ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

எஸ்.பி.பி-யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல்துறை மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

எஸ்.பி.பி-யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல்துறை மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம்தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி.பி.’’ எஸ்.பி.பி-யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல்துறை மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்....
SPB தென்னிந்திய சினிமாவின் சாதனை நாயகன் முடிவில்லாத சகாப்தம்!

SPB தென்னிந்திய சினிமாவின் சாதனை நாயகன் முடிவில்லாத சகாப்தம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு சான்று. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனை ஒன்றையும் தன்வசப்படுத்தி இருக்கிறார் ஆரம்பத்தில் மோசமான தமிழ் உச்சரிப்புக்காக புறந்தள்ளப்பட்ட எஸ்.பி.பி, பின்னர் எம்எஸ்வி-யின் ஆலோசனைக்கு இணங்க ஓராண்டு பயிற்சி பெற்று தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்றார். அதன்பின் கிடைத்த முதல் வாய்ப்பி...
பாடகர் எஸ்.பி.பி மரணம் ! நடிகர் சங்கம் இரங்கல் !!

பாடகர் எஸ்.பி.பி மரணம் ! நடிகர் சங்கம் இரங்கல் !!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *பாடகர் எஸ்.பி.பி மரணம் ! நடிகர் சங்கம் இரங்கல் !! இந்தியாவில் புகழ் பெற்ற பாடகரும் நடிகருமான திரு. எஸ்.பி .பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது. "திரு. எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களது மறைவு செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் அவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினரான அவர் பார்போற்றும் பாடகர் மட்டுமல்ல நடிகராகவும் திறமையை வெளிப்படுத்திய ஒப்பற்ற கலைஞர். அவரது மறைவு திரை உலகிற்கும் , கோடான கோடி இசை பிரியர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது இழப்பால் மீளா துயரத்தில் இருக்கும் குடும்பத்தார் ,உற்றார் ,உறவினர்கள் , ரசிகர்கள் ஆகியோர் துக்கத்தில் தென்னிந்திய நடிக...
நீட் விஷயத்தில் சூர்யாவை கேள்வி கேட்டு பொய் பேசும் பாண்டேவை செருப்பால் அடிப்பேன் என ஆவேசமாகிறார்  சேவியர்!

நீட் விஷயத்தில் சூர்யாவை கேள்வி கேட்டு பொய் பேசும் பாண்டேவை செருப்பால் அடிப்பேன் என ஆவேசமாகிறார் சேவியர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், வீடியோ
  https://youtu.be/Ktc2ZqCuVeM
கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்

கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது - கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் * "தன்னுடைய சிறைவாசம் மற்றும் விடுதலை குறித்த விவரங்களை மூன்றாவது நபருக்கு தெரிவிக்கக் கூடாது.. சசிகலா விடுதலை குறித்து ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தில் விவரம் பெறப்பட்டது * 3ம் நபர் விவரம் பெற்றதற்கு எதிராக சசிகலா கடிதம்...
5 ஆண்டுகள்… 58 நாடுகள்… ரூ.517 கோடிகள் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயண செலவாம்!

5 ஆண்டுகள்… 58 நாடுகள்… ரூ.517 கோடிகள் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயண செலவாம்!

HOME SLIDER, NEWS, politics, உலகம், செய்திகள்
  5 ஆண்டுகள்... 58 நாடுகள்... ரூ.517 கோடிகள் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயண செலவாம்! பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியதாவது:-. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ. 517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 2015 முதல், பிரதமர் 58 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்’’ என கூறி உள்ளார் இந்த பயணங்களின்போது இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களின் விவரங்களுடன் 2015 மார்ச் முதல் 2019 நவம்பர் வரை பிரதமர் மோடி பார்வையிட்ட நாடுகளையும் அவர் பட்டியலிட்டு உள்ளார்...
தமிழகத்தில் வேலை பார்க்கும் வங்கி மேனேஜரின் இந்தி வெறி – ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் வேலை பார்க்கும் வங்கி மேனேஜரின் இந்தி வெறி – ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் வேலை பார்க்கும் வங்கி மேனேஜரின் இந்தி வெறி - ஸ்டாலின் கடும் எச்சரிக்கை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து கடைசியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள யுத்தப்பள்ளம். இவருக்கு இந்த யுத்தப்பள்ளம் ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் சொந்த நிலம் வீடு ஆகியவை உள்ளது. இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி கணக்கு வைத்து வரவு-செலவு பார்த்து வருகிறார், இந்நிலையில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்...
ராமநாதபுரத்தில் முதல்வர் எடப்பாடி ஆய்வு

ராமநாதபுரத்தில் முதல்வர் எடப்பாடி ஆய்வு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ராமநாதபுரத்தில் முதல்வர் ஆய்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். மீன்பிடி தொழிலும் ராமநாதபுரத்தில் மேற்கொள்ளப்படுகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகள் நல்ல பலன் கிடைத்துள்ளது - முதலமைச்சர். குடிமராமத்து பணிகளால் பருவகால மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது. ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை. ஆர்.எஸ். மங்கலம் கண்மாய் நவீனப்படுத்தப்பட்டுள்ளது - முதலமைச்சர்....
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் விடிய விடிய தர்ணா!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் விடிய விடிய தர்ணா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இரவு முழுவதும் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடிய 8 சஸ்பெண்ட் எம்பிக்கள். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய தர்ணா. ராஜ்யசபாவில் கடும் அமளியில் ஈடுபட்டதாக 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒ பிரைன், சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 எம்பிக்கள் விடிய விடிய போராட்டம். போராடும் எம்பிக்களுக்கு காலையில் தேநீர் கொண்டு வந்தார் ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ்.  ...
மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் ஒரு நாள் போராட்ட அறிவிப்பு பிரதமர் ஆதரவு

மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் ஒரு நாள் போராட்ட அறிவிப்பு பிரதமர் ஆதரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் ஒரு நாள் போராட்ட அறிவிப்பு, பிரதமர் ஆதரவு * மாநிலங்களவை தலைவருக்கு கடிதம் * மாநிலங்களவையில் நடந்த சம்பவம் காரணமாக 2 நாள் மன உளைச்சல்-ஹரிவன்ஸ் * காந்தி சிலை முன்பு ஒருநாள் போராட்டம் * தன்னை அவமதித்தவர்களுக்கும் தேநீர் வழங்க ஹரிவன்ஷ் முன்வந்தது அவரது மகத்துவத்தை காட்டுகிறது. * மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷை வாழ்த்துவதில் நாட்டு மக்களுடன் இணைகிறேன் - பிரதமர் மோடி....