சூர்யாவுடன் கைகோர்த்த உறியடி இயக்குநர்
`உறியடி' படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் விஜய குமார். அரசியல் சம்பந்தப்பட்ட த்ரில்லர் படமாக உருவான `உறியடி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
அதையும் விஜய குமாரே இயக்கி நடிக்கிறார். நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கிறார். இது தயாரிக்கும் 7-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை இயக்கி, நடிப்பதுடன் தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராகவும் விஜய்குமார் இணைந்திருக்கிறார்.
விஜய குமார் ஜோடியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார். மேலும் `மெட்ராஸ் சென்ட்ரல்' பிரபலம் சுதாகர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். `உறியடி' முதல் பாகத்தில் நடித்த ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
விஜய்சேதுபதியின் `96' படத்தில் தனது இசையின் மூலம் அனைவரையும...









