ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை!

பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை! கடந்த ஜூன் 15ந்தேதி லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து தேச பாதுகாப்பு நலன்களை கவனத்தில் கொண்டு மத்திய அரசு டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 116 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்நிலையில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது....
கைலாசாவில் இயற்கை விவசாயம் செய்ய நிலம் வேண்டும் – நித்திக்கு கடிதம்

கைலாசாவில் இயற்கை விவசாயம் செய்ய நிலம் வேண்டும் – நித்திக்கு கடிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கைலாசா என்கிற நாட்டை உருவாக்கி உள்ளதாகக் கூறி உள்ள நித்யானந்தா, விநாயகர் சதுர்த்தி அன்று தனது நாட்டிற்கான நாணயங்களை வெளியிட்டு அதிர்ச்சியூட்டினார். இதைத்தொடர்ந்து மதுரை ஓட்டல் அதிபர் எங்களது உணவகத்தின் கிளையை கைலாசாவில் தொடங்குவதற்கு அனுமதி வேண்டி நித்யானந்தாவிற்கு கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்ற நித்யானந்தா தனது நாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் போது நிச்சயம் அனுமதி தரப்படும் என்றும் மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்றும் உறுதி அளித்தார். இந்த விவகாரம் முடிவுக்கு வருவதற்குள் மதுரையை சேர்ந்த இயற்கை விவசாயி பாண்டித்துரை என்பவர் நித்யானந்தாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பரம்பரைப் பரம்பரையாக விவசாயம் செய்துவரும் குடும்பத்தில், தான் பிறந்துள்ளதாகவும், பொறியியல் படித்துவிட்டு தற்போது இயற்கை விவசாயம் செய...
பொருளாளர் பதவிக்கு போட்டியில்லை – ராசா, கனிமொழி அறிவிப்பு

பொருளாளர் பதவிக்கு போட்டியில்லை – ராசா, கனிமொழி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை செப்.4 ஆம் தேதி நடைபெறும்; வேட்புமனு திரும்பப்பெற செப்.5 ஆம் தேதி கடைசி நாள் - திமுக. வரும் 9ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூடுகிறது   இந்த சூழலில் ராசாவும், கனிமொழியும் பொருளாளர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என அறிவித்து விட்டனர்  ...
சசிகலாவின் 300 கோடி சொத்துக்கள் முடக்கம்!

சசிகலாவின் 300 கோடி சொத்துக்கள் முடக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சசிகலாவின் 300 கோடி சொத்துக்கள் முடக்கம்!   கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், வணிக வளாகம் என 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1,600 கோடி மதிப்பிலான சசிகலாவுக்கு சொந்தமான பினாமி சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், சசிகலாவின் பினாமி நிறுவனமாக செயல்பட்டு வருவதும், இந்த நிறுவனத்தின் மூலம் சசிகலா சென்னையில் உள்ள போயஸ் கார்டன் மற்றும் தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஆலந்தூர், ஸ்...
ஊட்டிக்கு போகனும்னா கண்டிப்பா இ பாஸ் இருக்கனும் – கலெக்டர் உத்தரவு

ஊட்டிக்கு போகனும்னா கண்டிப்பா இ பாஸ் இருக்கனும் – கலெக்டர் உத்தரவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  ஊட்டிக்கு போகனும்னா கண்டிப்பா இ பாஸ் இருக்கனும் - கலெக்டர் உத்தரவு தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், வனத்துறையின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டன. இங்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் தமிழக அரசு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நீலகிரிக்கு இ-பாஸ் பெற்று வந்தனர். இதன் காரணமாக தினமும் 2 ஆயிரக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தனர். இதில் பலர் சுற்றுலா நோக்கத்தோடு வந்து ரகசியமாக தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கினர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்ப...
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் புதுசாய் முளைத்த கலர் காளான்கள்!

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் புதுசாய் முளைத்த கலர் காளான்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெளி உலகுக்கு  தெரியாத ஏராளமான மருத்துவ மூலிகைகளும் மருத்துவ செடிகளும் உள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அடிவாரப் பகுதிகளில் சாரல் மழை மற்றும் பரவலான மழை பெய்து வருகிறது. இந்த மழை  எதிரொலியாக வனப்பகுதியிலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளிலும்  ஏராளமான இடங்களில் பல நிறங்களில் காளான்கள்   முளைத்துள்ளன இதுகுறித்து மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்த சிலர் கூறும்போது வனப்பகுதியிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர்ச்சியாக சில நாட்கள் இடி மின்னலுடன் மழை பெய்தாலே பல நிறங்களில் பெரிய மற்றும் சிறிய அளவில் காளான்கள் வளர்வது வழக்கம். அந்த வகையில் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தினால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் பல  நிறங்களில் காளான்கள் முளைத்துள்ளன. ஆனால் இந்த காளான்களை...
கடலில் கப்பல் விபத்து எண்ணெய் கசிவால் டால்பின்கள் பலி

கடலில் கப்பல் விபத்து எண்ணெய் கசிவால் டால்பின்கள் பலி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள குட்டிநாடான மொரிஸியஸில் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று 3,800 டன் எண்ணெய் சரக்குடன்  கடல் பகுதியில் சென்ற பொழுது பாறையில் மோதி விபத்துள்ளானது. இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த எண்ணெய்கள் கடலில் கசியத் தொடங்கியது. கசிவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சி மேற்கொண்ட பொழுதிலும் பலனில்லை. இதனால் மொரிசியஸ் அரசு அவசர நிலை அறிவித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த எண்ணெய் கசிவு விபத்தால் அரிய கடல் உயிரினமான டால்பின்கள் அடுத்தடுத்து உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன. இதுவரை 30-க்கும் மேற்பட்ட இருந்துள்ளதாக மொரிசியஸ் நாட்டின் மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எண்ணெய் கசிவு விபத்து காரணமாக ஜப்பான் கப்பலில் ஒரு மாலுமி கைது செய்யப்பட்டுள்ளார்...
சென்னையில் இருந்து தனி விமானத்தில் காதலருடன் கேரளா பறந்த நயன்தாரா!

சென்னையில் இருந்து தனி விமானத்தில் காதலருடன் கேரளா பறந்த நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரளா சென்ற நடிகை நயன்தாரா வைரல் ஆகும் படம். வைரஸ் பீதியால் படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் ஜோடி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் விமானத்தில் பறந்திருக்கிறார்கள். அதுவும் தாங்கள் 2 பேர் மட்டுமே அந்த தனி விமானத்தில் சென்னையில் இருந்து கேரளாவுக்கு பறந்திருக்கிறார்கள். கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் சென்னை திரும்ப திட்டம். தனி விமானத்தில் சென்றாலும் விமானத்தில் இருந்து இறங்கி செல்லும்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் மாஸ்க் அணியாமல் செல்வதை யாரும் சர்ச்சை ஆக்காமல் இருந்தால் சரி....
நாளை முதல் தமிழகத்தில் பஸ் ஓடும்!

நாளை முதல் தமிழகத்தில் பஸ் ஓடும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் 7-வது கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், மத்திய அரசு நேற்று முன்தினம் 4-வது கட்ட தளர்வுகளை அறிவித்தது. அப்போது, மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்கு தடை இல்லை என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு செப்டம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், செப்டம்பர் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை படிப்படியாக தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும் ஆலோசனை நடத்தினார். அன்று மாலையே தமிழக அரசு சார்பில் ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில்...