ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

நடிகைகள்

“வந்தா ராஜாவாதான் வருவேன்” ரசிகன் கொடுக்கும் காசுக்கு குறை வைக்க மாட்டான்..! – கோடங்கி விமர்சனம்

“வந்தா ராஜாவாதான் வருவேன்” ரசிகன் கொடுக்கும் காசுக்கு குறை வைக்க மாட்டான்..! – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வழக்கமான இயக்குனர் சுந்தர்.சியின் படம். சிம்புவின் நடிப்பை மீட்டர் தாண்ட விடாமல் பார்த்துக் கொண்டதில் சுந்தர்.சி மீண்டும் ஜெயித்திருக்கிறார்.விமர்சனத்திற்கு போவதற்கு முன்பு லைட்டா கதை சொல்லிட்டு போகலாம்… வெளிநாட்டில் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு அதிபதி நாசர். அவருடைய மகன் சுமன், பேரன் சிம்பு. நாசரின் விருப்பத்தை மீறி ஒரே மகளான ரம்யாகிருஷ்ணன் தன்னை விரும்பிய பிரபுவை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வருவார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாசர் ஆத்திரத்தில் மகளை அடித்து விரட்டுவதோடு, பிரபுவை துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். ஆசை மகளின் அத்தனை பொருட்களையும் தீயில் போட்டு எரித்து விடுகிறார். அப்படி வீட்டை விட்டு வெளியேறிய ரம்யாகிருஷ்ணனுக்கு கேத்ரின் தெரேசா, மேக்னா ஆகாஷ் என இரண்டு மகள்கள். பிரபு பிரபல வக்கீல். நாசருக்கு மீண்டும் மகளை பார்க்க வே...
உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே 22 ரிலீஸ்..!

உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே 22 ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், நடிகர்கள், நடிகைகள்
கண்ணே கலைமானே' படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாவதையொட்டி, ஒரு தயாரிப்பாளராக, நடிகராக உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். ஏற்கனவே படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததில் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளார். நடிகர் மற்ற தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "இந்த படத்தின் எல்லா கிரெடிட்டும் இயக்குனர் சீனு ராமசாமியை தான் சாரும். நாம் கிராமப்புறத்தை, மக்களை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ  நேட்டிவிட்டி திரைப்படங்களை  பார்த்திருக்கிறோம். என்றாலும், சீனு ராமசாமி சார் எப்போதும் தனித்துவமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் மோதல்கள் உண்மையான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. எதிர்காலத்தில் சீனு சார் படங்களில் நடிக்கிறேனோ இல்லையோ, ஆனால்  அவரது ஸ்கிரிப்டை முதல் ஆளாக கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் அதுவே ஒரு...
தமிழுக்கு வரும் விஜய் தேவர்கொண்டாவின்  “அர்ஜுன் ரெட்டி”

தமிழுக்கு வரும் விஜய் தேவர்கொண்டாவின் “அர்ஜுன் ரெட்டி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க No.1 , பிஸினஸ்மேன், ஹலோ மற்றும் தெலுங்கு மலையாளம் உட்பட பல மொழிகளில் படங்களை தயாரித்த ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி தயாரிக்கும் புதிய படம்  “ அர்ஜுன் ரெட்டி “ தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, தமிழில் நோட்ட படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவர்கொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி  நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி   ஸ்ரீனிவாச ரவீந்திரா இயக்குகிறார். படம் பற்றி தயாரிப்பாளர் A.N.பாலாஜி கூறியதாவது.. தெலுங்கில் “ துவாரகா “ என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற  படமே தமிழ் “ அர்ஜுன்ரெட்டி “ என்ற பெயரில் தயாரித்துள்ளோம். அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் தெலுங்கில் வெளியான வ...
கன்னித்தீவு காப்பாற்ற போராடும் 4 ஹீரோயின்கள்..!

கன்னித்தீவு காப்பாற்ற போராடும் 4 ஹீரோயின்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
மக்களுக்காக போராடும் நான்கு பெண்களின் கதை ‘கன்னித்தீவு’! பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு நிகராக ’கன்னீத்தீவு’ படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள்! த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், கன்னித்தீவு என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர் அதோடு கன்னித்தீவு என்றாலே அட்வெஞ்சர் என்பதாலும் இந்தப்பெயரை படத்திற்கு வைத்தோம். அதோடு படத்தில் நான்கு பெண்கள் இருப்பதால் இந்தப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். கன்னித்தீவு பெயருக்கு பொருத்தமாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஒ...
லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தி ரசிகர்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன்..!

லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தி ரசிகர்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
மக்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி - டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.!தன்னுடைய 6 வயதில் தொடங்கிய இசை பயணத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளார் நடிகை, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவரான ஸ்ருதி ஹாசன்.இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களை கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் (Troubadour) எனும் இசைக்கட்சேரி இடத்தலும் சமிபத்தில் பாடினார். இந்த வருடம் வெளிவர இருக்கும் அவரது சில சிங்கில் டிராக் பாடல்களை அவர் இந்நிகழ்ச்சியில் பாடினார்.உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்களில் சிலராக கருதப்படும் பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றார் " The Troubadour  " எனும் இவ்விடத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகழ்பெற்ற அரங்கு1954-ல் ஒரு Coffee House-ஆக தொடங்கப்பட்டது. தி நெட் ( The ...
நமீதா பட இயக்குனருக்கு கல்தா… ஹீரோவே இயக்குனர் ஆக மீண்டும் களமிறங்கினார்..!

நமீதா பட இயக்குனருக்கு கல்தா… ஹீரோவே இயக்குனர் ஆக மீண்டும் களமிறங்கினார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அகம்பாவம் படத்தின் இயக்குனர் வெளியேற்றம் - இரண்டாவது முறை இயக்குனராக களமிறங்கும் தயாரிப்பாளர் வாராகி ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் `அகம்பாவம்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நமீதா நடிக்கும் முதல் படம் இது. பெண் போராளிக்கும், ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை படமாக உருவாக்கி வருகிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, வில்லனாக நடித்து தயாரித்தும் வருகிறார் வாராகி. ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ் இயக்கி வந்தார். தற்போது இப்படத்தில் இருந்து ஸ்ரீமகேஷ் வெளியேற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் வாராகி கூறும்போது, ‘இயக்குனர் ஸ்ரீமகேஷ், பட வாய்ப்பு இல்லாமல் மதுவுக்கு அடிமையாகி இருந்தார். அவருடைய வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த, இப்படத்தை ...
96′ ஜானுவாக 99ல் நடிப்பது பாவனா…  சுடிதார் கலர் மட்டும் மாறிப்போச்சி…

96′ ஜானுவாக 99ல் நடிப்பது பாவனா… சுடிதார் கலர் மட்டும் மாறிப்போச்சி…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பிரேம் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மெஹா ஹிட் ஆன படம் '96'. பள்ளிப்பருவத்தில் அரும்பிய காதலையும், 22 ஆண்டு கழித்து அதன் நினைவுகளையும் உணரும் காதல் கதையாக '96' திரைப்படம் உருவாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, பள்ளிப்பருவ கதாபாத்திரங்களில் நடித்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கிஷான் ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். தமிழில் ஹிட்டான இந்தப் படம், இப்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. அங்கு இதற்கு ' 99' என்று டைட்டில் வைத்துள்ளனர். ப்ரீதம் குபி இயக்கி வரும் இப்படத்தில் கணேஷ் நாயகனாக நடித்து வருகிறார். தமிழில் விஜய்சேதுபதி நடித்த ராம் கேரக்டரில் சில மாற்றங்களை செய்து கணேஷ் நடிக்கிறார். அர்ஜுன் சான்யா இசையமைக்கிறார். இதில் த்ரிஷாவின் ‘ஜானு’ கேரக்டரில் நடிகை பாவனா நடிக்கிறார். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, இ...
“கபடி வீரன்” ஆடியோ விழாவில் நமீதா மச்சானைப் பார்த்து ஷாக் ஆன பாக்யராஜ்..!

“கபடி வீரன்” ஆடியோ விழாவில் நமீதா மச்சானைப் பார்த்து ஷாக் ஆன பாக்யராஜ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
"கபடி வீரன்" பாடல்கள் வெளியீட்டு விழா சுவாரஸ்யம்! ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா ஆசிர்வாதத்துடன் "அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ்" பெருமையுடன் வழங்க ஆக்ஷன் ஸ்டார் அதிரடி அரசு கதை , திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி ஒளிப்பதிவு செய்து , இசையமைத்து இயக்கித் தயாரித்தும் இருக்கும் படம் "கபடி வீரன்". இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா., சென்னை , சாலிகிராமம் பிரசாத் லேப் ப்ரிவியூ திரையரங்கில், ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா , தொழிலதிபர் தமிழ்செல்வன் , நடிகர் பானுச்சந்தர் ,அறிமுக நாயகி காயத்ரி …உள்ளிட்ட இப்படக் குழுவினருடன் திரையுலக வி.ஐ.பிகள் கே.பாக்யராஜ் , ராதாரவி, ஜாகுவார் தங்கம் , நமீதா , 'பவர் ஸ்டார்' சீனிவாசன் , விஜயமுரளி , பெரு துளசி பழனிவேல் … உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய திரைக்கதை மன்னன் இயக்குநர் - நடிகர் கே.பாக்யராஜ் ,...
பரபரப்பான மெஹந்தி சர்க்கஸ் ஆடியோ ரிலீஸ் விழா..!

பரபரப்பான மெஹந்தி சர்க்கஸ் ஆடியோ ரிலீஸ் விழா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவன தயாரிப்பில் ராஜு முருகனின் உதவி இயக்குனரான சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.  இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் ஞானவேல் ராஜா அவர்களின் தந்தை ஈஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச். வினோத், நலன் குமாரசாமி, சிறுத்தை சிவா, மௌனகுரு சாந்தகுமார், எழில், கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபு, 2D ராஜசேகர், பாடகர் விஜய் யேசுதாஸ், சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல், நடிகர் சன்னி ஜி, ரமேஷ் பாபு மற்றும் இப்படக்குழுவினரும் கலந்து கொண்டனர். மாரி செல்வராஜ் : ஜீவா மூலமாக தான் சரவணன் அ...
புது முகங்கள் நடிப்பில் ஆன்மீகவாதி தயாரிக்கும் அரசியல் நையாண்டி படம்..!

புது முகங்கள் நடிப்பில் ஆன்மீகவாதி தயாரிக்கும் அரசியல் நையாண்டி படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சாதிக்கொரு சங்கம் வீதிக்கொரு கட்சி என பெருகி வரும் நாட்டில் தொண்டர்களை விட தலைவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ தான் சர்க்கரை என்று பழமொழி உண்டு. அதே போல் தான் சிலர் ஆளில்லாத ஊரில் எம்.எல்.ஏ. போல் வலம் வருவார்கள். அப்படி ஒரு ஊரில் இருந்த ஒருவரை பற்றிய கதை தான் இது என்று கூறும் இயக்குனர் பகவதி பாலா மேலும் கூறுகையில் இதில் காதல், மோதல் , அடிதடி, அரசியல் நையாண்டி என அனைத்தும் அங்கங்கே உண்டு. "ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ. என்று பெயரிட்டுள்ள இப்படத்தை சி. ராம்தாஸ் தமது ஸ்ரீபெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். நான் கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஒளிப்பதிவு செய்து டைரக்ட் செய்திருக்கிறேன். என்று கூறியுள்ளார். புதுமுகம் செல்வாவுடன் அனிதா ஜோடியாக நடித்துள்ள இதில் ஆர்.சுந்தர்ராஜன். நளினி, வையாபுரி, மீரா கிருஷ்ணன், கிங்காங், கொட்டாச்சி, போண்டா மணி...