குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள்! – ஞானவேல்ராஜா சீற்றம்
திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள் நினைக்கின்றனர் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா தெரிவித்துள்ளார்.
பருத்தி வீரன், சில்லுனு ஒரு காதல், சிங்கம், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களை தன் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மூலம் தயாரித்தவர் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவரின் மனைவி நேஹா நேற்றிரவு (மார்ச் 21) ட்விட்டரில், “திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள் நினைக்கின்றனர். அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விடக் கீழ்த்தரமானவர்கள். சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் படுக்கையை பகிரவும் தயங்கமாட்டார்கள். அந்த நடிகைகளின் தகவல்களை நான் விரைவில் வெளியிடுவேன்” என்று தெரிவித்திருந்தார்.
சில மணிநேரங்களில் இந்தப் பதிவை நீக்கிய அவர், பின்னர் ஏன் அந்த பதிவை நீக்கினேன் என்ற விளக்கத்தையும் கூறியுள்ளார். அதில், “நான் வெளியிட்ட ...









