‘தி டார்க் ஹெவன்’ படத்துக்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு !
'தி டார்க் ஹெவன்' படத்துக்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு !
அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்' .இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , பிரதீப்,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தை பாலாஜி இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே 'D3' என்ற படத்தை இயக்கியவர்.ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி என்ற தொழில்நுட்பக் கூட்டணியுடன் இந்தப் படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தன.
சமீபத்தில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த 'தி டார்க் ஹெவன்' ரசிகர்களின் வரவேற்...









