ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

அரை நிர்வாண ஓவிய சர்ச்சையில் சிக்கிய பெண்ணுக்கு முன் ஜாமீன் மறுப்பு!

அரை நிர்வாண ஓவிய சர்ச்சையில் சிக்கிய பெண்ணுக்கு முன் ஜாமீன் மறுப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  அரை நிர்வாண ஓவிய சர்ச்சையில் சிக்கிய பெண்ணுக்கு முன்  ஜாமீன் இல்லை! கேரள மாநிலம் கொச்சியை அடுத்த பனம்பிள்ளியை சேர்ந்தவர் ரெகானா பாத்திமா (வயது 34). பி.எஸ்.என்.எல். முன்னாள் ஊழியரான இவர் கேரளாவில் நடந்த முத்த போராட்டத்தில் பங்கேற்றது உள்பட பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் இருமுடி கட்டி நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த மாதம் ரெகானா பாத்திமா தன் மகன் மற்றும் மகளை, தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்தார். அதை வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து கொண்டு ‘உடல் மற்றும் அரசியல்‘ என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ மற்றும் கருத்துகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு பெரும்பாலானோர் கட...
நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன்!

நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தொடர்பாக பிரபல நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது தற்கொலைக்கான காரணத்தை கண்டறிவதற்காக போலீசார் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் நடிகர்கள் உள்பட 38 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்து உள்ளனர். இதில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்தி, சினிமா இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, பட தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா உள்ளிட்டோரும் அடங்குவர். சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து...
விமான பயணிகளுக்கு கொரானா சிகிச்சை செலவை ஏற்கும் விமான நிறுவனம்!

விமான பயணிகளுக்கு கொரானா சிகிச்சை செலவை ஏற்கும் விமான நிறுவனம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  விமான பயணத்தின்போது கொரோனாவால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு சிகிச்சைக்கான செலவை ஏற்பதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு மருத்துவ செலவாக 1.3 கோடி ரூபாய் வரை வழங்க உள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்படும் 14 நாட்களுக்கும் தினசரி 8,691 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31, 2020 வரை எமிரேட்ஸ் விமானத்தில் பறக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை உடனடியாக பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் விமானத்தில் புறப்பட்ட நாளில் இருந்து 31 நாட்களுக்கு இது செல்லுபடியாகும் என்று விமான நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயணத்தின் போது கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உதவி மற்றும் பாதுகாப்பு பெற ஒரு பிரத்யேக ஹாட்லைனை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் விமான நிறுவனம் கூறி உள்ளது. இந்த மருத்துவ செலவை கோர விரு...
வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஜெ.வீட்டுக்கு இழப்பீடாக 68 கோடியை கோர்ட்டில் கட்டிய அரசு!

வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஜெ.வீட்டுக்கு இழப்பீடாக 68 கோடியை கோர்ட்டில் கட்டிய அரசு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்க அரசு விதிகளின்படி வீட்டின் மதிப்புக்கு இழப்பீடாக 68 கோடியை கோர்ட்டில் செலுத்தியது தமிழக அரசு. ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசு நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது அவசர அவசரமாக நிலத்தை கையகப்படுத்தும் நடவ...
கொரானாவை ஒழிக்கும் அப்பளம்னு அறிமுகப்படுத்திய பாஜக மத்திய அமைச்சரின் முட்டாள்தனம்!

கொரானாவை ஒழிக்கும் அப்பளம்னு அறிமுகப்படுத்திய பாஜக மத்திய அமைச்சரின் முட்டாள்தனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானாவை ஒழிக்கும் அப்பளம்னு அறிமுகப்படுத்திய பாஜக மத்திய அமைச்சரின் முட்டாள்தனம்! ‘பாபிஜி அப்பளம்’ என்ற அப்பளத்தை அறிமுகப்படுத்திய பா.ஜ.க மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்த அப்பளம் கொரானா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் எனத் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரானாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் கொரானா குறித்து எந்தவொரு தவறான தகவல்களையும் யாரும் பரப்ப வேண்டாம் என்று அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது. ஆனால், அரசின் அறிவுறுத்தலை பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரகத் தொழில்களுக்கான மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பின்பற்றாமல் தவறான தகவலை மக்கள் மத்தியில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'பாபிஜி அப்பளம்' ...
எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரம் காட்டுமிராண்டி செயல்  என முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி கண்டனம்

எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரம் காட்டுமிராண்டி செயல்  என முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரம் காட்டுமிராண்டி செயல்  என முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.   வில்லியனூரில் புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச்சாலையின் நடுவே எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இந்த சிலையின் மீது காவி துண்டு அணிவிக்கப்பட்டதாக நேற்று மதியம் தகவல் பரவியது. இதை அறிந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன் மற்றும் கட்சியினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். அப்போது சிலையின் கழுத்தில் காவி வேட்டியை துண்டு போல் அணிவிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதை கண்டித்து சிலையின் முன் நடுரோட்டில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். காவி துண்டு அணிவித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் ...
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதாகி உள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரைக்கு கொரானா!

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதாகி உள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரைக்கு கொரானா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதாகி உள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரைக்கு கொரானா! சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கைதான 10 காவலர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், விசாரணை குழுவில் இருந்த 4 சிபிஐ அதிகாரிகளுக்கு  வைரஸ்  தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிபிஐ அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரைக்கும் கொரானா தொற்று உறுதியாகியுள்ளது. சிறப்பு அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு பா...
சாத்தான்குளம் சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு வைரஸ் வந்துடுச்சாம்… விசாரணை சுணக்கம்!

சாத்தான்குளம் சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு வைரஸ் வந்துடுச்சாம்… விசாரணை சுணக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாத்தான்குளம் சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு வைரஸ் வந்துடுச்சாம்... விசாரணை சுணக்கம்!   சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கைதான காவலர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 22-ந்தேதி காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விசாரணை குழுவில் இருந்த மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இ...
நாடு முழுதும் இடைத்தேர்தல்கள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு!

நாடு முழுதும் இடைத்தேர்தல்கள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடு முழுதும் இடைத்தேர்தல்கள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு! நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக இன்று நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தேர்தல் அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி சரியான நேரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வைரஸ் பரவல் காரணமாக குறித்த நேரத்தில் இடைத்தேர்தல் நடத்துவது சிரமம் என்ற கருத்து வெளியானது. அதோடு, அடுத்த ஆண்டு மே மாதத்துடன் தமிழக அரசின் பதவி காலம் முடிவடைவதால் பொதுத் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது....
வட்டிகட்டாத பெண்ணுக்கு பாலியல் தொல்லை… தட்டிக்கேட்டவர் கொலை… குற்றவாளிகளுக்கு 34 ஆண்டுகள் சிறை!

வட்டிகட்டாத பெண்ணுக்கு பாலியல் தொல்லை… தட்டிக்கேட்டவர் கொலை… குற்றவாளிகளுக்கு 34 ஆண்டுகள் சிறை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வட்டி கட்டாத பெண்ணை பாலியல் கொடுமை செய்ததை தட்டிக் கேட்டவரை கொன்ற வழக்கில் குற்றவாளிகளுக்கு 34 ஆண்டுகள் சிறை! நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இத்தகைய விசைத்தறி தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர் குடும்பங்களின் வறுமையை பயன்படுத்தி கந்துவட்டி கும்பல் தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி வந்தது. பல குடும்பங்கள் இந்த கந்துவட்டி கும்பலின் கொடூரத்தால் சீரழிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு கடன் பெற்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைத் தல சிவா என்ற சிவக்குமார் தலைமையிலான கந்துவட்டி கும்பல் கடத்திச் சென்றது. அதன் பின்னர் பணத்தைக் கட்டமுடியாத கையறு நிலையில் கண்கலங்கி நின்ற அந்தப் பெண்ணை அப்படியே இழுத்துக் கொண்டு போய் ஓர் அறையில் அடைத்து கொடுமைப் படுத்தியிருக்கிறது. அதன்பின் தனது பைனான்ஸ் கம்பெனியில் வ...