ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

மாஸ்க் அணிந்து பிரார்த்தனையில் கலந்து கொண்ட போப்!

மாஸ்க் அணிந்து பிரார்த்தனையில் கலந்து கொண்ட போப்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் முதலாம் பிரான்சிஸ் நேற்று முதன் முறையாக முக கவசம் அணிந்து பொது வழிப்பாட்டில் பங்கேற்றார். சாண்டா மரியா தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையின் போது, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தலைவர் பார்தலோமெவ் உள்ளிட்டவர்களுடன் முக கவசம் அணிந்து பங்கேற்றார். போப்பின் பாதுகாவலர்கள் நான்கு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், போப் முக கவசம் அணியாதது தொடர்பாக சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து பொது மக்களை சந்திக்கும் வாகனத்தில் வரும் போது மட்டும் முக கவசம் அணிந்து வந்த போப் முதலாம் பிரான்சிஸ், தற்போது பொது வழிபாட்டிலும் முக கவசம் அணியத் தொட​ங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது....
வெற்றிகரமாக பென்னுவில் தரையிறங்கியதும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

வெற்றிகரமாக பென்னுவில் தரையிறங்கியதும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பூமியில் இருந்து 330 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறுங்கோள்களான பென்னுவை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘ஓசிரிஸ்-ரெக்ஸ்’ எனப்படும் செயற்கை கோளை அனுப்பியது. 2016ம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த செயற்கைக் கோள், 2018ம் ஆண்டு பென்னு குறுங்கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து சீராக பயணம் மேற்கொண்டது. அதன்பின்னர் படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டு நேற்று பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பென்னு குறுங்கோளில் இருந்து பாறைத் துகள்களை ஆய்வுக்காக பூமிக்கு எடுத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஓசிரிஸ் ரெக்ஸ் செயற்கைக் கோளில் உள்ள இயந்திரக் கரங்கள் குறுங்கோளை துளையிட்டு பாறைத் துகள்களை எடுக்கத் தொடங்கியது. இதேபோல் தூசித் துகள்களையும் சேகரிக்கிறது. 4 ஆண்டு பயணத்திற்கு பிறகு ஓசிரிஸ்-லெக்ஸ் வெற்றிகரமாக பென்னுவில் தரையிறங்கியதும் வ...
கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று 5 அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இந்நிலையில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து அனுமதி அளிக்க கோரி கவர்னர் பன்வாரிலாலுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 7.5 சதவீத உள்ஒதுக்...
மலிவு விலையில் வெங்காய விற்பனையை தொடங்கிய தமிழக அரசு!

மலிவு விலையில் வெங்காய விற்பனையை தொடங்கிய தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இருந்து வரக்கூடிய வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரிச்சு வந்துச்சு. இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நேத்திக்கு தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் இன்று முதல் சென்னையில் பசுமைப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 45 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும், நாளை முதல் தமிழகம் முழுவதும் பசுமைப் பண்ணை கடைகளில் கிலோ 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-க்கான விற்பனை திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைச்சார்....
சர் என எகிறிய வெங்காயம் விலை கிலோ45க்கு விற்க அரசு முடிவு

சர் என எகிறிய வெங்காயம் விலை கிலோ45க்கு விற்க அரசு முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சென்னையில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் பெரிய வெங்காயத்தை பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.45க்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் நாளை முதல் கிலோ ரூ.45க்கு பெரிய வெங்காயம் பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படும். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது....

சென்னையில் தயாராகும் போலீஸ் அருங்காட்சியகம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னையில் தயாராகும் போலீஸ் அருங்காட்சியகம் சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் பல்வேறு வரலாற்று சிறப்பு அம்சங்களை கொண்டது. 178 ஆண்டு கால பழமை வாய்ந்த அந்த கனவு கட்டிடம் தனது புதிய அத்தியாயத்தை தொடங்கப்போகிறது. அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியும் சென்னை போலீசின் சிறப்புகளை சொல்லும். சென்னை போலீஸ் என்றாலே அந்த கட்டிடம் தான் நினைவுக்கு வரும். அருள், ஷெனாய், செந்தாமரை, ஸ்ரீபால், வால்டர் தேவாரம் போன்ற ஜாம்பவான் போலீஸ் கமிஷனர்கள் பணி புரிந்தது அந்த அலுவலகத்தில் தான். கடைசியாக ஜார்ஜ் கமிஷனராக இருந்தபோது தான், புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் வேப்பேரியில் திறக்கப்பட்டது. கடைசியாக அங்கு கமிஷனராக இருந்தவர் ஜார்ஜ் தான். போலீஸ் கமிஷனர் அலுவலகமாக மாற்றப்படும் முன்பு அந்த பகுதி வயல்வெளி சூழ்ந்த பண்ணை வீடாக இருந்தது. அருணகிரி முதலியார் என்பவர் 1842-ல் அந்த கட்டி...
விஜய் சேதுபதி மிரட்டப்பட்டதற்கு கனிமொழி கண்டனம்

விஜய் சேதுபதி மிரட்டப்பட்டதற்கு கனிமொழி கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், முன்னோட்டம்
  விஜய் சேதுபதி மிரட்டப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட என திமுக எம்.பி., கனிமொழி ட்விட்டரில் கருத்து. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம் - கனிமொழி. இந்த குற்றத்தை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - கனிமொழி....