பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த 'டிரைவர் ஜமுனா' படக் குழு
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக் குழு நன்கொடையாக வழங்கியது.
இதனை அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் பயனாளிக்கு வழங்கி கௌரவித்தார்.
18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரி தயாரித்து, இம்மாதம் முப்பதாம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'.
இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகை வாகனத்தை இயக்கும் ஓட்டுநராக நடித்திருக்கிறார்.
இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சென்னை மற்றும் அதன் சு...
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்".
இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
சில தினங்களுக்கு முன்பு "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'பதான்' படத்தின் ஓடிடி விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பதான்' திரைப்படம் 2023-ஆ...
'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.
சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
மேலும், சூர்யா 42 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக நடிகை திஷா பத்தானி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யா 13 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை 2023-ஆம் ஆண்டு மார்ச் அல்...
சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மருந்து… லாஜிக் மீறினாலும் சிரிப்பு நிச்சயம்!
உடன்பால் கோடங்கி விமர்சனம்
லிங்கா, விவேக் பிரசன்னா, தீனா, காயத்திரி, அபர்ணதி, சார்லி, மயில்சாமி உட்பட பலர் நடிப்பில் நேரடி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள படம் ”உடன்பால்”
எத்தனை பாச பந்தங்களும் பணத்துக்கு முன்னால் செல்லாக்காசு தான் என்பதை சொல்லும் விதமாக கார்த்திக் சீனிவாசன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
ஒரு உயிரற்ற உடலை வைத்துக் கொண்டு சோகத்தை மறந்து சிரிப்பை வரவழைக்கும் மந்திரம் சொல்கிறார் இயக்குனர். பல நேரங்களில் அந்த மந்திரம் பலித்து தியேட்டர் சிரிப்பலையில் குலுங்கும்.
படம் தொடங்கி முதல்பாதி முடிகிறவரை அத்தனை யதார்த்தமாக ரசனையுடன் படம் பார்க்கிறவர்களை ரசிக்க வைக்கிற இயக்குனர் இண்ட்ரவல் பிளாக்கில் ஒரு ஷாக் கொடுத்து முடிக்கிறார்…
இரண்டாம் பாதியும் அதே வேகத்தில...
"அரசி" படத்தில் வழக்கறிஞராக களமிறங்குகிறார் வரலட்சுமி சரத்குமார்
---------------------------------------------
வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் அரசி.
வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு,அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக் வினோத், ஹாசினி, சுப்ரமணியம் சிவா,சாப்ளின் பாலு, மோகித் ராஜ், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ஹரி,சிவா மதன்,சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
ரசிமீடியா மேக்கர்ஸ், வி.வி.பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி தயாரித்திருக்கும் இப்படத்தை சூரியகிரண் இயக்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவு-செல்வா.ஆர் இசை-சித்தார்த் விபின் பாடல்கள்-
ஆவடி சே.வரலட்சுமி, அருண் பாரதி, நிலவை பார்த்திபன்,கானா பிரபா
நடனம்-தீனா
சண்டை பயிற்சி-
மிரட்டல் செல்வா
தயாரிப்பு-
ஏ.ஆர்.க...
“ அருவா சண்ட ” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் கலைப்புலி தானு பாடல்களை வெளியிட, தயாரிப்பாளர்கள் முரளி இராமநாராயணன், கேயார், கே.ராஜன், அசோக்சாம்ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய படத்தின் தயாரிப்பாளர் வி.ராஜா பேசியதாவது:-
“இந்தப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். உயிரை கொடுத்து இந்த விழாவை நடத்துகிறோம்.
தயாரிப்பாளர் அண்ணன் கே.ராஜன் சினிமா விழாக்களில் பேசும்போது “படத்தின் ஹீரோயின் ஏன் விழாவில் கலந்துகொள்ளவில்லை” என்று ஒவ்வொரு மேடையிலும் பேசுவார்.
ஹீரோயின்கள் மட்டுமல்ல, அம்மா கேரக்டர்களில் நடிப்பவர்களும் கலந்துகொள்வதில்லை.
இந்தப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் சரண்யா பொண்வண்ணன் மேடத்திடம் காலில் விழாத குறையாக விழாவுக்கு அழைத்தும் மறுத்துவிட்டார்.
இதே பெரிய படம், பெரிய தயாரிப்பாளர் என்றால் அந்த நிகழ்ச்சிக்கு...
“ அருவா சண்ட ” படத்திற்கு தேசிய விருது நிச்சயம் தயாரிப்பாளர் கேயார் நம்பிக்கை
தயாரிப்பாளர் கேயார் பேசியதாவது:-
“இயக்குனர் ஆதிராஜன் என்னுடைய நீண்டநாள் நண்பர். நிறைய போராட்டத்திற்கு பிறகு இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். படம் ஜெயிப்பதற்கான நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கிறது. ராஜா, புதுமுக நடிகர், தயாரிப்பாளர். ரொம்ப தைரியமாக இருக்கிறார். அது இருக்கவேண்டும்.
சில மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு பிரச்சினை இருக்கும். சிலர் எப்படியும் வாழலாம் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு பிரச்சினை இருக்கும். ஆதிராஜன் இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைப்பவர்.
அதனால்தான் அவர் பிரச்சினைகளை சந்தித்தார். இனி அவருக்கு அந்த இயற்கையே சப்போர்ட் பண்ணும்.
ராஜா போன்ற தயாரிப்பாளர்கள் கிடைப்பதும் கஷ்டம். நண்...
சினிமாகாரர்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்... காவி ஒரு கலர் இதை எப்படி ஒரு அமைப்பு சொந்தம் கொண்டாட முடியும்
பதான் சர்ச்சையில் பாஜகவுக்கு பாடம் எடுத்த துரை வைகோ
https://www.youtube.com/watch?v=tTE8VOuIrWU
அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கிறிஸ்டி'. இதில் நடிகர் மேத்யூ தாமஸ் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பென்யமின் மற்றும் ஜி. ஆர். இந்துகோபன் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை மனு ஆண்டனி கவனிக்க, சுஜித் ராகவ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராக்கி மவுண்டன் சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் சஜய் செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உர...