ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

நீட் தேர்வை தடுத்ததே திமுக தான் சட்டசபையில் ஸ்டாலின் விளக்கம்!

நீட் தேர்வை தடுத்ததே திமுக தான் சட்டசபையில் ஸ்டாலின் விளக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு இவ்வளவு பெரிய பிரச்சினையாக காரணம் தி.மு.க. அரசுதான் என்று குற்றம் சாட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது என முதலமைச்சர் பழனிசாமி ஆவேசத்துடன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சரின் குற்றச்சாட்டிற்கு தி.மு.க. தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது குறித்து விளக்கம் அறித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வை கொண்டு வந்தது பா.ஜ.க. அரசு, அதனை ஆதரித்தது அ.தி.மு.க. அரசு. மாணவர்கள் தற்கொலைக்கு அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும்தான் காரணமே தவிர, தி.மு.க. அல்ல. 2010-ல் நீட் தேர்வு வரவில்லை. இந்திய மருத்துவ...
பிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து!

பிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சவாலான இந்நேரத்தில் சவாலான மனிதரான உங்களுக்கு மேலும் வலிமை கிடைக்க வாழ்த்துக்கள் என அவர் பதிவு செய்துள்ளார்.  
அஜீத் எச்சரிக்கை விவரம் என்ன?

அஜீத் எச்சரிக்கை விவரம் என்ன?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கடுப்பான அஜித், கனல் தெறிக்கும் எச்சரிக்கை தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் அறிக்கை. "தனது பெயரை பயன்படுத்தி தொழில் சம்பந்தமாக அணுகினால் ஏமாற வேண்டாம்": ஒரு சில தனிநபர்கள் தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் சம்பவங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. "வர்த்தக ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ ஏமாற்றப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல"- அஜித் தரப்பு. அஜித்திடம் வேலை பார்த்தவர்கள் அவரது பெயரை தவறாக பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து அறிக்கை வெளியீடு. நடிகர் அஜித்குமாரின் மேலாளராக சுரேஷ் சந்திரா என்பவர் தான் இருக்கிறார். சுரேஷ் சந்திராவை தவிர்த்து வேறு யாருடனும் தொடர்பு கொள்ள வேண்டாம். நடிகர் அஜித்குமாரின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்.எஸ்.பரத் அறிக்கை....
அடுத்தாண்டு ஜனவரி 27தான் சசிக்கலா விடுதலை நாள் சொல்கிறது RTI Act

அடுத்தாண்டு ஜனவரி 27தான் சசிக்கலா விடுதலை நாள் சொல்கிறது RTI Act

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சசிகலா விடுதலை எப்போது? பரபரப்பு தகவல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை. சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல். சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை  என ஆர்டிஐ மூலம் தகவல். ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப் போகும்....
சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம் என ஓய்வு பெற்ற  6 நீதிபதிகள் கடிதம்!

சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம் என ஓய்வு பெற்ற 6 நீதிபதிகள் கடிதம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் ‘‘அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்தபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள் அனல் பறக்க விவாதிப்பார்கள்.’’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபத...
எங்க அப்பா எப்பவும் “கிங்”தான் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேச்சு!

எங்க அப்பா எப்பவும் “கிங்”தான் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  தேமுதிக 16-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடியை விஜயகாந்த் ஏற்றினர். இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசி, "மொழியை மொழியாக பார்க்க வேண்டும். தமிழை பிரச்சாரம் செய்பவர்கள் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். எனக்கு எப்பொழுதும் எங்க அப்பாதான் கிங். எனக்கு எங்க அப்பா கிங் ஆக இருக்க தான் ஆசை. செயற்குழு பொதுக்குழு கூட்டி தான் தேமுதிக கூட்டணியை முடிவு செய்யும். தேமுதிகவின் மேல் உள்ள நம்பிக்கையில் இளைஞர்கள் இந்த கட்சியில் சேர்ந்துள்ளனர். என்னை விஜயகாந்த் மகனாக பார்க்காதீர்கள். உங்கள் நண்பனாக பாருங்கள். 40 வருடங்கள் கேப்டன் மக்களுக்காக உழைத்து வருகிறார். இந்தி மொழி எதிர்ப்பு என பலர் தப்பான பிரச்சாரம் செய்கின்றனர். கேப்டன் வழியில் அன்னை மொழி காப்போம்....
நீட் தேர்வால் 12 எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் – பார்லிமெண்ட் கூட்டத்தில் டி.ஆர்.பாலு புகார்

நீட் தேர்வால் 12 எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் – பார்லிமெண்ட் கூட்டத்தில் டி.ஆர்.பாலு புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நீட் தேர்வால் 12 எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் - பார்லிமெண்ட் கூட்டத்தில் டி.ஆர்.பாலு புகார் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது, நீட் தேர்வு தொடர்பான பிரச்சனையை திமுக எழுப்பியது. திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசும்போது, நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக 12 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார். ‘நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட 12 மாணவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்த அவை மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அவர்கள் பிளஸ் 2-ல் மாநில பாடத்தில்...
நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  சபாநாயகர் என்னுடைய கோரிக்கையை ஏற்கவில்லை: ஸ்டாலின் பரபரப்பு பேட்டி சட்டசபை கூட்டத்தில் இருந்து வெளியில் வந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு: நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினேன். அதை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். நீட்டால் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுத்தது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வை ரத்து செய்ய ஒரு முறை கூட முதல்வரோ, அமைச்சர்களோ டெல்லி சென்று வந்துள்ளனரா? நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது. நீட், புதிய கல்விக்கொள்கை, கொரானா என பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதால் சட்டப்பேரவையின் 2 நாட்கள் கூட்டம் போதாது என்று எதிர்க் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.   https://youtu.be/WxoKMQHGji4...