மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க,
ராக்ஃபோர்ட் எண்டர்ட்யின்மெண்ட் பெருமையுடன் வழங்கும் “பிசாசு 2” படத்திற்கு இசையமைக்கிறார் கார்த்திக் ராஜா !
மிஷ்கின் படங்களில் இசை தனித்து தெரியும். இசையின் வலிமை வெகு அழகாக படத்துடன் பொருந்தி இருக்கும். இசையை படத்திலிருந்து தனித்து பிரிக்க முடியாது. அவரது படங்களின் இசை, எப்போதும் ரசிகர்களை பிரமிக்க செய்வதாகவே இருக்கும். மிஷ்கின் படங்களில் இசை ஒரு முக்கிய கதாப்பாத்திரம் போன்றே இருக்கும். உண்மையில் இது தான் அவரது படங்களில் பாடல்கள் மெகா ஹிட் ஆவதற்கான காரணமாகும். தற்போது ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க, மிஷ்கின் இயக்கும் "பிசாசு 2" படத்தில் நேர்த்தியான, தேர்ந்த இசையை தொடர்ந்து தந்து வரும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் அவர் இணைந்திருக்கிறார். படத்தின் இசைக்கோர்ப்பு வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட நிலையில், மிஷ்கின் அதனை, மிகவும் ...
விஷாலின் 'சக்ரா' படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு!
தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நாயகனாக நடித்து எம்.எஸ். ஆனந்தன் இயக்கியுள்ள 'சக்ரா' படத்தின் டெஸ்ட் ப்ரிவியூ எனப்படும் சோதனை முறையிலான முன் திரையீட்டுக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.
இன்று இரண்டாவது நாளாக டெஸ்ட் ப்ரிவியூ திரையிடப்பட்டது. இதில் படம் பார்த்தவர்கள் தங்கள் அபிப்ராயங்கள் மூலம் பரவலான வரவேற்பை அளித்துள்ளனர்.
டெஸ்ட் ப்ரிவியூ காட்சிக்கு வருபவர்களிடம் படம் பற்றிய பின்னூட்டம் பெறுவதற்காக ஒரு கேள்வித்தாள் வழங்கப்படும். அதில் அவர்கள் ஆணா பெண்ணா? வயது, தொழில், படத்தில்
நேர்நிலை அம்சம் எது? படத்தில் உயிர்ப்போடு இருக்கும் காட்சியுள்ள பகுதி எது? எதிர்மறை அம்சம் எது? பிடிக்காத காட்சி எது? ஒட்டு மொத்த மதிப்பெண் என்ன, நட்சத்திரங்களின் எண்ணிக்கைகளில்? போன்ற க...
மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம். ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டம் நுங்கம்பாக்கம் படத்தின் இயக்குனர் வேதனை!
திதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் " நுங்கம்பாக்கம் "
தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் செல்வன்.
இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டில் இருந்து டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு வரை கடும் பிரச்சனைகளைச் சந்தித்தது. ரிலீஸ் தேதியை பலமுறை அறிவித்தும் வெளிவர முடியாத சூழலில் இருந்த இப்படம் வரும் 24-ஆம் தேதி வெளியாகிறது. அதை முன்னிட்டு இன்று படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு,
தயாரிப்பாளர் ரவிதேவன் பேசியதாவது...
"முதலில் இந்தப் படத்தை ஏன் ஆதர...
மொக்கையான படங்களின் ராஜ தர்பாரான அமேசான் பிரைம் OTT தளத்தில் "புத்தம் புது காலை" என்ற பெயரில் ஐந்து குறும்படங்களின் தொகுப்பு சினிமான்னு ரிலீஸ் ஆகியிருக்கிறது.
கொரோனா ஊரடங்கின் பின்னணியில் ஏதாவது புதுசா சொல்லலாமேன்னு முயற்சி எடுத்தாங்களாம்... ஆனால் ஐய்யோ பாவம் பார்வையாளர்கள்... நல்ல வேளை இது தியேட்டரில் வரல... இவ்ளோ கஷ்ட நேரத்துல காசு குடுத்து நம்பிக்கையா தியேட்டருக்கு ரசிகன் போயிருந்தா ஐய்யோ பாவம்...
சரி... இந்த குறும்படங்கள் என்னதான் சொல்லுது பாக்கலாம்...
முதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் 'இளமை இதோ, இதோ'. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இரண்டு பேருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் போல ஒரு அலப்பறை... நல்லவேளை அதைக் காட்ட ஒரு இளம் ஜோடிய மேட்ச் பன்னியிருப்பது. இதை காதல்னு சொல்றதா கள்ளக்காதல்ன...
அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது,
வணக்கம்.
மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர்.
அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன்.
நிற்க.
தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன்.
நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.
விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன...