வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9
Shadow

செய்திகள்

திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்!

திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.... “ ஹோம்பலே ஃபிலிம்ஸ் சார்பாக, எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் எங்கள் மீது அசைக்க முடியாத அன்பையும், ஆதரவையும் பொழியும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாகவும், நிறைவானதாகவும் இருந்தது- இது உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது. அதற்காக மீண்டும் ஒரு ...
வாகன நெரிசலை குறைக்க சென்னையில் 300 சாலைகளில் புதிய கண்காணிக்கும் கருவி!

வாகன நெரிசலை குறைக்க சென்னையில் 300 சாலைகளில் புதிய கண்காணிக்கும் கருவி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் அணி வகுத்து நிற்கின்றன. இந்த நெரிசலை குறைக்க நவீன யுக்தியை சென்னை போக்குவரத்து போலீசார் செயல்படுத்த உள்ளனர். அதன்படி போக்குவரத்து நெரிசலை நேரடியாக லைவாக கண்காணிக்கும் கருவிகளை முக்கியமான 300 சாலைகளில் பொருத்தி உள்ளார்கள். இதன் மூலம் 900 முதல் 1000 சாலைகளில் நிலவும் போக்குவரத்து நேரிசலை அறிய முடியும். ஆன்லைன் மூலம் இந்த கருவிகள் வழியாக டேட்பிக்கள் சேகரிக்கப்படும். 5 நிமிடங்களுக:கு ஒருமுறை டேட்பிக்கள் பதிவேற்றம் செய்யப்படும். எந்த சாலைகளில் போக்குவரத்து நேரிசல் அதிகமாக காணப்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் வாகனங்களை மாற்று பாதைகளில் போக்குவரத்து போலீசார் திருப்பி விட முடியும். இதற்கு முன்பு ஆங்காங்கே ...
பெண் ஓட்டுனருக்கு ஆட்டோ பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு!

பெண் ஓட்டுனருக்கு ஆட்டோ பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த 'டிரைவர் ஜமுனா' படக் குழு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக் குழு நன்கொடையாக வழங்கியது. இதனை அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் பயனாளிக்கு வழங்கி கௌரவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரி தயாரித்து, இம்மாதம் முப்பதாம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகை வாகனத்தை இயக்கும் ஓட்டுநராக நடித்திருக்கிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை மற்றும் அதன் சு...
சினிமாகாரர்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்… காவி ஒரு கலர் இதை எப்படி ஒரு அமைப்பு சொந்தம் கொண்டாட முடியும் – பதான் சர்ச்சையில் பாஜகவுக்கு பாடம் எடுத்த துரை வைகோ

சினிமாகாரர்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்… காவி ஒரு கலர் இதை எப்படி ஒரு அமைப்பு சொந்தம் கொண்டாட முடியும் – பதான் சர்ச்சையில் பாஜகவுக்கு பாடம் எடுத்த துரை வைகோ

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, politics, செய்திகள், திரைப்படங்கள், வீடியோ
  சினிமாகாரர்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்... காவி ஒரு கலர் இதை எப்படி ஒரு அமைப்பு சொந்தம் கொண்டாட முடியும் பதான் சர்ச்சையில் பாஜகவுக்கு பாடம் எடுத்த துரை வைகோ   https://www.youtube.com/watch?v=tTE8VOuIrWU
முதல் அரையாண்டு சொத்துவரி அபராதம் இல்லாமல் செலுத்த இன்று கடைசிநாள்!

முதல் அரையாண்டு சொத்துவரி அபராதம் இல்லாமல் செலுத்த இன்று கடைசிநாள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள், வணிக கட்டிடங்கள் மூலம் பெறப்படும் சொத்துவரி மாநகராட்சிக்கு முக்கிய வருவாயாக உள்ளது. வருடத்திற்கு 2 முறை அரையாண்டு வீதம் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செப்டம்பர் மாதம் செலுத்தி இருக்க வேண்டும். தற்போது 2-வது அரையாண்டு நடந்து வருகிறது. முதல் அரையாண்டில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் இல்லாமல் கட்ட இன்று (15-ந் தேதி) வரை மாநகராட்சி அவகாசம் கொடுத்து இருந்தது. நாளையில் இருந்து செலுத்த வேண்டிய தொகைக்கு அபராதம் சேர்த்து வசூலிக்கப்படும். இதற்கிடையில் பொதுமக்கள் ஆன்லைன் மற்றும் நேரடியாக சொத்துவரி செலுத்து வருகின்றனர். ஆனாலும் சிலர் இறுதி நாளான இன்று சொத்துவரி செலுத்தினர். மாநகராட்சி சொத்துவரி மையங்களிலும், வங்கிகள் மற்றும் இணைய தளம் வழியாகயும் செலுத்தினார்கள். அபராதத்தை தவிர்க்கும் வகையில் ச...
தவாங் செக்டாரில் சீன ராணுவம் அத்துமீறல் – முறியடித்த இந்தியா ராணுவம்!

தவாங் செக்டாரில் சீன ராணுவம் அத்துமீறல் – முறியடித்த இந்தியா ராணுவம்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீன நடவடிக்கையால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்கவும் இருதரப்பும் அவ்வபோதும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. 300-க்கு மேற்பட்ட வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. கடந்த 9-ம் தேதி இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், மோதலுக்கு பிறகு இரு தரப்பு ராணுவத்த...
நாளை மறுநாள் அமைச்சராக பதவியேற்க்கும் உதயநிதி  ஸ்டாலின்!

நாளை மறுநாள் அமைச்சராக பதவியேற்க்கும் உதயநிதி ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
தி.மு.க. இளைஞரணி செயலாளராக 2-வது முறையாக உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். அப்போதே விரைவில அவ்ருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, நாளை மறுநாள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் என தகவல்கள் வெளியானது. உதயநிதி அமைச்சராகும் அதே நாளில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிகிறது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுதினம் அமைச்சராக பதவியேற்க உள்ளார். வரும் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் தனி அறை ஒன்று தயாராகி வருவதாகவும், நாளை இரவுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன....
மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பரசன்!

மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பரசன்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேவநேரி மீனவர் பகுதி "மாண்டஸ்" புயலால் அதிகளவில் சேதமடைந்த கடலோர பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து அப்பகுதிகளை அமைச்சர் அன்பரசன் இன்று மாலை நேரில் பார்வையிட்டு, சேதமடைந்த சாலைகள் மற்றும் விழுந்த மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார். அப்பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், அருகில் உள்ள புயல் நிவாரண முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்....
டெல்லி மக்கள் வெறுப்பு அரசியலை விரும்புவதில்லை: மாநகராட்சி தேர்தல் முடிவு குறித்து பஞ்சாப் முதல்வர் பேட்டி!

டெல்லி மக்கள் வெறுப்பு அரசியலை விரும்புவதில்லை: மாநகராட்சி தேர்தல் முடிவு குறித்து பஞ்சாப் முதல்வர் பேட்டி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
டெல்லி மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பகல் 12.30 மணி நிலவரப்படி அந்த கட்சி 104 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. மேலும் 31 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது, இதன் மூலம் மொத்தம் 135 வார்டுகளில் அந்த கட்சி வெற்றி பெறும் என தெரிகிறது. டெல்லி மாநகராட்சியை கைப்பற்ற 126 வார்டுகளில் வெற்றி பெற்றால் போதும். இதனையடுத்து 15 ஆண்டு காலமாக பாஜகவின் வசம் இருந்த டெல்லி மாநகராட்சி தற்போது ஆம் ஆத்மி கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. இந்த தேர்தலில் மதியம் 12.30 மணி நிலவரப்படி பாஜக 83 வார்டுகளை வென்று 19 வார்டுகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி பெற்றுள்ள வெற்...
விடுதலை திரைப்பட விபத்து குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியீடு!

விடுதலை திரைப்பட விபத்து குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3-ம் தேதி சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சுரேஷ் என்ற சண்டை கலைஞர் உயிரிழந்தார். ரோப் கயிறு அறுந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். இவரின் இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்து குறித்து விடுதலை பட தயாரிப்பு நிறுவனம் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் அறிக்கை ஒன்றை வெள...