சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

டெல்லியில் காரில் வீடு திரும்பிய பெண் நிருபர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

டெல்லியில் காரில் வீடு திரும்பிய பெண் நிருபர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    டெல்லியில் காரில் வீடு திரும்பிய பெண் நிருபர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..! டெல்லியில் நிருபராக பணியாற்றி வரும் மிதாலி சண்டோலா என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் தனது காரில் நொய்டாவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் அவரது கார் சென்றபோது ஒரு வாகனம் அவரது காரை முந்திச்சென்று நின்றது. அந்த வாகனத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் மிதாலியின் கார் மீது முட்டைகளை வீசினார்கள். பின்னர் துப்பாக்கியால் மிதாலியை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் போலீசார் விரைந்துவந்தனர். தோள்பட்டையில் குண்டு பாய்ந்திருந்தது. படு காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்தவரை மீட்டு மிதாலியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தன...
நடிகர் சங்க கட்டிடம் முடிந்து வைக்கப்படும் கல்வெட்டை கடப்பாரையால் உடைப்பேன் – ஆனந்தராஜ் ஆவேசம்

நடிகர் சங்க கட்டிடம் முடிந்து வைக்கப்படும் கல்வெட்டை கடப்பாரையால் உடைப்பேன் – ஆனந்தராஜ் ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க கட்டிடம் முடிந்து வைக்கப்படும் கல்வெட்டை கடப்பாரையால் உடைப்பேன் - ஆனந்தராஜ் ஆவேசம் நடிகர் சங்க தேர்தல் பரபரப்பாக நடந்து வருகிறது. வாக்களித்து திரும்பும் திரை பிரபலங்கள் பல கருத்தை சொல்லி செல்கிறார்கள். அப்படி வாக்களித்து திரும்பிய ஆனந்தராஜ் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனந்தராஜ் நிருபர்களிடம் பேசும் போது “நல்லது செய்யும் அணி கண்டிப்பாக வெற்றிபெறும். யார் வெற்றிபெற்றாலும் நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டப்படும். கட்டிடம் கட்டி முடித்த பிறகு கல்வெட்டு வைக்கும்போது “தென்னிந்திய நடிகர் சங்கம்” என்று மட்டுமே வைக்க வேண்டும். இன்னார் திறந்தார், அவர் திறந்தார், இவர் திறந்தார் என கல்வெட்டில் ஏதாவது எழுதியிருந்தால், ஒரு கடப்பாறையை கொண்டு வந்து நானே அந்த கல்வெட்டை உடைத்து நொறுக்கி விடுவே. ஏனென்றால் இந்த கட்டிடம் கட்டும் முயற்சியில் அனைத்து நடிகர்களின் பங்கும...
முக்கியமான ரஜினி ஓட்டு இல்லாதது வருத்தமளிக்கிறது – கமல்

முக்கியமான ரஜினி ஓட்டு இல்லாதது வருத்தமளிக்கிறது – கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் - கமல் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்து வருகிறது. இதில் பல நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘நடிகர் சங்க தேர்தல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவு செய்தது சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம். போஸ்டல் ஓட்டு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது. அடுத்த முறை இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரஜினியின் ஓட்டு மிக முக்கியமானது. அது இல்லாதது வருத்தமளிக்கிறது. வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். சங்கத்தேர்தலில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருக்கூடாது என்பது என் விருப்பம் என்றார் கமல்....
பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்… கதை புத்தகத்துக்குதான் பயன்படும் டிரம்ப் மறுப்பு..!

பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்… கதை புத்தகத்துக்குதான் பயன்படும் டிரம்ப் மறுப்பு..!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார்... கதை புத்தகத்துக்குதான் பயன்படும் டிரம்ப் மறுப்பு..! அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் (வயது 73), மிகப்பெரிய கோடீசுவரர். இவர், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அடுக்கடுக்காக செக்ஸ் புகார்கள் எழுந்தன. இது போல டிரம்ப் மீது 12-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் எழுப்பினர். ஆனால் அவற்றையெல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். அத்துடன், இந்தப் புகார்களையெல்லாம் கடந்து டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆகி, அனைவரையும் வியக்க வைத்தார். இப்போதும் அடுத்த ஆண்டு அங்கு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக டிரம்ப் சில தினங்களுக்கு முன்னர் புளோரிடா மாகாணத்தில் நடந்த பிரமாண்டமான பொது கூட்டத்தில் அறிவித்தார். இந்த நிலையில், டிரம்ப் மீது பெண் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஒருவர் கற்பழிப்பு புகார் எழுப்பி ...
தாமதமான தபால் வாக்கு… ஓட்டுபோட முடியாமல் போனது – ரஜினி வருத்தம்..!

தாமதமான தபால் வாக்கு… ஓட்டுபோட முடியாமல் போனது – ரஜினி வருத்தம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் எனது வாக்கை பதிவுசெய்ய இயலவில்லை - ரஜினிகாந்த் நடிகர் சங்கத் தேர்தல் ஏற்கனவே அறிவித்தப்படி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் 23ம் தேதி காலை 7 மணிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் நான் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறியதாவது: மும்பையில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு எனக்கு தாமதமாக கிடைத்தது. தபால் வாக்கு படிவம் இன்று மாலை 6.45 மணிக்கு வந்ததால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தபால் வாக்கு படிவத்தை முன் கூட்டியே பெற முயற்சித்தும் தாமதமாக கிடைத்தது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான நிலை வரும் காலங்களில் ஏற்படக்கூடாது. தாமதமாக தபால் வாக்கு கிட...
நிதி அமைச்சர் ஆனதும் துறை ஊழியர்களுக்கு அல்வா கிண்டிக் கொடுத்த நிர்மலா சீதாராமன்..!

நிதி அமைச்சர் ஆனதும் துறை ஊழியர்களுக்கு அல்வா கிண்டிக் கொடுத்த நிர்மலா சீதாராமன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பட்ஜெட்டுக்காக முதன்முறையாக அல்வா கிண்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..! பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு தயாரித்து, இந்த பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து 2019-20ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை அச்சடிக்கும் பணி தொடங்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் மத்திய நிதி மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் இதுவாகும். இதற்காக தான் நிர்மலா சீத்தாராமன் அல்வா கிண்டினார்....
எம்.பி. வெற்றி பெற்றது ஒருவர் அவருக்கு அவரே தலைவர் – இது அதிமுக கலாட்டா அறிக்கை

எம்.பி. வெற்றி பெற்றது ஒருவர் அவருக்கு அவரே தலைவர் – இது அதிமுக கலாட்டா அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எம்.பி. வெற்றி பெற்றது ஒருவர் அவருக்கு அவரே தலைவர் - இது அதிமுக கலாட்டா அறிக்கை பாராளுமன்றத்தில் ஒவ்வொரு கட்சியும் மக்களவையில் வெற்றி பெற்ற எம்பிக்களில் ஒருவரை அந்த கட்சியின் மக்களவை தலைவராக தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் திமுக மக்களவை எம்பிக்களின் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து ஒரே ஒரு எம்பியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்த்ரநாத் குமார் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு அவரே தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கடிதம் ஒன்றை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடிதம் ஒன்றை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு அனுப்பியுள்ளனர். இந்த கடிதத்தை குறிப்பிட்டு இணையத்தில் ...
நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி நடத்தலாம்… வாக்கு எண்ணிக்கை கூடாது – நீதிமன்றம் அதிரடி

நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி நடத்தலாம்… வாக்கு எண்ணிக்கை கூடாது – நீதிமன்றம் அதிரடி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி நடத்தலாம்... வாக்கு எண்ணிக்கை கூடாது - நீதிமன்றம் அதிரடி தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். சங்கரதாஸ் சுவாமிகள் அணி சார்பில் தலைவராக கே.பாக்யராஜ், பொதுச்செயலாளராக ஐசரி கணேஷ், பொருளாளராக பிரசாந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த பல்வேறு இடையூறுகளை எஸ்.வி.சேகரும், ராதாரவியின் உதவியாளரும் ஏற்படுத்தினர். கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட இடம் பாதுகாப்பு குறைவு...
சாய் தன்ஷிகா, தமிழிசையுடன் யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்பு

சாய் தன்ஷிகா, தமிழிசையுடன் யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், நடிகை தன்ஷிகா உடபட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  
ரஜினி முதல்வராக சிறப்பு யாகம் நடத்திய அண்ணன்..!

ரஜினி முதல்வராக சிறப்பு யாகம் நடத்திய அண்ணன்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ரஜினி முதல்வராக சிறப்பு யாகம் நடத்திய அண்ணன்..! நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணன் சிறப்பு யாகம் நடத்தி உள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த சிறப்பு யாகம் நடை பெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்....