ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 4
Shadow

செய்திகள்

பாரதியார் போல மாறிய கமல் : வைரலாகிய புகைப்படம்

பாரதியார் போல மாறிய கமல் : வைரலாகிய புகைப்படம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அதிமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறார். மக்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டால் ஆட்சியைவிட்டு இறங்குங்கள் என்றும் கருத்து தெரிவித்தார். அத்துடன் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்ட தான் அரசியல்கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறி உள்ளார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே இருந்த தனது புகைப்படததை மாற்றிவிட்டு தற்போது, பாரதியார் போன்று முண்டாசு கட்டி முறுக்கு மீசை தோற்றத்தில் தன்னுடைய புதிய படத்தை புரபைல் பிக்சராக மாற்றி வெளியிட்டிருக்கிறார்....
அன்புச் செழியனை பணப் பிசாசு என  இயக்குனர் கவுதம் மேனன் சாடல்..!

அன்புச் செழியனை பணப் பிசாசு என இயக்குனர் கவுதம் மேனன் சாடல்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்த கொண்ட தயாரிப்பாளர் அசோக்குமார் முடிவு குறித்து இயக்குனர் கவுதம் மேனன் டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘அசோக் உன்னுடைய மரணம் ஈவிறக்கம் அற்ற ஒரு பணப் பிசாசை அடக்கப் பயன்படக்கூடும் என்பதை அறிவேன். ஆனால் நீ உயிரோடிருந்து இந்த போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்பியிருப்போம்’ என குறிப்பிட்டுள்ளார். அன்புச் செழியனை பணப் பிசாசு என கவுதம் குறிப்பிட்டுள்ளார்....
மனைவிக்கு பேட்மின்டன் அரங்கம் பரிசளித்த அஜித்

மனைவிக்கு பேட்மின்டன் அரங்கம் பரிசளித்த அஜித்

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  காதலி அல்லது மனைவிக்கு பிறந்தநாள் வந்தால் காதலனோ, கணவனோ அவருக்கு வைர நெக்லஸ், பட்டுப்புடவை அதைவிட காஸ்ட்லியாக வீடு அல்லது ஆடம்பர கார் பரிசளிப்பதுண்டு. ஒரு நடிகர் தனது மனைவியின் பிறந்த நாளுக்கு பேட்மின்டன் அரங்கம் பரிசளித்திருக்கிறார். அவர் வேறுயாருமல்ல, அஜீத்குமார்தான். அஜீத் மனைவி ஷாலினிக்கு  39வது பிறந்தநாள். திரையுலகினர், தோழிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஷாலினி பேட்மின்டன் வீராங்கனை. மாவட்ட, தேசிய அளவிலான போட்டிகளில் அவர் கலந்துகொண்டிருக்கிறார். குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டுமே இந்த விவரம் தெரியும். ஷாலினிக்கு வித்தியாசமான பரிசளிக்க எண்ணினார் அஜீத். திருவான்மியூரில் உள்ள தனது வீட்டிற்குள்ளேயே சகல வசதிகளுடன் கூடிய பேட்மின்டன் விளையாட்டு அரங்கை அமைத்து அதை பிறந்தநாள் பரிசாக அளித்தார். ஷாலினி, அஜீத் தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். நடி...
மக்கள் ஸ்டார் ஆன ஓவியா

மக்கள் ஸ்டார் ஆன ஓவியா

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
மக்கள் ஸ்டார் ஆகிவிட்டார் ஓவியா.ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-3 படப்பிடிப்பில் பிஸியாகஇருக்கிறார். இப்போ எனக்கு ரசிகர்களிடம் இமேஜ் ரொம்பவும்மாறிப்போயிருக்கு. அதுக்காக நான் மாறிட்டேன்னு அர்த்தமில்லை. இதோ இந்தப்படத்துலே கூட பழைய கிளாமர் டால் ஓவியாவை நீங்க பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்

சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  பிப்ரவரி 17-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட 'சிவகார்த்திகேயன் - பொன்.ராம்' படக்குழு முடிவு செய்திருக்கிறது. 'வேலைக்காரன்' படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதைத் தொடர்ந்து, பொன்.ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனோடு நடித்து வருகிறார்கள். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதுவரை 55% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அறிவித்திருக்கிறார்கள். மேலும், ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்...
‘நான் கடவுள்’ நேரத்தில் அஜித்தும் அசோக்குமார் மனநிலையில் இருந்தார்: இயக்குநர் சுசீந்திரன் தகவல்

‘நான் கடவுள்’ நேரத்தில் அஜித்தும் அசோக்குமார் மனநிலையில் இருந்தார்: இயக்குநர் சுசீந்திரன் தகவல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  நான் கடவுள்' நேரத்தில் இந்த அன்புசெழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார் என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்திருக்கிறார். திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அசோக்குமார் தற்கொலை குறித்து பைனான்சியர் அன்புசெழியனை கடுமையாக குற்றச்சாட்டி இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில...
அசோக்குமார் தற்கொலை: அன்புசெழியனை கைது செய்ய மதுரை விரைகிறது தனிப்படை

அசோக்குமார் தற்கொலை: அன்புசெழியனை கைது செய்ய மதுரை விரைகிறது தனிப்படை

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
நடிகர் சசிகுமாரின் உறவினர் அஷோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என புகாரளிக்கப்பட்ட நிலையில் பைனான்ஸியர் அன்புச்செழியனை கைது செய்ய சென்னை தனிப்படை போலீஸார் மதுரை விரைய உள்ளனர். நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்னர் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் கந்து வட்டித்தான் என்றும் பைனான்சியர் அன்புச்செழியனின் மிரட்டல் காரணமாகவே தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியர் அன்புச்செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சசிகுமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீஸார் அன்புச்செழியன் மீது பிரிவு 306 (தற்கொலைக்கு தூண்டியது) வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அன்புச்செழியனை கைது செய்ய சென்னை ...
ஜெ.,அக்டோபர் மாதமே மரணம்: திமுகவைச் சார்ந்த டாக்டர் சரவணன் நீதிபதியிடம் புகார்

ஜெ.,அக்டோபர் மாதமே மரணம்: திமுகவைச் சார்ந்த டாக்டர் சரவணன் நீதிபதியிடம் புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெயலலிதா டிச.5-க்கு முன்பே அக்டோபர் மாதமே மரணமடைந்துவிட்டார், அவரது கைரேகை அவர் மரணமடைந்த பின்னரே எடுக்கப்பட்டது. ஆகவே அதில் நீரோட்டம் இல்லை என திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமியிடம் புகார் அளித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச.5 அன்று மரணம்டைந்தார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜெ.தீபா, ஓபிஎஸ் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர்கள் பலர் புகார் அளித்திருந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் விசாரணையை தொடங்கி உள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த ஆவணங்களை நேரிலோ, பதிவு தபாலிலோ தன்னிடம் அளிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று ஜெ.தீபாவின் கணவர் மாதவன் சில ஆவணங்...
37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவு: ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா

37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவு: ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா செய்ததையடுத்து அவரது 37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஜிம்பாப்வேக்கு 1980-ல் சுதந்திரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 1980-ம் ஆண்டில் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய கூட்டமைப்பு (இசட்.ஏ.என்.யு) கட்சியை ராபர்ட் முகாபே தொடங்கினார். கடந்த 1987-ல் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் கூட்டமைப்பு (இசட்.ஏ.பி.யு) கட்சி முகாபே கட்சியுடன் இணைந்தது. சுமார் 37 ஆண்டுகள் ஜிம்பாப்வே நாட்டை ஆண்ட முகாபே, துணை அதிபர் எம்மர்சனை அண்மையில் பதவி நீக்கம் செய்துவிட்டு தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்க முயற்சி செய்தார். இதற்கு ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 15-ம் தேதி ஆட்சி, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. 93 வயதாகும் அதிபர் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஜிம்பாப்வே நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை அத...
ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினி

ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் ராக வேந்திரராவின் தீவிர பக்தர். இந்த நிலையில், ரஜினிகாந்த் நேற்று கர்நாடகா - ஆந்திர எல்லையில் உள்ள மந்திராலயம் ஸ்ரீராக வேந்திரர் சாமி கோவிலுக்கு சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து வர வேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று ராகவேந்திரர் சாமியை பயபக்தியுடன் வழிபட்டார். அங்கு சிறிது நேரம் அமைதியாக இருந்து தியானம் செய்தார். பின்னர் ராகவேந்திரர் கோவில் மடாதிபதி சுபதேந்திர தீர்த்தசாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அங்கும் ரஜினிக்கு மடம் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. மடாதிபதியுடன் ரஜினி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ராகவேந்திரர் கோவில் மிகவும் பழமையாகிவிட்டது பற்றியும், பக்தர்கள் தங்க விடுதிகள் தேவை என்பது பற்றியும் கேட்டு அறிந்தார். இதையடுத்து ரஜினிகாந்த் மந்திராலயம் ராகவேந்திரர் கோவிலு...