வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

திரைப்படங்கள்

எழில் இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்த பார்த்திபன்!

எழில் இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்த பார்த்திபன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “புரடக்‌ஷன் நம்பர் 2” கோலாகல துவக்கம் ! பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பஞ்சம் வைக்காத, வெற்றியை சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் S. எழில் இயக்கத்தில் இரு தலைமுறைகளை சேர்ந்த மிக முக்கிய நடிகர்களான பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம் கார்த்திக் இணைந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளார்கள். தற்போதைய நிலையில் “புரடக்‌ஷன் நம்பர் 2” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் D. விஜய்குமரன் தயாரிக்கிறார். ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, இயக்குநர் S.எழில், வசனகர்த்தா C.முருகேஷ் பாபு மற்றும் ஒளிப்பதிவாளர் குருதேவ் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் நவம்பர் 19, 2020 அன்று இப்படம் துவங்கப்பட்டது. படம் ...
அமீத்ஷாவுடன் டிரண்டிங்கில் மல்லுகட்டிய சிம்புவின் மாநாடு

அமீத்ஷாவுடன் டிரண்டிங்கில் மல்லுகட்டிய சிம்புவின் மாநாடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    அமீத்ஷாவுடன் டிரண்டிங்கில் மல்லுகட்டிய சிம்புவின் மாநாடு https://youtu.be/C0fezXz_xSA
நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் !

நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் ! நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொன்றும் பெரும் நம்பிக்கையளிப்பதாக, வணிக வட்டாரத்தில் அவருக்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுத்தருவதாக உள்ளது. அந்த வகையில் திருகடல் உதயம் தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” திரைப்படம் ஜெய் நடிப்பில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை படமாக வளர்ந்து வருகிறது. விஷுவல் புரொமோக்கள் மற்றும் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், விரைவில் உலகளவில் திரையரங்கில் இப்படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் படம் குறித்து கூறியதாவது... படத்தின் படப்பிடிப்பை முழுதாக முடித்துவிட்டோம். போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்தேற, தற்போது அதுவும் முடியும் தருவாயில் உள்ளது. நடிகர் ஜெய்யு...
ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘மாநாடு’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்

ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘மாநாடு’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
*ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘மாநாடு’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்* சுரேஷ் காமாட்சியின் ‘வி’ ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு காட்சிகளை படமாகும் வேகமும் அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈடுகொடுக்கும் சிலம்பரசனின் ஒத்துழைப்பும் படக்குழுவினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. குறிப்பாக புதிய சிலம்பரசனை இந்தப்படப்பிடிப்பில் பார்க்க முடிவதாக படக்குழுவினர் சிலாகிக்கின்றனர். இதேவேகத்தில் சென்றால், ஏற்கனவே திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிவடைவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது, இந்தநிலையில், தற்போது ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அப்துல் காலிக் என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞன் கதாபாத்தி...
சிலம்பரசன் தலையில் ரத்த காயங்களுடன் ‘மாநாடு’ பர்ஸ்ட் லுக்

சிலம்பரசன் தலையில் ரத்த காயங்களுடன் ‘மாநாடு’ பர்ஸ்ட் லுக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாநாடு. ஊரடங்கிற்கு முன்னர் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து மாநாடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்தது. ஊரடங்கிற்குப் பின்னர் இந்தப் படவேலைகள் அப்படியே நின்றது. இதனால் சுசீந்திரன் இயக்கத்தில் 40 நாட்களில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார் சிம்பு.   ‘ஈஸ்வரன்’ படத்தை முடித்த கையோடு நவம்பர் 9-ம் தேதியிலிருந்து பாண்டிச்சேரியில் தொடங்கிய ‘மாநாடு’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. சிலம்பரசன் முதல்முறையாக அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடித்திருக்கும் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் சிம்பு தலையின் ஒரு பக்கத்திலிருந்து ரத்தம் வழிய, அவர் கைகளை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையில் புல்லட் பாய்ந்து ரத...
‘சூரரைப் போற்று’ படத்தில் வந்த பெண் பைலட் ரீல் இல்ல ரியல் பைலட்!

‘சூரரைப் போற்று’ படத்தில் வந்த பெண் பைலட் ரீல் இல்ல ரியல் பைலட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தில் இறுதி காட்சியில் வரும் பெண் பைலட் நிஜத்திலும் பைலட் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளி விருந்தாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நெடுமாறானாக சூர்யா, பொம்மியாக அபர்ணா பாலமுரளி என்று நடித்த அனைவரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். ஒரு காட்சிக்கு வந்தாலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் க்ளைமேக்ஸ் காட்சியில் வந்த பெண் பைலட் ஒருவர். இவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் பைலட் தான். இவர் பெயர் வர்ஷா. இண்டிகோ விமானத்தில் பைலட்டாக இவர் உள்ளார். சென்னையில் வசித்து வரும் இவரது கணவர் லோகேஷ் என்பவரும் பைலட் தான். இவரது பூர்விகம் கேரளா. சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா கேட்டுக் கொண்டதற்காக சிறப்பு ...
ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் மிருகம் 2

ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் மிருகம் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சாமி இயக்கத்தில் ஆதி, பத்மபிரியா ஜோடியாக நடித்து 2007-ல் திரைக்கு வந்த படம் மிருகம். போதை, பெண்களுடன் தகாத உறவு, ரவுடித்தனம் என்று மிருகத்தனமாக திரியும் இளைஞன் எய்ட்ஸ் நோயில் சிக்கி எப்படி சீரழிகிறான் என்பது கதை. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. வசூலும் பார்த்தது. தற்போது மிருகம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் கதாநாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். இதுகுறித்து ஆர்.கே.சுரேஷ் கூறும்போது, “மிருகம் படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிப்பது பெருமையாக உள்ளது. திரைக்கதை முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்கும். இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும்” என்றார்....
என்னதான் நயன் படமானாலும் விக்னேஷ் சிவன் இப்படியா செய்வது?!

என்னதான் நயன் படமானாலும் விக்னேஷ் சிவன் இப்படியா செய்வது?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ
என்னதான் நயன் படமானாலும் விக்னேஷ் சிவன் இப்படியா செய்வது?! https://youtu.be/2XXptfI4VIo
மாநாடு படத்தில் முதலமைச்சரான எஸ்.ஏ.சந்திரசேகர்!

மாநாடு படத்தில் முதலமைச்சரான எஸ்.ஏ.சந்திரசேகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக சமீபத்தில் பதிவு செய்தார். இதற்கும் விஜய்க்கும் சம்மந்தம் இல்லை என்று அவரே கூறினார். விஜய்யும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த விஷயம் மிகவும் பரபரப்பானது. இதற்கிடையில் எஸ்.ஏ.சந்திரசேகர், வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அரசியலை மையமாக வைத்து உருவாகி வரும் இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் முதலமைச்சர் வேடத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காட்சிகள் பாண்டிசேரியில் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர் சிம்பு கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து வருகிறார்....
சிம்புவின் “ஈஸ்வரன்” பாம்பு கிராபிக்ஸ் ஆதாரங்களை கேட்ட வனத்துறை!

சிம்புவின் “ஈஸ்வரன்” பாம்பு கிராபிக்ஸ் ஆதாரங்களை கேட்ட வனத்துறை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஈஸ்வரன் படத்தில் சிம்பு வைத்திருப்பது கிராபிக்ஸ் பாம்பு தான் என கூறிய இயக்குனர் சுசீந்திரனிடம் அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு வனத்துறை அதிகாரி கூறியுள்ளார். இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது நடித்து வரக்கூடிய புதிய தமிழ் திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டரிலேயே சிம்பு கழுத்தில் பாம்பு இருப்பது போன்றும் அதை சிம்பு கைகளால் பிடித்து இருப்பது போலவும் ஒரு புகைப்பட பதிவு வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றாலும், வனத்துறை மத்தியில் இது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அது போல ஒரு வீடியோ ஒன்றும் வெளியாகியது, அதாவது மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய பாம்பை சிம்பு கையால் பிடித்து சாக்கு பையில் போடக்கூடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி  மிகவும் வைரல் ஆகியது. இந்நிலையில் வனவிலங்குகளை துன்புறுத்துவதாக கூறி...