தமிழகமெங்கும் குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஜெபக்கூட்டங்கள்!
குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு ஜெபக்கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா நடைபெறும் ஞாயிற்றுக்கிழமைக்கு (Easter Sunday)முந்தைய ஞாயிற்றுக் கிழமைதான் உலகெங்கும் உள்ள குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்துத் தேவலங்களிலும் திருப்பலிக்கு முன்னதாகக் குருவானவரால் புனித நீரால் மந்திரிக்கப்பட்ட குருத்தோலைகளைக் கிறிஸ்தவர்கள் கையிலேந்தி தேவாலம் அருகிலுள்ள வீதிகளில் வழியே ஊர்வலமாகச் சென்று பின் ஆலயத்திற்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தென்னை, பனை, பேரீச்சை மரக்குருத்தோலையோ, ஒலிவமரக் கிளைகளோ கிடைக்காத நாடுகளில் லில்லி உள்ளிட்ட மலர்களையும் நீண்டு வளர்ந்த பூற்களையும் கையேந்திச் செல்கிறார்கள். ஐரோப்பாவில் வில்லோ எனப்படும் புற்களை ஏந்திச்செல்வதால் அங்கே அது ‘வில்லோ ச...









