வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் “பிரேக் அப்”.. !

விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் “பிரேக் அப்”.. !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் "பிரேக் அப்".. ! மேலே தலைப்பை பார்த்ததும் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போ விஜய் தேவரகொண்டாவை காதலித்தார். எப்போ பிரேக் அப் ஆச்சின்னு எல்லாருக்கும் பொதுவான சந்தேகம் வரும். இந்த பிரேக் அப் காதல்ல இல்ல ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் பேர்தான் இது. இந்த படத்துல விஜய் தேவரகொண்டா ஜோடியா ராஷிகன்னா நடித்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ரோல் மிக முக்கியமானதாம்....
சிவகார்த்திகேயனை தொடர்ந்து சூர்யா தேதியை வாங்கிய சன் பிக்சர்ஸ் இயக்குனரை தேடுகிறது..!

சிவகார்த்திகேயனை தொடர்ந்து சூர்யா தேதியை வாங்கிய சன் பிக்சர்ஸ் இயக்குனரை தேடுகிறது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இதையடுத்து அடுத்த படியாக சூர்யா தேதிகளை சன் நிறுவனம் வாங்கி உள்ளது. சூர்யா நடிப்பில் இப்போது ரிலீசுக்கு ரெடியான படம் என்.ஜி.கே. செல்வராகவன் இயக்கத்தில் உருவான இந்த படம் வரும் 31ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது. அதன் பின் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படம் வரும். அதோடு தனது நிறுவனம் சார்பில் சுதா இயக்கத்தில் சூரைப் போற்று படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த படங்களை முடித்த பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு தேதி கொடுத்திருக்கிறார். இந்த படத்தை ஹரி இயக்குவதாக இருந்தது. ஆனால் ஹரியுடன் மீண்டும் இணைந்தால் சிங்கம் பட வரிசையில் இணைந்து விடுவோம் என ஹரி கதையை மறுத்து விட்டார் சூர்யா. அதனால் சூர்யாவுக்கு ஏற்ற கதையை சன் நிறுவனம் கேட்...
முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின்  என்.ஜி.கே.

முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின் என்.ஜி.கே.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின் என்.ஜி.கே. தமிழ்ப்படங்களின் மார்க்கெட் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது தமிழ்ப்படங்கள் உலக அளவில் ரிலீஸ் ஆகி பட்ஜெட்டின் ஒரு பகுதியை ஓவர்சீஸ் மார்க்கெட் தயாரிப்பாளருக்கு பெற்றுத் தருகிறது. அதிலும் அமெரிக்கா, கனடா மற்றும் வளைகுடா நாடுகளில் மட்டும் வெளியாகி கொண்டிருந்த தமிழ் சினிமா கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் வெளியாகி வசூலையும் குவித்து வருகிறது. ரஜினிகாந்த் நடித்த முத்து ஜப்பானில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஹிட் ஆனது. இதைப் போல பல படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டாலும் தயாரிக்கும் மொழியிலேயே ஆங்கில படங்களை போல உலகம் முழுதும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது குறைவுதான். சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் ரிலீஸ் ஆகி 100 கோடியை வசூலித்தது. இந்...
யோகிபாபுவின் “பன்னிக்குட்டி” ஷூட்டிங் ஓவர்..!

யோகிபாபுவின் “பன்னிக்குட்டி” ஷூட்டிங் ஓவர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
யோகிபாபுவின் “பன்னிக்குட்டி” ஷூட்டிங் ஓவர்..! லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிற‘பன்னிகுட்டி’ என்ற படத்தில் கருணாகரன், யோகிபாபு இருவரும் நடித்து வருகிறார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் முடிந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கருணாகரன், யோகிபாபுவுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் கே இப்படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்ததால் படத்தை இறுதி செய்யும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி இருக்கிறது....
”ஆண்மையற்றவர்கள்” யார் ராயல்டி கொடுத்துதான் பாடல்களை பயன்படுத்தினோம் – இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்த 96 படக்குழு

”ஆண்மையற்றவர்கள்” யார் ராயல்டி கொடுத்துதான் பாடல்களை பயன்படுத்தினோம் – இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்த 96 படக்குழு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
”ஆண்மையற்றவர்கள்” யார் ராயல்டி கொடுத்துதான் பாடல்களை பயன்படுத்தினோம் - இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்த 96 படக்குழு விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் வெள்யாகி சமீபத்தில் ஹிட் அடித்த படம் 96. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் 99 என்ற பெயரில் இந்த படம் உருவாகி வருகிறது. தமிழ் 96 படத்தில் கோவிந்த் வசந்த் இசையமைத்திருந்தாலும் பல இடங்களில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது. இது குறித்து சமீபத்தில் பேசிய இளையராஜா “96 படக்குழுவுக்கு ஆண்மையில்லை சுயமாக இசைபோடாமல் என் அனுமதி இன்றி பாடல்களை பயன் படுத்தி இருக்கிறார்கள்” என்று கடுமையாக குற்றம் சாட்டினார். இளையராஜாவின் இந்த ஆண்மையில்லாதவர்கள் பேச்சு தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பட இயக்குனர் பிரேம் தரப்பில் விசாரித்த போது “நாங்கள் பயன்படுத்திய எல்லா பாடல்களுக்கும் உரிய ராயல்டி கொடுத்த...
மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார் அனுஷ்கா

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார் அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  இயக்குநர் மணிரத்னத்தின் மெகா கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது . நயன்தாரா தரப்பில் இதுவரை அதை உறுதி செய்யவில்லை. இவர்கள் தவிர நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தில் அனுஷ்கா மிக முக்கியமான கதாபாத்திரம் ஏற்கிறார். ஏற்கனவே பாகுபலி, ருத்ரமாதேவி, பாகமதி போன்ற படங்களில் அனுஷ்கா நடிப்பு பரவ...
மாஜி காதலியோடு படகில் போன  சிம்பு மஹா ஷூட்டிங் சுவாரஸ்யம்..!

மாஜி காதலியோடு படகில் போன சிம்பு மஹா ஷூட்டிங் சுவாரஸ்யம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மஹா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஜமீல் மற்றும் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வைரலாகி வருகிறது. சிம்பு - ஹன்சிகா இந்த படத்தில் கணவன் - மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் வாலு படத்தில் நடித்த போது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் இருவருமே படங்களில் கவனம் செலுத்தினாலும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளவில்லை. இந்த நிலையில் மஹா படத்தில் ஹன்சிகா மிக ...
நயன்தாரா படத்தில் கவர்ச்சி டான்ஸ் ஆடும் தமன்னா..!

நயன்தாரா படத்தில் கவர்ச்சி டான்ஸ் ஆடும் தமன்னா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சரித்திர பின்னணியில் சுமார் 200 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தமன்னா நடிப்பதாகவும் கூறப்பட்டது. இப்போது படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்காக தமன்னா நடனம் ஆட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் செக்சியான பாடலாக உருவாக இருக்கும் இதில் தமன்னா இதுவரை இல்லாத அளவுக்கு படுகிளாமராக நடனம் ஆட இருக்கிறாராம். ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த பாடலை படமாக்க இருக்கிறார்கள். ராம்சரண் மெகா பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஏற்கனவே பாகுபலி படத்தில் தமன்னாவின் கவர்ச்சி நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.  ...
கவர்ச்சி பிகினி நீச்சல் உடையில் கடற்கரையில் காற்று வாங்கும்  ஆரவ் காதலி…!

கவர்ச்சி பிகினி நீச்சல் உடையில் கடற்கரையில் காற்று வாங்கும் ஆரவ் காதலி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கவர்ச்சியான நீச்சல் உடையில் கடற்கரையில் காற்று வாங்கும் ஆரவ் காதலி...! நீண்ட நாட்களுக்கு பிறகு சரண் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்., படத்தில் ஆரவ் காதலியாக நிகிஷா படேல் நடிக்கிறார். இது தவிர ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எழில் இயக்கும் படத்திலும் நிகிஷா நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க அக்னி அதிகமாகி கோடை வெயில் எல்லாரையும் சுட்டெரித்து வருகிறது. இந்த சூழலில் நடிகைகள் பலர் ஹாயாக வெளி நாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கே எடுக்கும் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் சூடேற்றுகிறார்கள். அந்த நடிகைகள் வரிசையில் லேட்டஸ்ட் வரவு நிகிஷா படேல்... கடற்கரை அழகை பிகினி உடையில் அவர் காற்று வாங்கியபடியே ரசிக்கும் புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி உள்ளது.          ...
ஸ்ரீதேவியின் தாய் பாச நடிப்பு மொழி தாண்டி “மாம்” சீனாவில் வசூல் 100 கோடியை தாண்டியது..!

ஸ்ரீதேவியின் தாய் பாச நடிப்பு மொழி தாண்டி “மாம்” சீனாவில் வசூல் 100 கோடியை தாண்டியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகை ஸ்ரீதேவி நடித்து 2017ம் ஆண்டில் ரிலீஸ் ஆன படம் மாம். மாற்றாந்தாய் ஆக ஸ்ரீதேவி நடித்திருப்பார். தனக்கு பிறக்காத மகளாக இருந்தாலும் ஸ்ரீதேவி மிக அன்பாக கவனிப்பார். தாய் பாசத்தை மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார் ஸ்ரீதேவி. அவரின் நடிப்பு மொழிகள் கடந்து சீனாவில் 100 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அப்படிபட்ட நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு, அவருடைய குடும்பத்தினர் மட்டும் இன்றி, திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் மறைந்து ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது தான் மெல்ல மெல்ல ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் ஸ்ரீதேவியின் மறைவு தூக்கத்தில் இருந்து மீண்டு, திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த 'மாம்' திரைப்படம் சீனாவ...