வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

திரைப்படங்கள்

திருநங்கையாக நடிக்க இருக்கிறார் ‘சார்லி சாப்ளின் 2’ ஹீரோயின்..!

திருநங்கையாக நடிக்க இருக்கிறார் ‘சார்லி சாப்ளின் 2’ ஹீரோயின்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  திருநங்கையாக நடிக்க இருக்கிறார் ‘சார்லி சாப்ளின் 2’ ஹீரோயின் ‘சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் குத்தாட்டம் போட்டவர் அதா சர்மா. தமிழில் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, இந்திப் படங்களில் பிசியானவர் தமிழ் சினிமா பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இந்நிலையில் அவர் ஆணாக இருந்து திருநங்கையாக மாறுகிற கதாபாத்திரத்தில் இந்தியில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘மேன் டு மேன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அபிர் சென்குப்தா இயக்கும் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது...
‘மான்ஸ்டர்’ எலியிடம் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா

‘மான்ஸ்டர்’ எலியிடம் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘மான்ஸ்டர்’ எலியிடம் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார். பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. எலியால் ஏற்படும் விபரீதமும், எலியிடம் சிக்கித் தவிப்பவராகவும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.     https://youtu.be/kqQHZ2Ni5jA...
தர்பார் தேதியால் தாமதமான தர்மபிரபு சுதாரித்த யோகிபாபு..!

தர்பார் தேதியால் தாமதமான தர்மபிரபு சுதாரித்த யோகிபாபு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தர்பார் தேதியால் தாமதமான தர்மபிரபு சுதாரித்த யோகிபாபு..! தமிழ் சினிமாவில் இன்றைக்கு யார் தேதி கிடைக்கிறதோ இல்லையோ இவர் தேதி கிடைக்கவே கிடைக்காது... அதேபோல எந்த பட பூஜை போட்டாலும் இவர் அந்த படத்தில் கெஸ்ட் ரோலிலாவது இடம் பிடிப்பார்... அப்படி கெஸ்ட் ரோலில் நடித்தாலும் டைரக்டர்கள் ஒரு பாடல் காட்சியை வைத்து விடுவார்கள்... அந்தளவுக்கு பிசியான நடிகராக மாறியிருப்பவர் யோகிபாபுதான். விஜய், அஜீத், சூர்யா என பலரோடு நடித்தவர் இப்போது ரஜினி படத்திலும் நடித்து வருகிறார். ரஜினியின் இப்போதைய ‘தர்பார்’ படத்தின் படபிடிப்பு மும்பையில் நடக்கிறது. சுமார் 50 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினியுடனேயே யோகிபாபுவுக்கும் காட்சிகள் இருப்பதால் அவரும் அதிக நாட்கள் தேதி கொடுத்திருக்கிறார் இதன் காரணமாக யோகிபாபு நடித்து முடித்து ரிலீசுக்கு ரெடியாகி வரும் தர்மபிரபு, ஏ1 படங்களின் டப்பிங் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்...
ஜோதிகாவுக்காக சூர்யா எடுத்த ஜாக்பாட்..!

ஜோதிகாவுக்காக சூர்யா எடுத்த ஜாக்பாட்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சூர்யாவின் 2 டி என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் 11 வது படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டது. குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜாக்பாட்” இப்படத்தில் ஜோதிகா, ரேவதியுடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையில், . ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கில் முழு ஷூட்டிங்கும் 35 நாட்களில் முடிந்துவிட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜோதிகாவின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. குலேபகாவலி படமும் முழு நகைச்சுவை கதையாக இருந்தது. அதிலும் ரேவதி வில்லியாக நடித்து கலகலப்பூட்டினார். இப்போது அவரோடு ஜோதிகாவும் இணைந்து நடித்துள்ளார்கள். காமெடி நட்சத்திர பட்டாளங்களும் இருப்பதால் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகள் நிறைந்த படமா...
செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விருப்பம் – சூர்யா NGK பவர்

செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விருப்பம் – சூர்யா NGK பவர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என்ஜிகே படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சூர்யா பேசும்போது, ‘செல்வராகவன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி மறுநாள் இருக்காது. செல்வராகவன் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து செல்வார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்.   யுவனின் இசையைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா? என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். இதுதவிர, இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.   ...
செல்வராகவன் ஸ்கூல் வாத்தியார் மாதிரி அத்தனை பயம் – சாய்பல்லவி

செல்வராகவன் ஸ்கூல் வாத்தியார் மாதிரி அத்தனை பயம் – சாய்பல்லவி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி பேசும்போது, ‘கதை கேட்டவுடன் எனக்கு பிடித்தது. படப்பிடிப்பு எனக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது. லீவு கிடைக்காதா?, மழை பெய்யாதா? என்று ஸ்கூல் மாணவன் போல் நினைத்துக் கொண்டு இருந்தேன். படப்பிடிப்பு தளம் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நான் வீட்டில் இருந்து செல்லும் போதே இப்படி நடிக்கனும், அப்படி நடிக்கனும் என்று தயாராக செல்வேன். ஆனால், அங்கு சென்றால் வேற மாதிரி இருக்கும். நான் தயாராக செல்வதுதான் தவறு என்று புரிந்துக் கொண்டேன். இயக்குனர் செல்வராகவனிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்...
படித்தவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தி ஜெயிக்கும் படம்தான் ஐ.ஆர்.8

படித்தவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தி ஜெயிக்கும் படம்தான் ஐ.ஆர்.8

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கதை விவசாயி தன் நிலத்தில் விவசாயம் பண்ண முடியாமல் தவிக்கும் நிலையில் வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாமல் பரிதவிக்கும் சூழ்நிலையில் பெற்ற பிள்ளைகளும் கை கொடுக்கவில்லை. ஆகவே எந்த வறுமை வந்தாலும் விவசாயத்தை விட்டுக் கொடுக்காத அவர் படித்த இளைஞர்களை முன்னிருத்தி வலிமையான விவசாயத்தை கொடுக்கும் ஒரு வீர விவசாயின் கதை. பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் & ஜே.கே இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அனீபா, விஷ்வா கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாக நடிக்க ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா,பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஓளிப்பதிவு - கே.வி.மணி பாடல்கள், இசை - கோண்ஸ் எடிட்டிங் - B.S.வாசு ஸ்டண்ட் - நாக் அவுட் நந்தா தயாரிப்பு : ஜெயக்குமார்.T, ஆயிஷா, அக்மல் கதை திரைக்கதை ...
என் தந்தை போல என்னால் நடிக்க முடியாது – கவுதம் கார்த்திக்

என் தந்தை போல என்னால் நடிக்க முடியாது – கவுதம் கார்த்திக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என் தந்தை போல என்னால் நடிக்க முடியாது - கவுதம் கார்த்திக் தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நெல்லையில் டிரைலர் வெளியான தியேட்டர்களுக்கு விசிட அடித்த பின் கூறியது: இதுபோல பல்வேறு கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனது தந்தை (கார்த்திக்) மிகப்பெரிய நடிகர். அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது. முடிந்த அளவுக்கு அவரைபோல் நடிக்க முயற்சி செய்வேன். எனது தந்தை அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்தார். என்னை பொறுத்தவரை இப்போது அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்....
சாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’

சாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சாந்தனு நடிக்கும் 'இராவண கோட்டம்' மதயானை கூட்டம் படம் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாறன். கதிர், ஓவியா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.   https://twitter.com/imKBRshanthnu/status/1122166610695839746   தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாறன் ஆறு ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்று வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக சாந்தனு நடிக்கவுள்ளார். கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்க உள்ளார்  ...