செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

இந்தியன் 2 செட்டில் பலியானவர்களுக்கு லைகா 2 கோடி, கமல் 1 கோடி நிதியுதவி!

இந்தியன் 2 செட்டில் பலியானவர்களுக்கு லைகா 2 கோடி, கமல் 1 கோடி நிதியுதவி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தியன் 2 செட்டில் பலியானவர்களுக்கு லைகா நிறுவனம் 2 கோடி, கமல் 1 கோடி நிதியுதவி ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தின் படிப்பிடில் நேர்ந்துள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் பிஏ மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என மூன்று இறந்துவிட்டனர். 10 பேர் காயம் படுகாயம் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் தமிழ் திரையுலகமே கருப்பு தினமாக மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த துணை இயக்குனர் கிருஷ்ணா பிரபல கார்ட்டூனிஸ்ட் மற்றும் விமர்சகரான மதன் அவர்களின் மருமகன் ஆவார். திரைத்துறையில் உள்ள பல்வேறு பிரபலங்கள் இறந்தவர்களின் கும்பத்திற்கு வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். மேலும் சிலர் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த கு...
மீண்டும் களம் இறங்கும் நவரச நாயகன்!

மீண்டும் களம் இறங்கும் நவரச நாயகன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் 'தீ இவன்'. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத்  படத்தை தயாரித்தவருமான  டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா,  ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிண்ணனி இசை அமைப்பாளராக அலிமிர்சாக் பணியாற்று...
உழைப்பாளர் தினத்தை குறி வைத்த தனுஷின் ஜகமே தந்திரம்!

உழைப்பாளர் தினத்தை குறி வைத்த தனுஷின் ஜகமே தந்திரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  உழைப்பாளர் தினத்தை குறி வைத்த தனுஷின் ஜகமே தந்திரம்! பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்திற்கு ஜகமே தந்திரம் என்று தான் பெயர் வைத்துள்ளனர். மேலும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ள ஜகமே தந்திரம் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி ரிலீஸ் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://youtu.be/PatIIw6AhdM ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லண்டனில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜகமே தந்திரம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் வரும் மே 1-ம் தேதி ரிலீசாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என் சகாக்களை இழந்து விட்டேன் - கமல் உருக்கம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று இரவு நடந்து வந்தது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நிகழ்ந்தது குறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள கமலஹாசன் ” எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என...
ரஜினியின் சாகச நிகழ்ச்சி விரைவில்..!

ரஜினியின் சாகச நிகழ்ச்சி விரைவில்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  டிஸ்கவரி குழும சேனல்களில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இங்கிலாந்தை சேர்ந்த சாகச வீரர் பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார். தமிழ் திரையுலக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும், பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமாரும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பியர் கிரில்சுடன் சாகச பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை டிஸ்கவரி குழும சேனல் செய்தது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடனான சாகச பயணம், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் பந்திப்பூர் தேசிய பூங்காவில் நடந்தது. இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்....
அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக விஜய்சேதுபதி தொடங்கி வைத்த “யூனிவர்செல் லைவ் ரேடியோ’!

அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக விஜய்சேதுபதி தொடங்கி வைத்த “யூனிவர்செல் லைவ் ரேடியோ’!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக விஜய்சேதுபதி தொடங்கி வைத்த "யூனிவர்செல் லைவ் ரேடியோ’!! இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ..?? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும். அப்படிபட்ட இசை பிரியர்களை மகிழ்ச்சிபடுத்த அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்கி உள்ளது. தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் ரேடியோ சேவையை துவக்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த ரேடியோ சேவையை துவக்கி வைத்தார். இதற்காக அந்த குழுவினர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும், அவர்கள் கூறும் போது, ‘எங்கள் குழும தகுதிப்பெற்ற ரேடியோ ஜாக்கிகள் யுனிவர்சல் லைவ் ரேடியோ மூலமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில...
இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்!

இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்! ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சி பூந்தமல்லியை அடுத்த ஈவிபி செட்டுக்குள் எடுக்கப்பட்டு வருகிறது. கலை இயக்குனர் முத்துராஜா பிரமாண்டமான செட் அமைத்து வருகிறார். நேற்று இரவு நடைபெற்ற படப்பிடிப்பின் போது பிரமாண்டமான கிரேன் எதிர்பாராமல் அறுந்து விழுந்து ஒரு உதவி இயக்குனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இயக்குனர் ஷங்கருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அஜீத் நடிக்கும் வலிமை ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டு அஜீத் காயம் அடைந்தார். வலிமை ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதற்கு முன...
என் சக்காளத்தி யாருன்னு தெரியுமா? குஷ்பு வெளியிட்ட ரகசியம்!

என் சக்காளத்தி யாருன்னு தெரியுமா? குஷ்பு வெளியிட்ட ரகசியம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று  ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவ் வெற்றி விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- கதாநாயகி ஐஸ்வர்யா மேனன் பேசும்போது, இயக்குநர் சுந்தர்.சி திறமைவாய்ந்த இயக்குநர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் பணியாற்ற அனைவரும் விரும்புவார்கள். ஆதி பன்முக திறமை வாய்ந்தவர். இப்படத்தின் மூலம் அவர் நல்ல நண்பராகிவிட்டார். இப்படம் வெளியாகி இந்த சில நாட்களில் 7 முறை பார்த்துவிட்டேன். இப்படத்திற்கு கிடைத்த விசிலும், கைத்தட்டலும் ஆதியையே சாரும். மேலும், என்னுடன் நடத்த நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்றார். இயக்குநர் கே.எ...
திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்… ஷாக் ஆன விஜய்!

திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்… ஷாக் ஆன விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்... ஷாக் ஆன விஜய்! விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் அறிவித்த நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஷூட்டிங் போனது. விஜய்சேதுபதி வில்லனாக மோதும் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி கலந்து கொண்டபோது விஜய்சேதுபதி திடீரென விஜய்யை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாராம் வழக்கமாக விஜய்சேதுபதி தனது ரசிகர்களை சந்திக்கும் போதும் ரசிகர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது வழக்கம். அதேபோல விஜய்யையும் கட்டிப்பிடித்து எதிர்பாராதவிதமாக முத்தம் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இந்த சம்பவத்தை பார்த்த படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய்  இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விஜய்சேதுபதிக்கு நன்றி கூறியுள்ளா...
அஜீத்துக்கு ஷூட்டிங்கில் காயம்…?! தள்ளி வைக்கப்பட்ட வலிமை!

அஜீத்துக்கு ஷூட்டிங்கில் காயம்…?! தள்ளி வைக்கப்பட்ட வலிமை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத்துக்கு ஷூட்டிங்கில் காயம்...?! தள்ளி வைக்கப்பட்ட வலிமை! நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் இணைந்திருக்கிறார் அஜீத். இந்த படத்தில் அஜீத் ஜோடி யார், வில்லன் யார் என்பதெல்லாம் அறிவிக்கப்படவில்லை. ஷூட்டிங் மட்டும் நடந்து வந்தது. இந்த நிலையில் வலிமை ஷூட்டிங்கை 2 மாதம் தள்ளி வைத்து விட்டாராம் அஜீத். அஜீத் ஷூட்டிங் நேரம் போக மற்ற நேரங்களில் குட்டி விமானங்களை இயக்கும் ஆர்வம் உள்ளவர். அதோடு பைக் ஓட்டுவது அஜீத்துக்கு ரொம்ப பிடிக்கும். வலிமை படத்திலும் பைக் ரேஸ் காட்சிகள் இடம் பெற்று உள்ளதாம். அப்படி ஒரு காட்சி படமாக்கும் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டதால்தான் வலிமை ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டதாம். ரசிகர்களும் கெட்வில் சூன் தல என சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்து வருகின்றனர். அதே நேரம் அஜீத் காட்சிகள் முடிந்து மற்ற நடிகர்கள...