மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்
இளைஞர்களை இளையராஜா தனது இசையால் கட்டிப் போட்ட, 1990களில் பயணிக்கும் கதைதான் இப்படம்..
ஊர் ஊராக சென்று தனது தந்தையுடன் சர்க்கஸ் செய்து பிழைப்பு நடத்தி வருபவர் வட நாட்டைச் சேர்ந்த நாயகி மெஹந்தி. இப்படியாக ஒரு முறை கொடைக்கானலில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ குழு அங்கு வருகிறது.
இளையராஜாவின் இசையால் அடிமையாக்கப்பட்ட நமது ஹீரோ ‘ஜீவா’ கேசட் கடை ஒன்றை கொடைக்கானலில் நடத்தி வருகிறார்.
ஹீரோயினை பார்த்ததும் ஹீரோ அவர் மீது காதலில் விழுகிறார். அப்படியும் இப்படியுமாக ஹீரோயினையும் காதலில் விழ வைக்கிறார் ஹீரோ.
கீழ் ஜாதியினரை வீட்டில் கூட அனுமதிக்க மறுப்பவர் தான் ‘ஜீவா’வின் தந்தை மாரிமுத்து. இந்த ஜாதி வெறி கொண்ட தந்தையை மீறி ஜீவா-மெஹந்தியின் காதல் ஜெயித்ததா..?? இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
ஜீவாவாக நடித்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் என்று சொல்லாமல...









