ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், SI ரகுகணேஷ் மீது மேலும் ஒரு கொலைக் குற்றச்சாட்டு..!

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், SI ரகுகணேஷ் மீது மேலும் ஒரு கொலைக் குற்றச்சாட்டு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அப்பாமகன் இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் உள்ள சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், SI ரகுகணேஷ் மீது மேலும் ஒரு கொலைக் குற்றச்சாட்டு..! தூத்துக்குடி மாவட்டம் ஆசீர்வாதபுரத்தை சேர்ந்தவர், வடிவு. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மே 18-ந்தேதி ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக எஸ்.ஐ.ரகுகணேஷ், தனது மூத்த மகன் துரையைத் தேடி சந்தேகத்தின் பேரில் விசாரிக்க வந்ததாக குறிப்பிட்டார். அப்போது துரை வீட்டில் இல்லாததால் இளைய மகன் மகேந்திரனை அழைத்துச் சென்றனர். அதன் பின்னர், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் எஸ்.ஐ.ரகுகணேஷ் ஆகியோர் மகேந்திரனை போலீசார் கடுமையாக தாக்கினர். மறுநாள், இதுகுறித்து யாரிடமும் புகார் செய்யக்கூடாது என மிரட்டி அவரை விடுவித்துள்ளனர். போலீசார் தாக்கியதில் மகேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில நாட்க...
துணை சபாநாயகர் 1 கோடி கேட்டு போட்ட மான நஷ்ட வழக்கில் ஸ்டாலினிடம் விளக்கம் கேட்ட கோர்ட்!

துணை சபாநாயகர் 1 கோடி கேட்டு போட்ட மான நஷ்ட வழக்கில் ஸ்டாலினிடம் விளக்கம் கேட்ட கோர்ட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஸ்டாலினிடம் ரூபாய் 1 கோடி கேட்டு துணை சபாநாயகர் வழக்கு: விளக்கம் கேட்கும் கோர்ட் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில், திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்பு படுத்தி பேசியதாக ஸ்டாலின் மீது குற்றம் சாட்டிய பொள்ளாச்சி ஜெயராமன், திமுக தலைவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கேட்டிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஸ்டாலினிடம் விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுகவினர் மீது திமுகவினர் குற்றம் சுமத்தி இருந்தது நினைவிருக்கலாம்....
பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு ராகுல் நையாண்டி!

பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு ராகுல் நையாண்டி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  ராகுல்காந்தி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- கொரோனா  காலக்கட்டத்தில் அரசின் சாதனைகள்: பிப்ரவரி- நமஸ்தே டிரம்ப், மார்ச்-மத்திய பிரதேச அரசைக் கவிழ்த்தது, ஏப்ரல்-- மக்களை மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல், மே-அரசின் 6-வது ஆண்டு கொண்டாட்டம், ஜூன் - பிகார் மெய்நிகர் பேரணி, ஜூலை--ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி. இந்தச் சாதனைகளினால் கொரானா வைரஸ்சுக்கு எதிரான போரில் நாடு 'தன்னிறைவு பெற்றது'. இவ்வாறு விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி...
திருப்பதியில் தலைமை அர்ச்சகர் பலி எதிரொலி முழு ஊரடங்கு அமல்!

திருப்பதியில் தலைமை அர்ச்சகர் பலி எதிரொலி முழு ஊரடங்கு அமல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திருப்பதியில் தலைமை அர்ச்சகர் பலி எதிரொலி முழு ஊரடங்கு அமல்!   திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக கவுன்டர்களில் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ஆன்லைனில் மட்டுமே திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் ஆகஸ்ட் 5ந்தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். 15 நாட்களுக்கு பகல் 11 மணிக்கு மேல் திருப்பதி பகுதியில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்....
சுகாதாரத்துறை செயலாளர் மனைவி,  மகன், மாமனார், மாமியாருக்கு  வைரஸ்!

சுகாதாரத்துறை செயலாளர் மனைவி, மகன், மாமனார், மாமியாருக்கு வைரஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
_தமிழக சுகாதாரத்தறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது._ *_இருவரும் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்._* _ராதா கிருஷ்ணனின் மாமனார் மற்றும் மாமியாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது._...
சூடு பிடித்த கேரள தங்க கடத்தல் விவகாரம்… இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தியது அம்பலம்!

சூடு பிடித்த கேரள தங்க கடத்தல் விவகாரம்… இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தியது அம்பலம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  *கேரள தங்கக் கடத்தல் வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை; இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டது அம்பலம்: முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய ரமேஷ் சென்னிதாலா வலியுறுத்தல்* கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த 5-ம் தேதி சில சரக்குப் பெட்டிகள் வந்தன. கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு வந்திருந்த இந்த சரக்குப் பெட்டிகளை, சந்தேகத்தின் பேரில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா ச...
கீழடியில் ரூ. 12 கோடி மதிப்பில் அமைக்கப்படும் அகழ்வைப்பகத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்!

கீழடியில் ரூ. 12 கோடி மதிப்பில் அமைக்கப்படும் அகழ்வைப்பகத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சிவகங்கை மாவட்டம் கீழடியில், 12 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் அகழ்வைப்பகத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கீழடியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்த நிலையில், 6ம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.   இந்த பணியின்போது கண்டெடுக்கப்பட்ட குவளை, முதுமக்கள் தாழிகள், ஓடுகள், பானைகள், வளையல்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்களின் பார்வைக்காக வைக்க, அங்கு அகழ் வைப்பகம் அமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தினர். அதன்படி கீழடியில், 12 கோடியே 21 லட்ச ரூபாய் மதிப்பில் அகழ்வைப்பகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.   இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில், அகழ் வைப்பகம் பணிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்ச...
திருப்பதி முன்னாள் பிரதான அர்ச்சகர் கொரானாவால் பலி!

திருப்பதி முன்னாள் பிரதான அர்ச்சகர் கொரானாவால் பலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரானாவுக்கு திருப்பதி கோவில் அர்ச்சகர் உயிரிழப்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரானா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாச மூர்த்தி (75) கொரானா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம்  திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் , பக்தர்கள்   இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 14 அர்ச்சகர்கள் உட்பட 160 ஊழியர்கள் கொரானா தொற்றால் சிகிச்சையில் உள்ளனர்.      ...
வைரஸ் பீதியில் மூடப்பட்ட பள்ளிகளை எப்போது திறப்பது… இன்று தெரியுமாம்!

வைரஸ் பீதியில் மூடப்பட்ட பள்ளிகளை எப்போது திறப்பது… இன்று தெரியுமாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வைரஸ் பீதியில் மூடப்பட்ட பள்ளிகளை எப்போது திறப்பது என மத்திய அரசுக்கு தமிழக அரசு இன்று முடிவு சொல்கிறது! கொரானா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. எப்போது மீண்டும் திறக்கப்படும்? என்பது இதுவரை முடிவு எடுக்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை சார்பில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பெற்றோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்டு அனுப்பவேண்டும். அதில், பள்ளிகள் மீண்டும் திறக்க வசதியான காலம் எது? ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் என எப்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது பள்ளிகளில் செய்யப்படவேண்டிய பெற்றோரின் எதிர்பார்ப்புகள் என்ன?, மேலும் இதுதொடர்பான பிற கருத்துகள் ஆகியவற்றை குறிப்பிட்டு coordin...
ஒரே நாளில் அடுத்தடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு!

ஒரே நாளில் அடுத்தடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஒரே நாளில் அடுத்தடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு! தமிழகத்தில் கொரானா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரானா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே 15 எம்எல்ஏக்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 16-வதாக ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. ஆர்.காந்திக்கு  கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரானா உறுதியானதை அடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக திமுக எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், கார்த்திகேயன் ஆகியோருக்கும் கொரானா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. ...