திரைப்படங்கள்
திரெளபதி கோடங்கி விமர்சனம்
திரெளபதி கோடங்கி விமர்சனம்
தமிழ் சினிமாவில் சாதி அடையாளங்களோடு வரும் படங்கள் எப்போதாவதுதான் சர்ச்சைகளை ஏற்படுத்தும். அப்படியே சர்ச்சை எழுந்தாலும் தனிப்பட்ட தாக்குதல் வசனங்கள் எதுவும் பெரும்பாலும் இருப்பதில்லை.
ஆனால் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் - ஷீலா நடித்துள்ள திரெளபதி படம் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பிடித்தும் இன்னொரு சமூகத்தை தாக்கியும் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது.
வட சென்னையில் உள்ள ஒரு பதிவு அலுவலகத்தில் மோசடியாக நடைபெற்ற பல ஆயிரம் போலி பதிவு திருமணங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவு பிறப்பித்த ஆதாரத்தோடு சொல்லுகிறார் இயக்குனர் மோகன்.
மனைவி, மாமனார், மனைவியின் தங்கையை கவுரவ கொலை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்ட ரிச்சர்ட் ஜாமீனில் வெளியே வருகிறார்.
மனைவியையும், அவரது தங்கையையும் கொன்றது யார் என கண்டுபிடித்து அவர்களை ஒவ்வொருவராக திட்டம...
இந்தியன் 2 விபத்து பலியானவர்களுக்கு ஷங்கர் ஒரு கோடி நிதி அறிவிப்பு!
இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன்.
ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது மிகவும் கடினம். இவ்வளவு பெரிய project-ஐ சேர்ந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டு, களமிறங்கி மிகச் சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா.
ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்துவிட்டார் என்ற என் சந்தோஷம் நீடிக்காதது என் துரதிர்ஷ்டம்.
அன்று கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்றிருந்த போது அவரின் தாயார் என்னிடம் கதறி அழுதது என் கண்ணுக்குள்ளேயே நின்று என்னை இம்சிக்கிறது.
எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவைப்படும் போதெல்லாம் டீ, காபி, தண்ணீர், பிஸ்கெட் என்று எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் கொடுத்து உ...
கல்தா கவனம் பெறுமா – கோடங்கி விமர்சனம்
இறச்சிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள் லாரி லாரியாக கேரளாவில் இருந்து தமிழக எல்லையோர கிராமங்களில் இரவு நேரங்களில் கொட்டிவிட்டு செல்லும் சம்பவத்தை கொஞ்ச நாட்களுக்கு முன் பரபரப்பாக பேசினார்கள்.
இதை மைய கருவாக எடுத்து "கல்தா" என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.
கேரளா - தமிழக எல்லையில் உள்ள தன்னிலங்காடு கிராமமதான் இந்த கழிவுகள் கொட்ட தேர்வு செய்யப்பட்ட கிராமம்.
மனித வாழ்வாதாரத்தை கெடுக்கும் நச்சு கழிவுகளை அந்த கிராமத்தில் கொட்டுவதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் எப்படி துணை போகிறார்கள். கடைசியில் அப்படி கொட்டப்பட்ட கழிவுகள் அந்த கிராமத்தை என்ன செய்தது என்பதுதான் கல்தா கதை.
மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் கதாபாத்திரம் ஆகவே வாழ்ந்த ஆண்டனி இந்த படத்திலும் கதாபாத்திரம் ஆகவே வாழ்ந்திருக்கிறார்.
ஆண்டனியுடன் சிவ நிஷாந்த் என்பவரும் இன்னொரு கதா நாயகனாக நடித்து...
மதக்கலவரங்களும், ஜாதி மோதல்களும் இந்திய மண்ணில் அதிகரித்து உள்ளது – கன்னிமாடம் படத்தை பார்த்த பின் திருமாவளவன் பேட்டி
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒத்த
ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்து போஸ் வெங்கட் இயக்கத்தில் கடந்த 21ம் தேதி வெளியான படம் கன்னி மாடம்.
ஆண்வ கொலைக்கும், சாதி வெறிக்கும் எதிராக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டு இருக்கிறது.
இந்த படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பார்த்தார்.
படம் பார்த்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இன்றைய கால கட்டத்திற்கு தேவையான படமாக கன்னி மாடம் வெளி வந்துள்ளது,
சாதி வெறியாட்டமும் மத வெறியாட்டமும் இன்றைக்கு இந்திய மண்ணில் தலை தூக்கியுள்ளது. இவையிரண்டும் வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது.
நாம் வெட்கி தலைகுனியும் அளவுக்கு பெருகி வருகிறது.
ஆணவக் கொலைகள், தீ வைப்பு, என்று இன்றைய காலச் சூழல் பதற்றமாகியுள்ள நிலையில் தந்தை பெரியாரின் சிந்தனைகள், புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகள் பரவலாக மக்களிடையே கொண்டு சே...
சர்ச்சையை ஏற்படுத்துமா திரெளபதி!
மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘திரெளபதி’. இதில் ரிச்சர்டு நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் ஜீவா ரவி, கருணாஸ், நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜுபின் இசையமைக்க மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி கூறுகையில், இந்தப் படம் திரைக்கு வருவதே ஒரு வெற்றி. கூட்டு முயற்சியில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படம் எந்த நோக்கத்துக்காக எடுக்கப்பட்டதோ, அந்த நோக்கம் ஒரு எள்ளளவு கூட குறையாமல் வந்து சேரும். இந்த விழிப்புணர்வு நிச்சயமாக ஏற்பட்டே தீரும்.
இது அனைத்து தரப்பு மக்களுக்குமான படம். சில உண்மை சம்பவங்கள் மக்களுக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்கிற மோகன் படத்தின் விளம்பரத்திலேயே "சாதிகள் உள்ளதடி பாப்பா" என பாடலை மாற்றி சர்ச்சையை கிளப்...
இளையராஜா இசையில் இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’!
இயக்குநர் சாமியின் 'அக்கா குருவி' படத்தில் இணைந்த இளையராஜா.
புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் 'சில்ரன் ஆஃப் ஹெவன்'. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் மறு உருவாக்கத்தின் உரிமையை 'உயிர்', 'மிருகம்' மற்றும் 'சிந்து சமவெளி' படத்தின் இயக்குனர் சாமி வாங்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
நான் இயக்கிய மேற்கண்ட மூன்று படங்களும் என்னுடைய அடையாளம் அல்ல. என்னை அடையாளப்படுத்தும் சினிமாவை இனிமேல் தான் இயக்கப் போகிறேன். ஒருமுறை என் அக்கா என் வீட்டிற்கு வந்தபோது 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' திரைப்படத்தை குழந்தைகளுக்கு போட்டுக் காண்பித்தேன். உலகில் உள்ள அனைத்து தரப்பு குழந்தைகளிடம் எப்படி கலந்துள்ளது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்தேன். இதுபோ...
சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது!
சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது!
சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது.
குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் விமான பயணத்தை மேற்கொள்ள முடியும் என காட்டிய ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது...
ரஜினியின் அடுத்த படம் “அண்ணாத்த”
தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைத்து வந்தார்கள்.
மன்னவன், வியூகம், "அண்ணாத்த" ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்த சூழலில் 168வது படத்துக்கு அண்ணாத்த என்று பேர் வைத்திருக்கிறார்கள். பேரை கேட்டதுமே படத்தின் கதை இப்படி தான் இருக்கும் என கதை கட்ட ஆரம்பித்து விட்டது ரசிகர் கூட்டம்....
கன்னி மாடம் படம் பார்க்கும் பெண்களுக்கு அரை சவரன் தங்கம் பரிசு அறிவித்த தயாரிப்பாளர்!
கன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு - தயாரிப்பாளர் அதிரடி
சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட்.
இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள்.
இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக் பரிசு அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்து போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவி...
