சொல்லப்படாத கச்சா எண்ணெய் திருட்டு மாஃபியாதையோடு வரும் ‘டீசல்’
’பார்க்கிங்’, ‘ரப்பர் பந்து’ ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தொடர் வெற்றி நாயகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘டீசல்’. பீர் பாடல் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான இப்படம், தீபாவளி பண்டிகை வெளியீடாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்.பி சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் தேவராஜுலு மார்க்கண்டேயன் மற்றும் எஸ்.பி.சங்கர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினம் தாமஸ் இசையமைத்துள்ளார்.
படத்தின் மையக்கரு பற்றி இயக்குநர் கூறிய தகவல் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.
ஆம், இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கச்சா எண்ணெய் திருட்டு மாஃபியா பற்றிய உண்ம...









