ஸ்ரீதேவி மரணத்தில் மர்மா? – மத்திய அரசு மறுப்பு
பிரபல நடிகை ஸ்ரீதேவி, துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்தபோது, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்பதால், அதில் மர்மம் இருப்பதாகப் பரபரப்பாக பேசப்பட்டது. அதனால், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
ஸ்ரீதேவியின் உடல், துபாய் நகரில் உள்ள மருத்துவக் குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவர் தங்கியிருந்த ஹோட்டலின் குளியலறையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்ததாக துபாய் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் பிறகு, அவரது உடல், இந்தியாவுக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி தனி விமானம் மூலம் வரப்பட்டது. ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் உள்ள அவரது வீட்டிலும், பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்தில...









