வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

நடிகர் அவதாரம் எடுத்த பிரபல முன்னணி தயாரிப்பாளர்..!

நடிகர் அவதாரம் எடுத்த பிரபல முன்னணி தயாரிப்பாளர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தரமணி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜேஎஸ்கே, மம்மூட்டி நடித்த 'பேரன்பு' படத்தில் கெளரவ வேடமொன்றில் நடித்திருந்தார். தற்போது அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் பிரதான வேடங்களில் நடிக்கும் 'அக்னி சிறகுகள்' படத்தில் வலுவான பாத்திரமொன்றில் நடித்து வருகிறார். இயக்குநர் நவீன் 'அக்னி சிறகுகள்' படத்தில் நடிக்க அணுகியபோது, கதையிலும் தன் பாத்திரப் படைப்பிலும் வெகுவாக கவரப்பட்ட ஜேஎஸ்கே இப்போது அப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த பெரும்பாலான காட்சிகள், படத்தில் நடிக்கும் பிரதான பாத்திரங்களுடன் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சிவா தயாரிக்கும் 'அக்னி சிறகுகள்' படத்துடன், சிபிராஜ் நடிக்கும் 'கபடதாரி', ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றிலும் நல்ல வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க...
நீண்ட நாட்களுக்கு பின் பாரதிராஜாவை சந்தித்த ராதிகா..!

நீண்ட நாட்களுக்கு பின் பாரதிராஜாவை சந்தித்த ராதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா-இளையராஜா சந்திப்பு நிகழ்ந்து அது பரபரப்பான செய்தியானது. அதேப்போல தேனியில் பாரதிராஜா-ராதிகா சந்திப்பு நிகழ்ந்தது. திருமணம் ஒன்றிற்காக தேனி சென்றிருந்தார், இயக்குநர் பாரதிராஜா. அங்கு பாரதிராஜாவின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கும் ' மருதா ' படப்பிடிப்பில் இருந்த ராதிகா, பாரதிராஜா வீட்டுக்கு சென்று சந்தித்து இருவரும் உரையாடி இருக்கின்றனர். நேற்றைய காலை உணவு பாரதிராஜா வீட்டில்தான்..!...
ஆக்‌ஷன் என் சினிமா கேரியரில் மிகப் பெரிய படம் – விஷால் மகிழ்ச்சி

ஆக்‌ஷன் என் சினிமா கேரியரில் மிகப் பெரிய படம் – விஷால் மகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      இயக்குனராக நினைப்பவர்கள் , ஈகோ பார்க்காமல் அனைவரும் ஒருமுறை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும் – நடிகர் விஷால் ‘ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசிய விபரம் வருமாறு வசனகர்த்தா பத்ரி பேசும்போது, டிரைலரை பார்க்கும்போதே தெரிந்திருக்கும் ஆக்ஷன் பொருத்தமான பெயர் தான் என்று. இன்னொரு பெயர் உலகம் சுற்றம் வாலிபன் என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நீண்ட வருடங்களுக்குப் பிறகு உலக நாடுகள் பலவற்றில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இப்படம் விஷால் ரசிகர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் விதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றார். நடிகர் சாரா பேசும்போது, சுந்தர் அண்ணா எப்படி இயக்குகிறார் என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அ...
பத்திரிகையாளர்களின் பாராட்டோடு 125 தியேட்டர்களின் இன்று ரிலீஸ் ஆகும் மிக மிக அவசரம்..!

பத்திரிகையாளர்களின் பாராட்டோடு 125 தியேட்டர்களின் இன்று ரிலீஸ் ஆகும் மிக மிக அவசரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  125 தியேட்டர்களில் இன்று வெளியாகிறது மிக மிக அவசரம் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது 'மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மிகப் பிரம்மாண்டமாக படத்தை வெளியிடுகிறார்.. இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதியே வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது சில திரைப்படங்கள் முன்னறிவிப்பு இல்லாமல்...
பார்க்க வேண்டிய படமா மிக மிக அவசரம் – கோடங்கி விமர்சனம்

பார்க்க வேண்டிய படமா மிக மிக அவசரம் – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி பட்ட படங்கள் வரும். ஒரு சாதாரண அதே நேரம் அவசியமான ஒரு விஷயத்தை மைய கருவாக வைத்து ஒரு மேம்பாலத்தின் மீது மொத்த படத்தையும் வைத்து படமெடுத்து அதை சாதனை ஆக்கிய துணிச்சல் இயக்குனர் சுரேஷ் காமாட்சிக்குத்தான் உண்டு. உடம்பை காட்டி ரசிகனை ஏமாற்றாத அழகான கதை நாயகி... ஒரு மேம்பாலம்... நேர்மையான ஒரு காவல் உயர் அதிகாரி.... காவல் துறையை களங்கப்படுத்தும் ஒரு இன்ஸ்பெக்டர்... மனைவியின் தங்கையை களங்கப்படுத்தாத மாமா... மனிதாபிமானம் உள்ள ஒரு போலீஸ்காரர், நியாயமான போலீஸ் டிரைவர் என இவர்களை சுற்றி நடக்கின்ற கதைதான் மிக மிக அவசரம். அதிரடி தயாரிப்பாளராக சினிமா வட்டாரத்தில் அறியப்பட்ட சுரேஷ் காமாட்சியை அழகான திரைக்கதையை மிக எளிமையாக அதே நேரம் நேர்த்தியாக காட்சிப் படுத்தி இயக்குனர் ஆக தனி முத்திரை பதித்திருக்கிறார் சுரேஷ் காமாட்சி. கடந்த சில வருடங்களில...
மிக மிக அவசரம் பட நாயகிக்கு அமைச்சர் பாராட்டு..!

மிக மிக அவசரம் பட நாயகிக்கு அமைச்சர் பாராட்டு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் "மிக மிக அவசரம்". லிப்ரா புரொடக்ஷன் வருகிற நவ 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது. மிக மிக அவசரம் படம் பெண்  காவலர்களின் பணியில் நேரும் சிரமங்களை மிக அழகாகச் சொல்லியிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நேரில் அழைத்துப் பாராட்டினார். அவ்வமயம் ஸ்ரீபிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர்....
ஜப்பான் உலக திரைப்பட விழாவில் தேர்வான படத்துக்காக இயக்குனர் வசந்தை முதல்வர் எடப்பாடி பாராட்டினார்..!

ஜப்பான் உலக திரைப்பட விழாவில் தேர்வான படத்துக்காக இயக்குனர் வசந்தை முதல்வர் எடப்பாடி பாராட்டினார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  மாண்புமுகு முதலமைச்சர் . எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் ”சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் ஜப்பான் உலக திரைப்படவிழாவில் விருது பெற்றதற்க்காக இயக்குனர் வஸந்தை பாராட்டினார். இலக்கியம் சார்ந்த ஒரு தமிழ் திரைப்படம் உலக அளவில் பல திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டதன் மூலமும் விருதுகளை வென்றதன் மூலமும் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தற்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்....
வைபவ் – பார்வதி ஜோடி நடிப்பில் உருவாகும் படம் ஆலம்பனா..!

வைபவ் – பார்வதி ஜோடி நடிப்பில் உருவாகும் படம் ஆலம்பனா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ்சினிமாவில் அரிதாக வரும் பேண்டஸி படங்கள் எல்லாம் பெரிதாக கவனம் ஈர்ப்பதுண்டு. அப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தயாராகும் படம் ஆலம்பனா. அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் ஆலம்பனா எனும் படம் தயாராகிறது. ஆலம்பனா எனும் பெயரிடப்பட்டுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கவனம் ஈர்க்கக்கூடிய படமாக பேண்டஸி கான்செப்ட்டோடும் பிரம்மாண்டமாக தயாராகிறது. விஸ்வாசம் படத்தை பெரியளவில் வெளியீட்டு பெரு வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும்  தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை  எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்...
4 மொழிகளில் வெளியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் !

4 மொழிகளில் வெளியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் ! இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் " தர்பார் " இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வருகின்ற 7 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது . தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , மலையாளம் ஆகிய 4 மொழிகளில் அந்தந்த மொழி பட பிரபலங்கள் வெளியிட இருக்கின்றனர். "தர்பார் "வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது ....
வேல்ஸ் வெளியிடும் தனுஷ் படம்..!

வேல்ஸ் வெளியிடும் தனுஷ் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *எனை நோக்கி பாயும் தோட்டா' திரையிடும் தேதி அறிவிப்பு* தனுஷ் முதன் முறையாக கெளதம் வாசுதேவ் மேனனுடன் கூட்டணி அமைத்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் சசிகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் பல்வேறு பிரச்னைகளால் பலமுறை திரையிடும் தேதி அறிவிக்கப்பட்டு இந்தப் படம் திரைக்கு வராமலேயே உள்ளது. இந்நிலையில் தற்போது நவம்பர் 29ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த முறை வேல்ஸ் பட நிறுவனம் பெயரில் ரிலீஸ் அறிவிப்பு வந்திருப்பதால் கண்டிப்பாக சிக்கல் இல்லாமல் ரிலீஸ் ஆகும் என நம்பப்டுகிறது....