வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

உலகம்

6 ஆண்டுகளாக எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டியதுதான் லெபனான் வெடிவிபத்துக்கு காரணமாம்!

6 ஆண்டுகளாக எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டியதுதான் லெபனான் வெடிவிபத்துக்கு காரணமாம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    6 ஆண்டுகளாக எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டியதுதான் லெபனான் வெடிவிபத்துக்கு காரணமாம்! லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஆகஸ்ட் 4 பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது. இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. துறைமுகப்பகுதியே நிலைகுலைந்தது. இந்த கோரவிபத்தில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 டன் அளவிலான வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது. இந்நிலையில், துறைமுக சேமிப்பு...
செப்.15க்குள் உரிமத்தை விற்காவிட்டால் அமெரிக்காவிலும் டிக்டாக் செயலி முடக்கப்படும் சீன நிறுவனத்துக்கு டிரம்ப் கெடு!

செப்.15க்குள் உரிமத்தை விற்காவிட்டால் அமெரிக்காவிலும் டிக்டாக் செயலி முடக்கப்படும் சீன நிறுவனத்துக்கு டிரம்ப் கெடு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
செப்.15க்குள் உரிமத்தை விற்காவிட்டால் அமெரிக்காவிலும் டிக்டாக் செயலி முடக்கப்படும் சீன நிறுவனத்துக்கு டிரம்ப் கெடு! டிக்டாக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் ஒருவேளை டிக்டாக் செயலி தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- டிக்டாக் செயலியை வாங்குவது தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைவர் சந்திய நாதல்லாவுடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். இந்த செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ஆபத்தான ஒன்று. ஆகையால் டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் அமெரிக்க பெருநிறுவனமோ வாங்குவதில் ...
கொரானா தடுப்பூசி பரிசோதனைகள் நிறைவடைந்ததாக அறிவித்த ரஷ்யா!

கொரானா தடுப்பூசி பரிசோதனைகள் நிறைவடைந்ததாக அறிவித்த ரஷ்யா!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  ரஷியாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளன. இதை அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ அறிவித்தார். இதையொட்டி அவர் கூறுகையில், “கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, “அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டிருக்கிறோம். கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை அக்டோபரில் போட திட்டமிடுகிறோம்” என குறிப்பிட்டார். தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஷியா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இதற்கிடையே ரஷியாவில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி புதிதாக 5,482 பேருக்க...
விமான பயணிகளுக்கு கொரானா சிகிச்சை செலவை ஏற்கும் விமான நிறுவனம்!

விமான பயணிகளுக்கு கொரானா சிகிச்சை செலவை ஏற்கும் விமான நிறுவனம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  விமான பயணத்தின்போது கொரோனாவால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு சிகிச்சைக்கான செலவை ஏற்பதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு மருத்துவ செலவாக 1.3 கோடி ரூபாய் வரை வழங்க உள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்படும் 14 நாட்களுக்கும் தினசரி 8,691 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31, 2020 வரை எமிரேட்ஸ் விமானத்தில் பறக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை உடனடியாக பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் விமானத்தில் புறப்பட்ட நாளில் இருந்து 31 நாட்களுக்கு இது செல்லுபடியாகும் என்று விமான நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயணத்தின் போது கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உதவி மற்றும் பாதுகாப்பு பெற ஒரு பிரத்யேக ஹாட்லைனை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் விமான நிறுவனம் கூறி உள்ளது. இந்த மருத்துவ செலவை கோர விரு...
சூடு பிடித்த கேரள தங்க கடத்தல் விவகாரம்… இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தியது அம்பலம்!

சூடு பிடித்த கேரள தங்க கடத்தல் விவகாரம்… இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தியது அம்பலம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  *கேரள தங்கக் கடத்தல் வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை; இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டது அம்பலம்: முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய ரமேஷ் சென்னிதாலா வலியுறுத்தல்* கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த 5-ம் தேதி சில சரக்குப் பெட்டிகள் வந்தன. கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு வந்திருந்த இந்த சரக்குப் பெட்டிகளை, சந்தேகத்தின் பேரில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா ச...
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியது!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியது!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    கொரானா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரானா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர உலகம் முழுவதும் சுமார் 100-க்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் தற்போது வரை சோதனையிலேயே இருந்து வருகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியதாக கூறப்படுகிறது. ஆக்ஸ்போர்டு 3-வது கட்ட பரிசோதனையாக மனித உடலில் தடுப்பூசியை செலுத்தியுள்ளது. இதன் முடிவு வெற்றிகரமாக அமைந்து விட்டால், இங்கிலாந்துதான் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்த நாடு என்ற பெருமையைப் பெறும். 2-ம் கட்ட பரிசோதனையின் முடிவை அடுத்த வாரத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது...
இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கியது… சுனாமி எச்சரிக்கை!

இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கியது… சுனாமி எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கியது... சுனாமி எச்சரிக்கை! வட இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு குஜராத், அசாம்,இமாச்சல் போன்ற பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சூழலில் இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் உடனடியாக வெளியாகவில்லை....
வைரஸ் குறைவதால் தியேட்டர்களை திறக்கும் சீனா…!

வைரஸ் குறைவதால் தியேட்டர்களை திறக்கும் சீனா…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள்
  வைரஸ் குறைவதால் தியேட்டர்களை திறக்கும் சீனா...! உலகையே முடக்கி உள்ள கொரானா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் வைரஸ் பரவத் தொடங்கிய போது மக்கள் கூடும் இடங்களான சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு பகுதிகளும் மூடப்பட்டன. ஆனால் தற்போது சீனாவில் கொரானா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வைரசின் தாக்கம் குறைந்ததையடுத்து, மூடப்பட்டுள்ள தியேட்டர்களை வரும் 20 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க சீன திரைப்பட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியேட்டருக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பார்வையாளர்கள் அனைவருக்கும் காய்ச்சல் உள்ளதா? என சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவர். தியேட்டரில் உள்ள மொத...
முதல்கட்ட வெற்றியால் வைரஸ் தடுப்பூசியின் 2ம் கட்ட பரிசோதனைக்கு ரெடியான ரஷ்யா!

முதல்கட்ட வெற்றியால் வைரஸ் தடுப்பூசியின் 2ம் கட்ட பரிசோதனைக்கு ரெடியான ரஷ்யா!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    முதல்கட்ட வெற்றியால் வைரஸ் தடுப்பூசியின் 2ம் கட்ட பரிசோதனைக்கு ரெடியான ரஷ்யா! உலகம் முழுதும் பல்லாயிரக்கணக்கான மக்களை பலிவாங்கி வரும் கொரானா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சி உலகின் பல நாடுகளில் நடந்து வருகிறது. இந்தியாவிலும் நடந்து வருகிறது. இதற்கிடையே, ரஷியாவில் உள்ள கேமலயா தொற்றுநோய் மற்றும் நுண்உயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், கொரானா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த மாதம் 18-ந் தேதி, மனிதர்களிடம் முதல்கட்ட பரிசோதனை நடத்தியது. அச்சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட பரிசோதனை வெற்றி பெற்றதால் 2-ம் கட்ட பரிசோதனைக்கு ரஷ்யா தயாராகி உள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் கூறியதாவது:- தடுப்பூசியின் திறனை உறுதி செய்வதற்காக, மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை, வரு...
சாத்தான்குளம் படுகொலை சம்பவம் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் – ஐ.நா.விருப்பம்

சாத்தான்குளம் படுகொலை சம்பவம் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் – ஐ.நா.விருப்பம்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  சாத்தான்குளம் படுகொலை சம்பவம் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் - ஐ.நா.விருப்பம் சாத்தான்குளம் தந்தை மகன் கொடூர கொலை வழக்கு தமிழகம் தாண்டி இந்தியா தாண்டி சர்வதேச  அளவில் சிறப்பு கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணை குறித்து தனிகவனம் செலுத்த வேண்டும் என ஐநா மன்றம் பிரதமர் மோடிக்கும், முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி, கவர்னர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியது. நியூயார்க்கில்  ஐநா தலைமை அலுவகலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டர்சின் செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் துஜாரிக்கிடம் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த ஸ்டீபன் துஜாரிக், “சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் மரணம் தொடர்பாக முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.  இது போன்ற மரணங்கள்  தொடர்பாக கொள்கைப்படி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்...