வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

நடிகைகள்

மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் பிரபல நடிகை..!

மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் பிரபல நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் பிரபல நடிகை..! சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் கனகச்சிதமாக பொருந்தினார். மேலும் இறுதிச்சுற்று' படத்தில் நடித்தற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இவர் தற்போது தமிழில் 'ஓ மை கடவுளே', 'பாக்சர்' மற்றும் 'வணங்காமுடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரித்திகா மீண்டும் கிக் பாக்சிங்கில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....
ஹாரர்,காதல்,த்ரில்லர் படமாக உருவாகும் ஸ்ரீகாந்தின் உன் காதல் இருந்தால்..!

ஹாரர்,காதல்,த்ரில்லர் படமாக உருவாகும் ஸ்ரீகாந்தின் உன் காதல் இருந்தால்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஸ்ரீகாந்த் நடிக்கும் 'உன் காதல் இருந்தால்' படத்தில் ஒற்றைக் காட்சி தான் - டைரக்டர் ஹாசிம் மரிக்கார். கேரளாவில் 'மரிக்கார் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனம் மிகவும் பிரசத்தி பெற்றது.இதுவரை மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், போன்ற பிரபல நாயகர்கள் நடிப்பில் 16 படங்கள் தயாரித்திருக்கிறார்கள். இந்த மரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். அந்த அனுபவங்களைப் பற்றி ஹாசிம் மரிக்கார் கூறியதாவது :- நீண்ட வருடங்களாகவே தமிழில் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஏனென்றால், தமிழ் சினிமாவிற்கு உலகம் முழுவதும் பரப்பான விளம்பரம் இருக்கிறது. மலையாளத்தில் கதை கரு நன்றாக வந்தாலும் உலகம் முழுவதும் எல்லோரிடமும் சென்று சேரும் விதமாக சினிமாவிற்கான மிகப்பெரிய சந்தை தமிழ் சினிமாவில் தான் உள...
சேரன் நடிப்பில் உறவுகளை பலப்படுத்தும் ராஜாவுக்கு செக் பட ஆடியோ வெளியீடு..!

சேரன் நடிப்பில் உறவுகளை பலப்படுத்தும் ராஜாவுக்கு செக் பட ஆடியோ வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  Pallatte kokkatt film house வழங்கும் படம் ராஜாவுக்கு செக். இப்படத்தை SDC பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியீடுகிறது. சேரன் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை சாய் ராஜ்குமார் எழுதி இருக்கிறார். இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர், விழாவில் தயாரிப்பாளர் தாமஸ் கோக்காட்டி அனைவரையும் வரவேற்று பேசினார். ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு பேசியதாவது, "பெரிய படம் சின்னபடம் என்பது இல்லை. நல்லபடம் நல்லா இல்லாத படம் அவ்வளவு தான். அப்படி நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பணியாற்றி வருகிறேன். சேரன் திரில்லர் படத்திற்கு ஏற்றார் போல் மிக சிறப்பாக நடித்துள்ளார்" என்றார் இயக்குநர் சரண் பேசியதாவது, " அனைவரையும் இயக்குநர் சாய் ராஜ்குமார் சார்பாக வரவேற்கிறேன். சேரன் எனக்கு முன்பாகவே நல்ல பழக்கம். சேர...
பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி

பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  *பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி* ஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு. நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே .. அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாந்தினி க்கு தனி இடம் உண்டு. சித்து +2 வில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. இவருக்கு நடிப்பில் பெரிய நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது. இவரது நடிப்பை கண்டு வ...
மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது பீகார் போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததற்கு தி.மு.க. தலைவர...
சூர்யா, கார்த்தி, சாய் தன்ஷிகா கலந்து கொண்ட பாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங் நிகழ்ச்சி

சூர்யா, கார்த்தி, சாய் தன்ஷிகா கலந்து கொண்ட பாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங் நிகழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  சூர்யா, கார்த்தி, சாய் தன்ஷிகா கலந்து கொண்ட பாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங் நிகழ்ச்சி பாண்டியன் மாஸ்டர் என்றால் சினிமாவில் தெரியாத ஆளே இல்லை. மாடக்குளம் ரவி ஆசான் என்பவர் தான் பாண்டியன் மாஸ்டரின் ஆசான். மாடக்குளம் ரவி என்றால் அனைவருக்கும் தெரியும். இவர் தந்தை மற்றும் இவரும் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். அவரிடமே சிஷ்யனாக இருந்த பாண்டியன் மாஸ்டர் சினிமாவில் சூர்யா, கார்த்தி, நடிகை சாய் தன்ஷிகா, ஆர்யா, விஷால், அருண் விஜய், சாந்தனு உட்பட பலருக்கும் இவர் சிலம்பம் கற்றுக் கொடுத்திருக்கிறார். இன்றும் பலருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். கமல் நடித்த 'தேவர்மகன்' படத்தில் 'சாந்து பொட்டு' என்று தொடங்கும் பாடலுக்கு முன்பு நடைபெறும் சண்டை பயிற்சியில் உடன் இருந்தார். பவர் பாண்டியன் ஆசான் சிலம்பம் ட்ரெயினிங் அக...
நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’

நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நவம்பரில் வெளியாகிறது 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ' இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு , கலை இயக்குனராக த.இராமலிங்கம் , எடிட்டர் செல்வா, பாடல்கள் , உமாதேவி மற்றும் தனிக்கொடி எழுதியிருக்கிறார்கள். விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது. நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்க்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது , இரண்டாவது தாயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. ஜனர...
கே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!

கே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!*   மஞ்சு சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சூர்யவம்சி'. பிரபல இயக்குனர் மகேஷ்ராவ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான ரோலில் நடிகர் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.. மற்றும் தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த வருடம் கன்னடத்தில் உருவாகி, தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் கேஜிஎப் சாப்டர் 1.. இந்தப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு கதாநாயகன் ஆகிவிட்டார் நடிகர் யஷ். இந்த நிலையில் யஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள இந்த சூர்யவம்சி படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. நேர்கொண்ட பார்வை கொண்ட த...
உணவு கலப்படத்தைப் பற்றி பேசும் சித்தார்த்தின் அருவம்

உணவு கலப்படத்தைப் பற்றி பேசும் சித்தார்த்தின் அருவம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சித்தார்த் நடிப்பில் “அருவம்” Trident Arts ரவீந்திரன் வழங்கும் சித்தார்த் நடிக்கும் “அருவம்”. புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்கத்தில் சித்தார்த், காத்ரீன் தெரசா நடிப்பில் கமர்ஷியல் ஹாரர் டிராமாவாக உருவாகியுள்ளது “அருவம்”. எஸ் எஸ் தமன் இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவின் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேசியது ... சித்தார்த்துடன் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. அவருடன் நடிப்பது எப்போதும் மகிழ்ச்சியானது. எப்போதும் படங்களில் காதலிக்கும் பையானாக இருப்பார். இந்தப்படத்தில் ஒரு மிடுக்கான ஆண்மகனாக நடித்துள்ளார். காத்ரீன் என் மேல் கோபமாக இருப்பார் ஏனெனில் அவரை கயிறு கட்டி நிறையகாட்சிகளில் தூக்கி, தொங்க விட்டு ...
எமிஜாக்சன் அம்மா ஆனார்..!

எமிஜாக்சன் அம்மா ஆனார்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  மதராச பட்டினம் படம் மூலமாக தமிழில் நுழைந்து பின்னர் ரஜினி ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்த எமிஜக்சன் காதலில் விழுந்தார். திருமணத்திற்கு முன் கர்ப்பம் அடைந்ததை வெளிப்படையாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். கர்ப்பிணி ஆக இருந்த போதே திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கர்ப்பிணி ஆக இருக்கும் போது வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார். இப்போது குழந்தை பிறந்து எமி ஜாக்சன் அம்மா ஆனார். ஏஞ்சல் பிறந்திருக்கிறான் என டிவிட் செய்து குழந்தையை மார்போடு அணைத்திருக்கும் போட்டோவையும் வெளியிட்டார்.    ...