செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

அப்பாடா… விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100 படங்கள் ஒருவழியாக இன்று ரிலீஸ்..!

அப்பாடா… விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100 படங்கள் ஒருவழியாக இன்று ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஷால் நடித்து மது தயாரித்த படம் அயோக்யா. இந்த படம் கன்னடத்தில் ஹிட் அடித்த டெம்பர் படத்தின் ரீமேக் என்றார்கள். இந்த நிலையில் படம் கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது. அதன் பின் மே 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென படத்தின் தயாரிப்பாளர் மதுவே பட ரிலீசுக்கு முட்டுக்கட்டை போட்டார். பட தயாரிப்பு செலவு திட்டமிட்டதை விட அதிகம் ஆனதற்கு விஷால் தான் காரணம் அதிகரித்த பட்ஜெட் தொகையை கொடுத்தால் தான் படம் ரிலீஸ் ஆகும் என கூற ரிலீஸ் மீண்டும் சிக்கல் ஆனது. ரிலீசுக்கு முதல் நாள் மாலை தொடங்கி நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாமல் போனதால் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகாமல் போனது. தயாரிப்பாளர் சங்கத்தலைவர் படத்துக்கே இந்த நிலை என கோலிவுட்டில் கடும் விவாதங்கள் நடந்த நிலையில் மீண்டும் பல சுற்று பேச்சுவார்த்தை...
பா.ரஞ்சித் அடுத்த சாய்ஸ் எஸ்.ஜே.சூர்யா..!

பா.ரஞ்சித் அடுத்த சாய்ஸ் எஸ்.ஜே.சூர்யா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  பா.ரஞ்சித் அடுத்த சாய்ஸ் எஸ்.ஜே.சூர்யா..! பா.ரஞ்சித் தயாரிப்பில் இப்போது இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் தினேஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. அடுத்ததாக கலையரசனை வைத்து ஒரு படத்தை தனது பேனரில் தயாரிக்கிறார் ரஞ்சித். அவர் இப்போது ஆதிவாசி பழங்குடியினர் வாழ்க்கையில் மிக பிரபலமாக இருந்த மிர்சா முண்டா வாழ்க்கையை இந்தியில் படமாக்கி வருகிறார். அதை முடித்ததும் தமிழில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ரஞ்சித்.  ...
பாலிவுட் போகிறார் அஜீத் … இயக்குநர் இவர்தான்…

பாலிவுட் போகிறார் அஜீத் … இயக்குநர் இவர்தான்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் அஜீத் எப்போதும் ஒரு படம் முடித்து அதன் ரிசல்ட் தெரிந்த பின் தான் அடுத்த படத்தை ஓகே சொல்வார். இப்போதும் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வையை முடித்திருக்கிறார். மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிக்கலாம் என செய்திகள் கிளம்பியது. அதிலும் அஜீத் நேரடி இந்தி படமாக இருக்க 3 கதைகள் தயாராக இருப்பதாக போனி கபூரும் சொல்லி இருந்தார். அஜீத் தரப்பில் வழக்கமாக ஒரு சிரிப்பு மட்டுமே வந்தது. இப்போது இந்தி படம் ரெடி. இயக்குனரும் ஓகே. கதையும் பக்கா. அறிவிப்பு மட்டுமே பாக்கி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். விஷயம் இதுதான்... நேர் கொண்ட பார்வை வாய்ப்பு வந்த போதே இயக்குனர் விஷ்ணு வர்தன் ஒரு கதையுடன் தலயை சந்தித்து பேசி இருக்கிறார். அந்த கதை பாலிவுட் பக்கா ஸ்டோரியாம். லைன் பிடித்து போக அஜீத் தரப்பில் கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. அதற்கு முன்பாக இயக்குனர் விஷ்ணு வர்...
காதலை சேர்க்கும் யோகிபாபு பிரிக்கும் மொட்டை ராஜேந்திரன்

காதலை சேர்க்கும் யோகிபாபு பிரிக்கும் மொட்டை ராஜேந்திரன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
4 காமெடி நடிகர்களின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'காவி ஆவி நடுவுல தேவி' திரைப்படம். இப்படத்தில் யோகி பாபு காதலை சேர்ந்து வைக்க போராடுபவராக நடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன் காதலை பிரிக்கும் தாதாவாக நடிக்கிறார். மந்திரவாதியாக இமான் அண்ணாச்சி நடித்து வருகிறார். 70 சதவீதம் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸ் ஆகுமாம். ஆரூரான் தயாரிப்பில் புகழ்மணி இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்....
விஷாலுக்கு அக்டோபரில் டும்டும்டும்…!

விஷாலுக்கு அக்டோபரில் டும்டும்டும்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  அரசியல்வாதிகள்தான் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுவார்கள். இப்போது அந்த லிஸ்ட்டில் நடிகர் விஷாலும் சேர்ந்து விட்டார். நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா முடிந்தவுடன் தான் திருமணம் என்று அறிவித்திருந்த நடிகர் விஷால் கட்டிடப் பணிகள் இன்னும் முற்றுப்பெறாத நிலையில் தனது திருமணத் தேதியை அறிவித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் சங்கத்துக்குப் போட்டியிட்ட போது அவர் அளித்த முக்கிய வாக்குறுதியான ‘கட்டிடம் கட்டி முடிக்காம கல்யாணம் கட்டிக்க மாட்டேன்’ என்ற அவரது வாக்குறுதியையும் மீறியிருக்கிறார். தமிழக அரசின் மீது தொடுத்த வழக்குக்காக கோர்ட்டுக்கு வந்தபோது நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் ஏர்கனவே நிச்சயம் செய்யப்பட்ட அனிஷாவுடன்  தனக்கு அக்டோபர் 9ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக அறிவித்தார். ஆனால் நடிகர் சங்க கட்டிடம் முழுமைபெற குறைந்த ...
நான் அவ்வளவு நல்லவன் இல்லை – தனுஷ் ஓப்பன்

நான் அவ்வளவு நல்லவன் இல்லை – தனுஷ் ஓப்பன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தனுஷ் தன் ரசிகர்களுக்கு திடீரென கடிதம் எழுதி வெளியிட்டார். அதில் "என் வாழ்க்கையை மாற்றிப் போட்ட துள்ளுவதோ இளமை வெளியாகி 17 ஆண்டுகள் ஓடி விட்டதா... எல்லாமே நேற்று நடந்தது போல் இருக்கிறது. நடிப்பு என்றாலே என்ன என்று தெரியாமல் வந்த ஒரு சின்னப் பையனை ஆரத் தழுவி ஏற்றுக்கொண்டீர்கள். என் வெற்றியிலும் தோல்வியிலும் கூடவே இருந்து தோள் கொடுத்தீர்கள். என் இதயம் உங்களுக்குச் செலுத்தவேண்டிய நன்றியால் நிரம்பி வழிகிறது. இந்த 17ம் ஆண்டு நிறைவுக்கு வலைதளங்களில் நீங்கள் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச்செய்தி மற்றும் வீடியோக்களால் திக்குமுக்காடிவிட்டேன். நன்றி. மிக்க நன்றி. நான் ஒன்றும் அவ்வளவு சரியான நபர் அல்ல. ஆனால் நீங்கள் செலுத்தும் அளவு கடந்த அன்பால் என்னை இன்னும் கொஞ்சம் சரி செய்துகொண்டு பயணிக்க முயல்கிறேன்’என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் தனுஷ். கடந்த சில வாரங்களில் தனுஷ் ரசி...
டப்பிங் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு

டப்பிங் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் டப்பிங் இனிதே துவங்கியது... பெரும் கொண்டாட்டத்தோடு #குண்டு படத்தை ஆரம்பித்து ஒவ்வொரு தருணங்களையும் , நிகழ்வுகளையும் உண்மையின் பக்கம் நின்று ஜனரஞ்சகமாக அனைவரும் ரசித்து கொண்டாடும் வகையில் ஒரு படைப்பை உருவாக்கி இன்று படத்தின் டப்பிங் பணிகளை துவங்குகிறோம். தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பின் இரண்டாவது தயாரிப்பு தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் ஒரு படைப்பாக இருக்கும் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இயக்குனர் அதியன் ஆதிரை வட தமிழகத்தின் வாழ்வியலை அனைவரும் குடும்பமாக ரசிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறார்....
பேய் இருக்கிறதா ‘அகோரி’ பட விழாவில் பாக்யராஜ் ருசிகர தகவல்..!

பேய் இருக்கிறதா ‘அகோரி’ பட விழாவில் பாக்யராஜ் ருசிகர தகவல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ராஜ்குமார் இயக்கத்தில் ‌ஷயாஜி ஷிண்டே நடித்துள்ள ‘அகோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது:- ‘தமிழக மக்களை நினைத்தால் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்த கட்சிக்காரன் காசு கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு, சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி எண்ணியே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி.பாலா மொழி மாற்றுப் படங்களுக்கான வசனகர்த்தா என்று சொன்னார்கள். ‘புலி முருகன்’ மற்றும் ‘லூசிபர்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி இருப்பதாகச் சொன்னார்கள். நான் ஒரே ஒரு டப்பிங் படத்திற்கு மட்டும்தான் வசனம் எழுதினேன். அங்கு சென்றவுடன் தான் அதில் உள்ள சவால்களும், சங்கடங்களும் புரிந்தன. அதன் பிறகுதான் டப்ப...
சிவகார்த்திகேயன்- பாண்டியராஜ் படத்தில் இணைந்த பிரபலங்கள்..!

சிவகார்த்திகேயன்- பாண்டியராஜ் படத்தில் இணைந்த பிரபலங்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவகார்த்திகேயன்-பாண்டியராஜ் படத்தில் இணைந்த பிரபலங்கள்..! சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து 5 படங்கள் ரெடியாகி வருகிறது. இதில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் முக்கியமான படமாக சன் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படம்தான். சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் பாண்டியராஜ். மெரினா திரைப்படத்தைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியின் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்போது சிவகார்த்திகேயன் மிக பிசியான நடிகராக மாறியிருக்கிறார். அதோடு, வியாபார ரீதியிலும் அவருக்கென தனி மார்க்கெட் உருவாகியுள்ளது. பாண்டியராஜ்- சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில்...
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன்

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். `சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சிந்துபாத்’ திரைப்படம் உருவாகியுள்ளது....