பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்டது!
பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்டது
சாம் CS இசையமைப்பில் உருவான இந்த ஆல்பம், கபில் கபிலன், அந்தோனி தாசன் மற்றும் திவாகர் போன்ற அசாதாரணமான குரல் வளத்துடன் கூடிய பாடகர்களால் உயிரூட்டப்பட்டிருப்பதை பறைசாற்றுகிறது.
18 அசல் பாடல்கள் அடங்கிய இந்த இசை ஆல்பம் அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்போது ஒலிபரப்பப்படுகிறது
மும்பை, இந்தியா, பிப்ரவரி 24, 2025 —இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, பெரிதும் பாராட்டப்பட்ட அதன் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல் - தி வோர்டெக்ஸ் சீசன் 2 தொடரின் மர்மம் நிறைந்த காட்சிகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்து மகிழும் அனுபவத்தை தீவிரப்படுத்தும் வகையில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்ட 18 பாடல்கள் அடங்கிய சீசன் இரண்டின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டத...









