‘நறுவீ’ கோடங்கி விமர்சனம் 3/5
‘நறுவீ’ கோடங்கி விமர்சனம் 3/5
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஆண்கள் நுழைந்தால் உயிருடன் திரும்பி வர மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். அதே நேரம் அங்கிருக்கும் நிலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, காதல் ஜோடியான விஜே பப்பு - பாடினி குமார் உள்ளிட்ட இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என ஐந்து பேர் காட்டுக்குள் செல்கிறார்கள். அவர்கள் தங்கள் பணியை தொடங்கும் போது, அவர்களைச் சுற்றி பல வினோதமான சம்பவங்கள் நடக்கிறது. ஆபத்தான பகுதிக்குள் நுழைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பல மர்ம முடிச்சுகளோடு மிக சுவாரஸ்யமாக சொல்வது தான் ‘நறுவீ’.
நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் அலக், புதுமுகம் என்றாலும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
விஜே பாபு மற்றும் அவரது காதலியான பாட...









