எம்.ஜி.ஆர் படத்தின் டிரைலர் வெளியீடு..!
எம்.ஜி.ஆர் படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.
எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துளுவாகY.G.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர்.
அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது..
விழாவில் முன்னாள் அமைச்சர் H.V.ஹண்டே, முன்னாள் மேயர் ச...









