சுருதிஹாசனுக்கு டிசம்பரில் காதல் திருமணம்..?
சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கமல்ஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கிறார். வேறு படங்களில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. அவர் சினிமாவை விட்டு ஒதுங்குவதாக தகவல் பரவி உள்ளது. இதற்கு பதில் அளித்த சுருதிஹாசன் சினிமாவை தவிர்த்து வேறு வாழ்க்கையும் இருக்கிறது. பாடல், இசையில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்துகிறேன். நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன் என்றார்.
சில மாதங்களுக்கு முன்னால் சுருதிஹாசனுக்கும், லண்டன் நடிகர் மைக்கேல் கார்செல்லுக்கும் காதல் மலர்ந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையதளங்களில் வெளியாகி வந்தன. சுருதிஹாசனின் தாய் சரிகா மும்பையில் வசிக்கிறார்.
மைக்கேலை அழைத்துச்சென்று சரிகாவிடம் சுருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். அந்த படங்களும் வெளிவந்தன. பின்னர் சென...









