தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி விழாவில் மூத்த செய்தியாளர்களை கவுரவித்த அமைச்சர்!
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி திருவிழா(2024) நேற்று மாலை ,மிகப் பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் திரு.மதிவேந்தன் அவர்கள் மற்றும் இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றி பெற்ற லப்பர் பந்து பட ஹீரோ ஹரிஷ் கல்யாண் இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்வில், மூத்த பத்திகையாளர்கள் , கங்காதரன், தேவி மணி, திரை நீதி செல்வம் ஆகியோருக்கு பாராட்டும் பரிசும் வழங்க பட்டது .
நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டு முதன்மையாக வரவேற்பு உரை செயலாளர் கோடங்கி ஆபிரகாம் மற்றும் தலைவர் கவிதா உரையுடன் விழா இனிதே துவங்கப்பட்டது. பத்திரிகை துறையின் மூத்த ந...
“சார்” படத்தின் வெற்றியை, ரசிகர்களுடன் திரையரங்கில் கொண்டாடிய படக்குழு !!
SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக வெளிவந்துள்ள “சார்” திரைப்படத்திற்கு, கிடைத்து வரும் வரவேற்பை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில், திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, சார் பட வெற்றியைக் கொண்டாடியுள்ளது படக்குழு.
கடந்த வாரம் வெளியான “சார்” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கல்வி எனும் ஆயுதம் நம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தையும், கிராமப்புற ஆசிரியர்களின் வலிமிகுந்த தியாகத்தையும், அழுத்தமாக பேசியுள்ள இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்திற்கு தமிழகமெங்கும் திரையரங்குகளின் எண்ணிக்...