ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

நிலத்தகராறு துப்பாக்கி சூடு திமுக எம்.எல்.ஏ.உட்பட 5 பேர் மீது வழக்கு!

நிலத்தகராறு துப்பாக்கி சூடு திமுக எம்.எல்.ஏ.உட்பட 5 பேர் மீது வழக்கு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நிலத்தகராறு துப்பாக்கி சூடு திமுக எம்.எல்.ஏ.உட்பட 5 பேர் மீது வழக்கு! செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த நிலத்தை பார்வையிடுவதற்காக இமயம்குமார், சென்னையை சேர்ந்த ரவுடிகளுட...
முதல் முறை மாஸ்க் அணிந்து பொது வெளியில் வந்த அமெரிக்க அதிபர டிரம்ப்.

முதல் முறை மாஸ்க் அணிந்து பொது வெளியில் வந்த அமெரிக்க அதிபர டிரம்ப்.

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
முதல் முறை மாஸ்க் அணிந்து பொது வெளியில் வந்த அமெரிக்க அதிபர டிரம்ப்.   கொரானா வைரஸ் எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தும்மினால்,அல்லது இருமினால் அவர்களிடம் இருந்து நமக்கு வைரஸ் தாக்காது என்று உலக சுகாதார மையம் பல மாதங்களாக சொல்லி வருகிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் உட்பட சில பிரபலங்கள் ஆரம்பத்தில் இருந்தே மாஸ்க் அணிய மறுத்து வந்தார். இதற்கிடையில் இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் வைரஸ் பாதிப்பில் சிக்கி அபாய கட்டம்வரை சென்று உயிர்பிழைத்தார். ஆனால், அதிபர் டிரம்ப்பின் நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்ட போதும் மாஸ்க் அணிய மறுத்தார் டிரம்ப். ஆனால்,...
அமிதாப்புக்கு வைரஸ் பாதிப்பு!

அமிதாப்புக்கு வைரஸ் பாதிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமிதாப்பச்சன் தனது டுவிட்டரில், “நான் கொரோனா பரிசோதனை செய்தேன் .. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் .. மருத்துவமனைக்கு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கிறேன் .. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், முடிவுகள் காத்திருக்கின்றன .. கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவுசெய்து பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். அமிதாப் பச்சன் கடைசியாக ஷூஜித் சிர்காரின் நகைச்சுவை-படமான குலாபோ சித்தாபோவில் ஆயுஷ்மான் குர்ரானாவுடன் நடித்தார். இந்த படம்...
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தலில் தேடப்பட்ட ஸ்வெப்னா கைது!

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தலில் தேடப்பட்ட ஸ்வெப்னா கைது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் இந்தக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. மேலும், வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் கட...
விதிகளை காற்றில் பறக்கவிட்டு பப்ளிசிட்டிக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகை ரோஜா…!

விதிகளை காற்றில் பறக்கவிட்டு பப்ளிசிட்டிக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகை ரோஜா…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பப்ளிசிட்டிக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகை ரோஜா...! தமிழ் திரையுலகில் இருந்து ஆந்திர அரசியலுக்கு சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். நடிகை என்பதால் அடிக்கடி ஏதாவது பப்ளிசிட்டி செய்து தன் இருப்பை காட்டிக் கொள்வது வழக்கம். கொரானா பரவல் ஆரம்பத்தில் கிராமத்தில் கிருமி நாசினி அடிக்கிறேன் பேர்வழின்னு ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஊழியர்கள் பயன்படுத்தும் கவச உடை அணிந்து நகரி கிராமத்தில் காமெடி செய்து பப்ளிசிட்டி தேடிக் கொண்டவர் ரோஜா. இப்போது அப்படி ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் விஷயம்தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் தொடங்கி உள்ளார். நகரி தொகுதி...
பிரபல வங்கி பெயரில் போலியாக கிளை தொடங்கிய பலே ஆசாமிகள் கைது!

பிரபல வங்கி பெயரில் போலியாக கிளை தொடங்கிய பலே ஆசாமிகள் கைது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  போலியாக ஸ்டேட் பேங் ஆப் இந்தியா கிளை திறந்த 3 பேர் அரெஸ்ட “பண்ருட்டில எங்களுக்கு 2 ப்ராஞ்சுதான். மூணாவது ப்ராஞ்ச் எங்களோட்து இல்ல”னு ஸ்டேட் பேங் ஆபீசர்ஸ் புகார் குடுத்தாங்க. அவங்க போய் பாத்தப்ப அச்சு அசலா ஒரு SBI கிளை எப்டி இருக்குமோ அதே மாதிரி இருந்துச்சாம். ஃபர்னிச்சர், கண்ணாடி, தடுப்புகள், கம்ப்யூட்டர் எல்லாமே பக்கா. இவ்ளோ பெர்ஃபக்டா செஞ்சது யார்னு பாத்தா, வேலை தேடிட்டு இருந்த பையனாம். அப்பா பேங்ல வேல செஞ்சாரு. இறந்து 10 வருசம் ஆச்சு. அம்மாவும் பேங்ல ரிடயர் ஆகி 2 வருசம் ஆகுது. ஸோ, பையன் ப்ளட்ல பேங்கிங் ஊறிருக்கு. மத்த 2 பேர்ல ஒருத்தர் ப்ரின்டிங் ப்ரஸ் வச்சிருக்கார். பேங் சலான், ரசீது புக்கெல்லாம் அடிச்சு குடுக்றது அவர்தான். இன்னொருத்தர் ரப்பர் ஸ்டாம்ப் செஞ்சு குடுக்றவர். கஸ்டமர்ஸ் யாரும் ஏமாறலைனு ஆபீசர்ஸ் சொல்றாங்க. இது யே மேரா இண்டியால வருதானு பாக்கணும்....
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனி “பால் ஹாரீஸ் பெல்லோ” என்று அழைக்கப்படுவார் – பாராட்டிய அமெரிக்கா

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனி “பால் ஹாரீஸ் பெல்லோ” என்று அழைக்கப்படுவார் – பாராட்டிய அமெரிக்கா

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனி "பால் ஹாரீஸ் பெல்லோ" என்று அழைக்கப்படுவார் - பாராட்டிய அமெரிக்கா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு “Paul Harris Fellow” என்ற புதிய பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஒரு அமைப்பு. அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் “The Rotary Foundation of Rotary International” எனும் அமைப்பு குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு “Paul Harris Fellow” என்ற பட்டத்தை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வரின் சேவையை பாராட்டி அந்த அமைப்பானது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு “Paul Harris Fellow” என்ற பட்டத்தை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. இந்த தகவலை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ...
தமிழகத்தில் 3வதாக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு வைரஸ் தொற்று உறுதி!

தமிழகத்தில் 3வதாக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு வைரஸ் தொற்று உறுதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே அவரது மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரானா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில் இப்போது 3வதாாக  அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
ரவுடி விகாஸ் துபே காரை கவிழ்த்து என்கவுண்டர் செய்து தன் ரகசியத்தை உ.பி.அரசு காப்பாற்றிக் கொண்டது – அகிலேஷ் யாதவ் கருத்து

ரவுடி விகாஸ் துபே காரை கவிழ்த்து என்கவுண்டர் செய்து தன் ரகசியத்தை உ.பி.அரசு காப்பாற்றிக் கொண்டது – அகிலேஷ் யாதவ் கருத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உ.பி.அரசு ரகசியத்தை காப்பாற்றிக் கொள்ள ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் கொலை - அகிலேஷ் யாதவ் கருத்து உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவனை கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2 ந்தேதி இரவில் அவனது கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றனர். அப்போது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே தப்பினான்.  இந்த பரபரப்பு சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பேசப்பட்ட இந்த கொடூர கொலை சம்பவத்திற்கு காரணமான ரவுடி விகாஸ் துபேவை கைது செய்யும் பணியில் உத்தர பிரதேச போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் அம்மாநில போலீஸ் பிடியில் விகாஸ் துபே சிக்கினான். இதையடுத்து, உத்தர...
அதிரும் அமெரிக்கா… இரண்டாவது நாளாக 60 ஆயிரத்தை கடந்த வைரஸ் பாதிப்பு!

அதிரும் அமெரிக்கா… இரண்டாவது நாளாக 60 ஆயிரத்தை கடந்த வைரஸ் பாதிப்பு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
அதிரும் அமெரிக்கா... இரண்டாவது நாளாக 60 ஆயிரத்தை கடந்த வைரஸ் பாதிப்பு உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரானா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை இரண்டாவது நாளாக 60 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று 61,300-க்கும் அதிகமானோர் பாதிப்புஅடைந்தனர். இன்றும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, அங்கு கொரானாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 32 லட்சத்தைத் தாண்டியது. கொரானா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.35 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரானா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 14.25 லட்சத்தைக் கடந்துள்ளது...