ஏமாலி ஆபாச படமா இயக்குனர் வி.இசட்.துரை விளக்கம்
லதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வி.இசட்.துரை இயக்கத்தில் சாம்.டி.ராஜ் இசையமைப்பில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஏமாலி’.படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி இருவரும் விதவிதமான தோற்றங்களில் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம்புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
படம் பற்றி விவரித்த இயக்குனர் வி.இசட்.துரை ”“இந்த படத்துக்கு ‘ஏமாலி’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் காதலை ‘டேக் இட் ஈசி’ என்று சாதாரணமாக பார்க்கிறார்கள். காதலர்களிடம் பிக் அப், பார்ட்டி, டேட்டிங், அவுட்டிங், பிரேக் அப் எல்லாம் சாதாரணமாகி விட்டது. அதைத்தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறேன். இந்த ஏமாலி படம் ஒரு பு...









