கடும் எதிர்ப்பிலும் ரிலீஸ் ஆனதும் கோடிகள் அள்ளும் பத்மாவத்… முதல் நாள் வசூல் மட்டும் 10 கோடி..!
சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கை வரலாறை பின்னணியாக கொண்டு தயாரிக்கப்பட்ட பத்மாவத் படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நேற்று நாடு முழுவதும் திரையிடப்பட்டது.
சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் வெளியாகி உள்ளது. தென் மாநிலங்களில் பிரச்சினை இன்றி திரையான இந்த படம் வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்தது.
ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் இந்த படம் நேற்று வெளியாகவில்லை. உத்தரபிரதேசத்தில் பலத்த பாதுகாப்புடன் இந்த படம் இன்று 2-வது நாளாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
மராட்டியத்தில் 475 தியேட்டர்களில் பத்மாவத் வெளியாகி உள்ளது. மும்பையில் மட்டும் 140 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் நேற்று இந்த படத்திற்கு எதிராக ஆங்காங்கே முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றாலும் இந்த படத்தை பார்க்க ரசிகர்களிடம் ஆர்வம் காணப்ப...









