சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ படத்தில் ஆலியா பட்டின் நியூ ஜெனரேஷன் கேபரேட் லுக்!
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ படத்தில் ஆலியா பட்டின் இதுவரை காணாத நியூ ஜெனரேஷன் கேபரேட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது!
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ திரைப்படம் 2027-ம் ஆண்டில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. படம் குறித்த ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முதல் போஸ்டர் வெளியானது முதலே இப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, படத்தில் ரன்பீர் கபூர் இடம்பெறும் கதாபாத்திர தோற்றங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது, ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான நியூ ஜெனரேஷன் கேபரேட் அவதாரத்தில் தோன்றியிருப்பது ரசிகர்க...









