சொகுசு கார் வரி ஏய்ப்பு வேலைக்காரன் பட வில்லன் கைது…!
நடிகர் நடிகைகள் சொகுசு கார்களை போலியாக முகவரி கொடுத்து புதுவை போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சொகுசு கார்கள் வாங்கி வேறு மாநிலத்தில் பதிவு செய்து இருந்தாலும் காரை கேரளாவிலும் பதிவு செய்யவேண்டும் என்று அங்கு வாகன சட்டம் உள்ளது. இந்த விவகாரத்தில் நடிகை அமலாபால், பகத் பாசில், சுரேஷ் கோபி ஆகியோர் மீது வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து கேரள அதிகாரிகள் புதுவை போக்குவரத்து அதிகாரிகளுடன் விசாரித்தனர். இந்தநிலையில் மலையாள நடிகர் பகத் பாஷிலும் புதுச்சேரி லாஸ்பேட்டை, புதுப்பேட்டை முகவரியை கொடுத்து காரை பதிவு செய்து இருப்பது அம்பலமாகி உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.
இது போன்ற மோசடியில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி யார், யார் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்து அவர்கள் விசாரிக்க தொடங்கி உள்ளனர். இதனால் நடிகர், ந...









