ஆதிராஜனின் “அருவாசண்ட” படத்தில் பாடகியாக ரம்யா நம்பீசன்..!
சிலந்தி, ரணதந்த்ரா படங்களை தொடர்ந்து ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முடித்திருக்கும் படம் “ அருவாசண்ட “
கபடி விளையாட்டையும், கௌரவக் கொலைகளையும் பின்னணியாகக் கொண்ட அதிரடிப் படமாக உருவாகியிருக்கும், இதன் கிளைமாக்ஸ் காட்சி சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக, உணர்வுப் பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிகாகவே சரண்யா பொன்வண்ணனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று படத்தை பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
“ இந்த படத்தில் மூன்று அட்டகாசமான பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இரண்டு பாடல்களை நான் எழுதியிருக்கிறேன்.
வைரமுத்து எழுதிய “ சிட்டு சிட்டுக் குருவி வாலாட்டுதோ “ தொட்டுத் தொட்டு இழுத்து தாலாட்டுதோ “ என்ற பாடலை தரண் இசையில் நடிகை ரம்யா நம்பீசன் அருமையாக பாடியிருக்கிறார் உடன் இணைந்து பாலாஜி ஸ்ரீ பாடியிருக்கிறார். இந்த பாடல் காதலர்களின் இதயங்களில் சிம்மாசனம்...









