ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

மத்திய , மாநில அரசுகளை  எதிர்த்து 28ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

மத்திய , மாநில அரசுகளை எதிர்த்து 28ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய , மாநில அரசுகளை எதிர்த்து 28ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததற்கு இடையே ஏற்கனவே 2 முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், கொரோனா நிவாரணம், நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டன. தற்போது, 3-வது முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே இன்று   தோழமை கட்சிகளின் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.  இந்த ஆலோசனைக்குப் பிறகு, வேளாண் மசோதாவுக்கு எதிராக வரும் 28 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தோழமை கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "நாடாளுமன்ற நெறிமு...
சூர்யா கொடுத்த 30 லட்சத்தை நீதிபதியிடம் தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் குழு வழங்கியது!

சூர்யா கொடுத்த 30 லட்சத்தை நீதிபதியிடம் தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் குழு வழங்கியது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கலைப்புலி S தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது . மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்துதருமாறு உத்தரவிட்டது . இந்நிலையில் OTT மூலமாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நிலையில் சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக வழங்கினார் . அந்த தொகையை தாணு, தலைமையில்  கே ஆர் ,  K. முரளிதரன் ,  KJR ராஜேஷ் ஆகியோர் அடங்கிய குழு  நீதிபதி அவர்களிடம் ஒப்படைத்தது . தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில் சூர்யா தந்த இந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள் . சூர்யா அவர்களுக்கு நன்றி என நீதிபதி தெரிவி...
நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் –  நடிகர் சூர்யா

நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் – நடிகர் சூர்யா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் - நடிகர் சூர்யா நீட் தேர்வு அச்சத்தால் சமீபத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் சூர்யா, ' உயிருக்கு பயந்து வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிடுகிறது' என விமர்சித்திருந்தார். இதைத்தொடர்ந்து, நீதிமன்றங்களை தவறாக விமர்சித்ததாக நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 13-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பிய கடிதம் கடந்த 14 -ம் தேதி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்து கேட்புக்காக அனுப்பப்பட்டது.   இதனை ஆய்வு செய்த தலைமை வழக்க...
SPB எழுந்து உட்கார்ந்தார் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் மகன் மகிழ்ச்சி!

SPB எழுந்து உட்கார்ந்தார் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் மகன் மகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மகன் எஸ்பிபி சரண் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்த வீடியோ வெளியிட்டு வருகிறார். அதன்படி, இன்று (செப்டம்பர் 19) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- எனது அப்பா எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைகிறார். அவர் நேற்றில் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறார். மருத்துவர்கள் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எழுந்து உட்காருகிறார். அவருக்கு தொடர்ந்து மருத்துவக்குழு தீவிர சிச...
பிரதமர் பிறந்த நாள் விழாவில் வெடித்து சிதறிய ஹீலியம் கேஸ் பலூன்கள்!

பிரதமர் பிறந்த நாள் விழாவில் வெடித்து சிதறிய ஹீலியம் கேஸ் பலூன்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  சென்னை பாடியில் பா. ஜ. கா. விவசாய அணி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது. நிகழ்ச்சியில் இரண்டாயிரம் கேஸ் பலூன்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது விவசாய அணி துணை தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பொறி பலூன் மீது பட்டத்தில் பலூன்கள் வெடித்து சிதறியது. இதில் அருகில் நின்றுகொண்டிருந்த அனைவருக்கும் தீ காயங்கள் ஏற்பட்டது. காயம் ஏற்பட்ட அனைவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். மேலும் இதில் அருகிலிருந்த செய்தியாளர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது......
EPS-OPS ஆதரவாளர்கள் தனித் தனி கோஷத்தால் அதிமுக ஆபீசில் பரபரப்பு!

EPS-OPS ஆதரவாளர்கள் தனித் தனி கோஷத்தால் அதிமுக ஆபீசில் பரபரப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அதிமுக முக்கிய ஆலோசனை அனல் பறக்கும் காட்சிகள் 2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதம்: அதிமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. போஸ்டர் சர்ச்சை, சசிகலா விடுதலை விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை. கூட்டத்தில் அதிமுக மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசனை ஓபிஎஸ் வருகையின்போது 'ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு' என கோஷம் எழுப்பிய தொண்டர்கள்: ஈபிஎஸ் வரும்போது 'நிரந்தர முதல்வர் எடப்பாடியார்' என முழங்கிய தொண்டர்கள். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் நிலையில் தொண்டர்கள் கோஷத்தால் பரபரப்பு....
அடுத்து திமுக ஆட்சிதான் தேர்தல் பணிக்கு தயாராகுங்கள் – ஸ்டாலின் பேச்சு

அடுத்து திமுக ஆட்சிதான் தேர்தல் பணிக்கு தயாராகுங்கள் – ஸ்டாலின் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. தொ.மு.ச. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 9 அடி உயர முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:- மத்திய-மாநில அரசுகள் தொழிலாளர்களின் துரோக அரசுகளாக உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மட்டுமே 2 அரசுகளும் செயல்படுகிறது. தொழிலாளர்களுக்காக பிரதமர் அறிவிக்கும் பல கோடி ரூபாய் திட்டங்கள் வாக்குறுதிகளாகவே உள்ளது. நானும் விவசாயிதான் என்று கூறும் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தவர். நீட் தேர்வு காரணமாக இறந்த மாணவர்களின் மரணம் தற்கொலை அல்ல. அது மத்திய-மாநில அரசுகள் நடத்திய கொலைகள். ஆனால், இந்த தற்கொலைக்கு காரணம் தி.மு.க.தான் என்று சட்டசபையில் ம...
டிரம்ப் மீது மாடல் அழகி 23 ஆண்டுகளுக்குப் பின்  பாலியல் புகார்!

டிரம்ப் மீது மாடல் அழகி 23 ஆண்டுகளுக்குப் பின் பாலியல் புகார்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். அவர் பல்வேறு தொழில் துறைகளில் முதலீடுகளை செய்து இருக்கிறார். இந்தநிலையில் டிரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி எமி டோரிஸ் பாலியல் குற்றச்சாட்டை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து எமி டோரிஸ் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- கடந்த 1997-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின்போது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டார். அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது என்னிடம் டிரம்ப் தவறாக நடந்துகொண்டார். எனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுக்க முயன்றார். என் விருப்பத்துக்கு மாறாக என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அவரது பிடியில் இருந்து நான் வெளியேற முயன்றபோது அது முடியாமல் போய் விட்டது. கடந்த 2...