லட்சக்கணக்கான ஆபாச வீடியோக்களை நீக்கிய போர்ன் ஹப் இணையதளம்!
இந்தியாவில் பாலியல் சம்பந்தமான வெப்சைட்களை பார்ப்பதற்கு கடந்த 2018 ல் அரசு தடை விதித்தது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்தன. எனினும் அவற்றிற்கான தடை இன்று வரை தொடர்கிறது. பாலியல் வீடீயோக்களை அதிகளவில் பார்ப்பவர்கள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் இருந்தது. பல்வேறு சமூக பாலியல் குற்றங்களை தவிர்க்கும் பொருட்டும், சிறுகுழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்கும் நோக்கத்துடனும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.
ஆபாச வீடியோக்கள் பல கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் மற்றும் பாலியல் குற்றங்களுக்கும் காரணமாக இருக்கின்றது என்பது நமக்கு நன்றாக தெரியும். எனவே அரசு அத்தடையை விதித்தது. உலக அளவில் பாலியல் தளங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்த போர்ன் ஹப் உட்பட 827 வெப்சைட்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன
இந்நிலையில் போர்ன் ஹப் அதன் வெப்சைட்டில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான ஆபாச...









