண்டும் தரும். பாதுகாப்பு குறித்து கவலைப்படுபவர்களுக்கு ஒரு அறிவுரை, திரையரங்குகளால் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை. எனெனில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்கு வருபவர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான பொறுப்பு. அச்சம் இருந்தால் தியேட்டர்களுக்கு வராதீர்கள். உங்கள் அச்சத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங...
விவசாயிகளின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி!

விவசாயிகளின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய அரசு உடனான விவசாயிகளின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வரும் நிலையில் போராட்ட களத்தில் இதுவரை 53 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று 7-வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், 41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் சோம் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், போராட்ட களத்தில் உயிரிழந்த 53 விவசாயிகளுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மவுன அஞ்சலியை தொடர்ந்...
டெல்லியில் தமிழுக்கான அகாடமி – உருவாக்கிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் தமிழுக்கான அகாடமி – உருவாக்கிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ் மொழி மற்றும் தமிழி மக்களின் கலாசாரத்தை ஊக்குவிக்கும் விதமாக தலைநகர் டெல்லியில் தமிழுக்கான அகாடமியை டெல்லி அரசு உருவாக்கியுள்ளது. தமிழ் மொழியை ஊக்குவிக்கும் விதமாக அகாடமி தொடங்கியதற்காக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றுவரும் டெல்லி அரசுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் "டெல்லியில் தமிழ் அகாடமி" அமைத்துள்ள டெல்லி முதல்வர் @CMODelhi ( அரவிந்த் கெஜ்ரிவால்) மற்றும் துணை முதல்வர் @msisodia (மனீஷ் சிசோடியா) ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், டெல்லி அ...
முதல்வர் வாகனம் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்கள் மோதல்!

முதல்வர் வாகனம் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்கள் மோதல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முதல்வர் வாகனம் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்கள் மோதல்! அதிக வேகம் ஆபத்தானது... இதை மெய்ப்பிக்கும் நிகழ்ச்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கான்வாய் வாகன அணிவகுப்பில் நடந்துள்ளது. விபத்து நடக்கும் போது அங்கிருந்த பொதுமக்களில் யாரோ ஒருவர் எடுத்த வீடியோவை பார்த்தபின் முதல்வர் வாகனத்தை பின் தொடர்ந்து செல்லும் போது அவ்வளவு வேகம் தேவையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். மறைந்த பி.எச். பாண்டியனின் சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் அவரது நினைவாக 20 சென்ட் பரப்பளவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது திருவுருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் மற்றும் சிலையை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைக்க சென்றார். அப்போது எடப்பாடி பழனிசாமி வாகனத்தை தொடர்ந்து அதிமுக பிரமுகர்கள் வாகனத்தில் அணிவகுத்து சென்றனர். அப்போது வாகனங்கள் சென...