மேட் இன் கொரியா – திரைப்பட விமர்சனம் 3.5/5
உலகின் பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் பண்பாடு ஆகியன தமிழ்ப்பண்பாட்டுடன் இயைந்திருக்கின்றன என்பது இப்போது வெளிப்படுகிற செய்தி.இங்கிருந்து சுமார் 5000 கிமீ தொலைவில் இருக்கும் கொரியாவின் பண்பாடுகளுக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்கிற ஆழமான தகவலை அழகான காட்சிமொழியுடன் கலந்து கொடுத்திருக்கும் படம் மேட் இன் கொரியா.
தமிழ்நாட்டின் ஒரு மலைப்பாங்கான ஒரு சிறியகிராமத்தில் வசிக்கும் நாயகி பிரியங்கா மோகனுக்கு, தென் கொரிய கலாச்சாரம் மற்றும் கலைகளின் மீது மிகுந்த ஆர்வம்.அதனால் அங்கு செல்லும் கனவை வளர்த்துக் கொள்கிறார்.ஆனால் வாழ்க்கைச் சூழலில் அது நடக்காமல் போகிறது.திடீரென அவருக்கு கொரியா செல்லும் சூழல் நேர்கிறது.மகிழ்வுடன் செல்லவேண்டிய அந்த நாட்டுக்கு துயருடன் செல்லவேண்டிய நிலை.எதிர்பாராதவிதமாக கொரியாவின் தலைநகரான சியோல் (Seoul) நகரத்திற்குச் செல்கிறார்.தெரியாத மொழி, அறிமுகமி...









