தீபாவளி ரிலீசில் களம் இறங்கும் ரிஷியின் “மரிஜுவானா”
தீபாவளி ரிலீசில் களம் இறங்கும் ரிஷியின் "மரிஜுவானா"
மரிஜுவானா’ படத்தில் ரிஷி ரித்விக் கதாநாயகனாகவும் ஆஷா பாத்தலோம் நாயகியாகவும் நடித்துள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எம்.டி.ஆனந்த் இயக்கி உள்ளார். எம்.டி.விஜய் தயாரித்துள்ளார்.
போதை பழக்கத்துக்கு அடிமையான ஒருவனின் சைக்கோ கொலைகளை மையப்படுத்தி தயாராகி உள்ளது இந்த மரிஜுவானா. படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி யூ சான்றிதழ் கேட்டனர். ஆனால் 52 சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் அவற்றை வெட்டி நீக்கினால் யூஏ சான்றிதழ் தருவதாகவும் தெரிவித்தனர். படக்குழுவினர் உடன்படவில்லை. இதையடுத்து படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் எம்.டி.ஆனந்த் கூறியதாவது:-
“உண்மை சம்பவங்களை வைத்து மரிஜுவானா படத்தை எடுத்துள்ளோம். போதைக்கு அடிமையானவர்களால் சமூகத்தில் நடக்க...









